Back
Home » ஆரோக்கியம்
உங்களுக்கு ஹார்மோன் குறைபாடு இருக்கா? அப்போ இதுல ஏதாவது ஒரு உணவை தொடர்ந்து சாப்பிடுங்க..!
Boldsky | 15th Mar, 2019 02:43 PM
 • ஹார்மோன்களின் மாயங்கள்!


  உடலின் இயக்கத்தை சரிவர செய்வதற்கு ஹார்மோன்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆணின் உடலிலும் பெண்ணின் உடலிலும் ஹார்மோன்களின் செயல்திறன் பலவித மாற்றங்களை ஒவ்வொரு பருவத்திலும் ஏற்படுத்தும். இவை தான் உடலின் மூல கருவாகவும் பார்க்கப்படுகிறது.


 • வயதும் ஹார்மோனும்!


  அந்தந்த வயதில் ஹார்மோன்களின் செயல்பாடு மாறுபடும். குறிப்பாக இவை மன நிலை, தூக்கம், உணவு, வாழ்க்கை முறை ஆகியவற்றை பொருத்தே மாறுபடுகிறது.
  இவற்றை 20,30,40 போன்ற பருவ நிலைகளாக நாம் பிரித்து, அதற்கேற்றவாறு உணவுகளை சாப்பிட்டு வரலாம். இந்த வகை உணவுகள் ஹார்மோன் குறைபாட்டை தணிக்கும் என மருத்துவர்கள் விளக்குகின்றனர்.

  MOST READ: உலர்ந்த திராட்சையை இந்த அளவிற்கு மேல் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அபாயங்கள் என்னென்ன?


 • 20'களில்...


  எண்ணங்களும், உடல் செயல்பாடுகளும் ஹார்மோன்களின் காரணத்தால் துள்ளி குதித்து ஓடும் வயது இது. மற்ற பருவத்தை காட்டிலும் இந்த 20-களில் பலவித மாயாஜாலங்கள் நமது உடலில் ஏற்படும். இந்த மாயாஜாலங்கள் சிறப்பாக இருக்க சில உணவுகள் அவசியம்.


 • டார்க் சாக்லேட்


  காதல் ஹார்மோன்கள் கரைபுரண்டு ஓட தொடங்கும் பருவம் இதுதான். இந்த 20'களில் அவசியம் டார்க் சாக்லேட் போன்ற உணவுகளை அவ்வப்போது சாப்பிட வேண்டும்.
  அப்போது தான் கார்டிசோல் என்கிற மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஹார்மோன் சீரான அளவில் உற்பத்தியாகி உங்களுக்கு எந்தவித மன அழுத்தத்தையும் உண்டாக்காமல் இருக்கும்.


 • கிரீன் டீ


  20'களில் அவசியம் கடைபிடிக்க வேண்டிய பழக்கம் இது. பால், காபி போன்றவற்றை தவிர்த்து கிரீன் டீயை குடித்து வரலாம்.
  இவை உடலுக்கு அதிக வலுவையையும், சுறுசுறுப்பையும் உண்டாக்கும். கூடவே மூளையின் செயல்திறனை சீராக வைத்து அதிக படியான ஆற்றலையும் இது ஏற்படுத்தும்.


 • இலவங்கபட்டை


  மசாலா பொருட்களில் இலவங்கப்பட்டையை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. இது உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து இன்சுலின் போன்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இதனால் இந்த பொருட்களை 20'களின் பருவத்தில் இருப்போர் அதிகம் சேர்த்து கொள்ளலாம்.

  MOST READ: கேரளத்து பெண்கள் இவ்வளவு வசீகரிக்கும் அழகுடன் இருக்க இந்த 2 பொருட்கள் தான் காரணமாம்..! • 30'களில்...


  துள்ளி குதித்து ஓடிய ஹார்மோன்கள் சற்றே இளைப்பாற கூடிய பருவம் தான் 30 வயதுக்கு மேற்பட்டது. இவர்கள் அவசியம் வைட்டமின் டி, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், கொலஸ்ட்ரால் குறைந்த உணவுகள் முதலியவற்றை எடுத்து கொள்வது சிறந்தது.


 • முட்டை


  30'களில் முட்டை போன்ற புரதசத்து, வைட்டமின்கள் அதிகம் கொண்ட உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இவை எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரித்து, இதய நோய்கள், புற்றுநோய்கள், எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற அபாயங்களில் இருந்து உங்களை காக்கும்.


 • கீரை வகைகள்


  அதிக அளவில் பச்சை கீரைகளை உட்கொள்ள வேண்டிய வயது இது. அப்போது தான் இன்சுலின் குறைபாட்டை தடுத்து, டைப் 2 சர்க்கரை நோய்களை தடுக்க இயலும். இல்லையேல் மோசமான பாதிப்புகள் இந்த வயதிலே உண்டாக கூடும்.

  MOST READ: இரவில் மட்டும் இதையெல்லாம் செய்யவே கூடாதாம்! மீறினால் பின் விளைவுகள் பயங்கரம்!


 • பருப்பு வகைகள்


  ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த பாதாம், வால்நட்ஸ், பிஸ்தா போன்றவற்றை தினமும் சிறிதளவு எடுத்து கொள்ளலாம்.
  30'களில் இது போன்ற உணவுகள் தைராய்டு பிரச்சினைகளை தடுக்கும். மேலும், உடல் எடையை சீராக வைத்து சோர்வை தடுக்கும்.


 • 40'களில்


  ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த பருவத்தில் தான் ஹார்மோன்கள் சார்ந்த பிரச்சினைகள் உண்டாக அதிக வாய்ப்புள்ளது.
  வயது கூட கூட ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் உற்பத்தியும் குறைந்து விடுமாம். ஆதலால், ஹார்மோனை சீராக வைத்து கொள்ளும் உணவுகளை சாப்பிட்டாலே போதும்.


 • யோகர்ட்


  எலும்புகள் வலு பெற கூடிய உணவுகளை சமைத்து சாப்பிட்டாலே போதும். யோகர்ட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும். மேலும் பாராதைராய்டு பிரச்சினையை இவை குறைக்கும்.


 • கொழுப்பு உணவுகள்


  40'களில் அவசியம் சில உணவுகளை தவிர்த்தல் நல்லது. முக்கியமாக கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், சிவப்பு இறைச்சி, இனிப்பு வகைகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லையேல் ஆபத்து உங்களுக்கு தான்.

  MOST READ: உண்மையிலே மிளகாயின் காரத்தன்மை அதன் விதையில் இல்லையாம்! அப்போ வேற எதுல இருக்கு தெரியுமா?
யாருக்கு தான் உடலில் பிரச்சினை இல்லை. சிலருக்கு இதய நோய்கள், சிலருக்கு சர்க்கரை நோய், சிலருக்கு சிறுநீரக கற்கள், சிலருக்கு புற்றுநோய்...இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் பல்வேறு விதமான நோய்கள் உள்ளது. இவற்றில் சில நோய்கள் மிக எளிதில் தடுத்து விடலாம். சில நோய்களை என்ன செய்தாலும் தடுக்க இயலாது. அதே போல இது போன்ற நோய்களில் பல குணப்படுத்த கூடியவை. ஆனால், சில நோய்கள் என்ன செய்தாலும் குணப்படுத்தவே இயலாது.

பெரும்பாலான நோய்கள் உருவாவதற்கு முக்கிய காரணியாக இருப்பது உணவு தான். நேரம் கடந்து சாப்பிடுதல், ஆரோக்கியமற்ற உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், போன்றவை தான் உடலை படாய்படுத்தி எடுக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கு அடித்தளமே இந்த ஹார்மோன்கள் தான். இவை சீரான அளவில் இல்லையென்றால் என்ன செய்தாலும் நோய்களின் பாதிப்பை நம்மால் தடுக்க இயலாது.

உலகில் ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்படுவோர் பல கோடி மக்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வை தர அந்தந்த வயதில் சில குறிப்பிட்ட உணவுகளை அதிக அளவில் எடுத்து கொண்டாலே போதும். ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்ப எந்தெந்த உணவுகள் சீரான ஆரோக்கியத்தை தரும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

   
 
ஆரோக்கியம்