Back
Home » ஆரோக்கியம்
பிணங்களுக்கு பயன்படுத்தும் விஷ தன்மையுள்ள வேதி பொருளை மீன்களில் கலக்கும் அவலம்! உஷார் மக்களே..!
Boldsky | 15th Mar, 2019 04:36 PM
 • மீன் காதலர்கள்!


  இறைச்சி வகை உணவுகளை காட்டிலும் மீன்களின் மீது அதீத காதல் பலருக்கு உண்டு. மீன் கொழும்பு, மீன் வறுவல், மீன் ப்ரை..இப்படி மீனை வைத்து செய்கின்ற எந்த உணவாக இருந்தாலும், கண்டிப்பாக ஒரு பிடி பிடித்து விடுவோம். ஆனால், இதில் பேராபத்தும் கலந்து உள்ளது என்பதை நாம் அறிய மறந்து விட்டது தான் வேதனையே!


 • நச்சு!


  மீனை பல நாட்கள் கெடாமல் பார்த்து கொள்ள ஃபார்மலின்(formalin) என்கிற மிக கொடிய விஷ தன்மை கொண்ட வேதி பொருட்கள் டன் கணக்கில் கலக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையே ஆய்வு மேற்கொண்டு வெளியிட்டுள்ளது.
  பல ஆயிரம் கிலோ கணக்கில் ஃபார்மலின் வேதி பொருட்கள் கடற்கரை பகுதியில் வைத்து, மீன்களில் கலக்கப்படுவதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


 • விஷ தன்மை!


  நாம் நினைப்பது போன்று இந்த ஃபார்மலின் என்பது ஒரு சாதாரண வேதி பொருள் கிடையாது. பிணங்கள் நீண்ட காலம் கெட்டு போகாமல் இருக்க, அவற்றை பதப்படுத்த பயன்படுத்தப்படும் மிக ஆபத்தான வேதி பொருள் தான் ஃபார்மலின்.
  ஆந்திரா, கேரளா, போன்ற பகுதிகளில் இந்த வகை மோசடிகள் அதிக அளவில் நடப்பதாக உணவு பாதுகாப்பு துறை கூறுகிறது.

  MOST READ: உங்களுக்கு ஹார்மோன் பிரச்சினை இருக்கா? அப்போ இதுல ஏதாவது ஒரு உணவை தொடர்ந்து சாப்பிடுங்க..!


 • ஏன் கலக்கின்றனர்..?


  பொதுவாக மீன்கள் கெட்டு போக கூடாது என்பதற்காக 2-3 நாட்கள் ஐஸ் போன்றவற்றை வைத்து பதப்படுத்தி வந்தனர். ஆனால், இந்த ஃபார்மலின் வேதி பொருள் ஐஸ்கட்டிகளை காட்டிலும் மிகவும் விலை மலிவானது. ஆதலால் தான், இதை பயன்படுத்தி மீன்களை பதப்படுத்தி வருகின்றனர்.


 • நிறம் மாறாது!


  இந்த ஃபார்மலின் வேதி பொருளை வைத்து பதப்படுத்தினால் மீன்களின் செதில்கள் அப்படியே பிங்க் நிறத்தில் இருக்கும். அதே போன்று பழுப்பு நிறமாக மீன்கள் மாறுவதையும் இந்த வேதி பொருள் தடுக்கிறது. மேலும், கெட்டு போன வாசத்தை இது முற்றிலுமாக தடுத்து விடுமாம்.


 • தடை!


  கடந்த ஆண்டு இது போன்ற மோசடிகளை செய்யும் கும்பலை உணவு பாதுகாப்பு துறை அதிகரிகள் கையும் களவுமாக பிடித்தனர். கேரளா பகுதியில் சுமார் 10,000 கிலோ ஃபார்மலின் வேதி பொருளை கைப்பற்றினர்.
  உணவு பாதுகாப்பு சட்டம், இது போன்ற வேதி பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. ஆனால், இதை மீறியும் பல ஆயிர கணக்கில் இந்த வித மோசடிகள் இன்றும் நடந்து தான் வருகிறது.


 • எவ்வாறு கண்டறிவது?


  நீங்கள் மீன் வாங்கும் போது, கட்டாயம் சிலவற்றை கவனிக்க வேண்டும். குறிப்பாக ஃபார்மலின் வேதி பொருளை கொண்டு மீன்கள் பதப்படுத்தப்பட்டால் கண்டுபிடிக்க வழிகள் உண்டு.
  - மீனில் இருந்து அதிக அளவில் வேதி பொருள் கலந்த வாடை அடிக்கும். சில நேரங்களின் மீன் விற்பனையாளர்கள் மீனை கழி விட்டு விற்றால் இந்த வாடை குறைய வாய்ப்பு இருக்கிறது.
  - இந்த வகை வேதி பொருட்கள் கலந்த மீன்களின் மீது ஈ அல்லது வேறு சில பூச்சிகள் மொய்க்காது.


 • எவ்வாறு கண்டறிவது?


  - மேலும், ஃபார்மலின் பயன்படுத்திய மீன்கள் மிகவும் உறுதியாக வளைக்கும் தன்மையற்று காணப்படும்.
  - மீன்களின் கண்கள் ஒரு வித சாம்பல் நிறத்தில் மாறி இருக்கும்.
  - ஃபார்மலின் பயன்படுத்திய மீன்களின் செதில்கள் மற்றும் வாள்கள் மட்டும் சிதைய தொடங்கி இருக்கும்.

  MOST READ: உலர்ந்த திராட்சையை இந்த அளவிற்கு மேல் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அபாயங்கள் என்னென்ன?


 • ஃபார்மலின் கருவி!


  நாம் வாங்கும் மீன்களின் ஃபார்மலின் கலந்துள்ளதை துள்ளியாகவும், விரைவாகவும் அறிந்து கொள்ள சந்தையில் சில கருவிகள் விற்கப்படுகிறது. இது மிகவும் மலிவான விலையிலே கிடைப்பதாக கூறுகின்றனர்.


 • அபாயங்கள்!


  ஃபார்மலின் கலந்த மீன்களினால் பல வித உடல்நல கோளாறுகள் உண்டாகும். முக்கியமாக புற்றுநோய் ஆபத்து உண்டு. மேலும், இதனால் செரிமான கோளாறு, தோல் நோய்கள், வாந்தி, மயக்கம், சிறுநீரக பிரச்சினை, கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுமாம்.

  ஆதலால், மீன் வாங்கும் போது மிக ஜாக்கிரதையாக பார்த்து வாங்குங்கள் மக்களே!
இப்போல்லாம் எதை சாப்பிடறது, எதை சாப்பிட கூடாது என்கிற லிஸ்டே பெரிய அளவுல போகும் போல. எதை சாப்பிட்டாலும் இந்த நோய் வரும், அந்த நோய் வரும்னு எல்லாருமே சொல்றத பார்த்தா சாதாரண மக்களுக்கு நிச்சயம் பீதி கிளம்பும் தான். அரிசி சாப்பிட்டா அதுல பிளாஸ்டிக் இருக்குங்குறாங்க. கறி சாப்பிட்டா அதுல வேற எதோ விலங்கோட கறி சேர்ந்து விக்கறதா சொல்ராங்க. காய்கறியில இப்போ சத்துக்கள விட விஷ தன்மை தான் அதிகமான அளவுல இருக்காம்.

இதே தான் பழத்திலும்..! இப்படி முக்கால் வாசி உணவு பொருட்கள் இது போன்ற பாதிப்புல இருக்கும் போது, பலருடைய கண்கள் நிச்சயம் மீன் பக்கம் தான் திரும்பும். ஏன்னா, கடல் தாயோட உயிர்கள் இந்த மீன்கள்! முழுக்க முழுக்க இயற்கை உணவாக இது முன்னாடி காலத்துல இருந்துச்சி. ஆனா, இப்போ இதோட தன்மையும் முழுசா மாறி போச்சி.

இருந்தாலும் இன்னைக்கும் மக்கள் கடல் மீன்களை நம்பி வாங்குறாங்க. இதுல கவனிக்க வேண்டியது என்னன்னா... மீன்ள சேர்க்கப்படுகின்ற கெமிக்கல் தான். பல நாட்கள் மீன்கள் கெட கூடாது என்பதற்காக இது பிணத்திற்கு பயன்படுத்தும் சில வகையான கெமிக்கல்கள உபயோகப்படுத்துவதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது.

இப்படிப்பட்ட வேதி பொருட்கள் கலந்த மீன்கள எப்படி கண்டுபிடிக்கிறது என்பதையும்? இதை சாப்பிட்டால் என்னென்ன நோய்கள் உண்டாகும் என்பதையும், இதை எவ்வாறு தடுப்பது என்பதையும் இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

   
 
ஆரோக்கியம்