Back
Home » ஆரோக்கியம்
உடலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்க, இந்த உணவை மட்டும் தொடர்ந்து சாப்பிடுங்க!
Boldsky | 18th Mar, 2019 03:05 PM
 • சக்கரங்கள்


  உடலில் மிக முக்கியமான புள்ளி இந்த 7 வகையான சக்கரங்கள் தான். இவை அடைபட்டால் நமது உடல் எந்தவித செயல்திறனையும் செய்யாமல் போய் விடும்.

  கிட்டத்தட்ட இவை நமது ஆயுட்காலத்தை குறைக்கிறது என்பதை தான் இந்த அடைப்புகள் உணர்த்துகிறது. இதனை அடைப்பில் இருந்து சாதாரண நிலைக்கு கொண்டு வர உணவுகள் இருந்தாலே போதும்.


 • முதல் சக்கரம்


  உடலின் வேர் சக்கரமாக கருதப்படுவது இந்த "மூலத்தார சக்கரம்" தான். இது உடலையும் பூமியையும் இணைக்கும் மிக முக்கிய பாலமாகும். இந்த சக்கரம் தான் நாம் கொண்டுள்ள பயம், தயக்கம், மன பதற்றம் போன்ற நிலைகளை கடக்க முதல் காரணம்.

  இதை சீராக வைக்க ஆப்பிள், மாதுளை, பீட்ரூட் போன்ற உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் நல்லது.

  MOST READ: பொடுகை உடனடியாக போக்கி, முடி உதிர்வை தடுக்க நெய்யுடன் இதை கலந்து தடவுங்க! • இரண்டாம் சக்கரம்


  ஸ்வஸ்திசனம் என்றழைக்கப்படும் இந்த சக்கரம் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். நமது உடலில் ஆற்றலை உற்பத்தி செய்ய கூடிய சக்கரம் இது தான். மேலும், ஹார்மோன் குறைபாடு, உளவியல் ரீதியான பிரச்சினைகள் போன்றவற்றை தீர்க்க இந்த சக்கரம் உதவும்.
  எனவே, கேரட், ஆரஞ்சு பழம், பூசணி முதலிய ஆரஞ்சு நிற பழங்களை சாப்பிட்டு வந்தாலே இதற்கான பலன் கிடைக்குமாம்.


 • மூன்றாம் சக்கரம்


  மஞ்சள் நிறத்தில் இருக்க கூடிய சக்கரம் தான் இந்த மணிப்புரா சக்கரம். உங்களது தன்னம்பிக்கை, சுய ஆற்றல், சுய மதிப்பீடு போன்றவற்றை கட்டுப்படுத்துவது இந்த சக்கரம் தான். இந்த சக்கரத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க மஞ்சள் நிற பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டால் போதும்.


 • நான்காம் சக்கரம்


  அநாஹத்தா என்பது தான் நான்காவது சக்கரமாகும். இது பச்சை நிறத்தை குறிக்கும் சக்கரமாகும். மன ரீதியான கூறுகளை கட்டுப்படுத்துவது இந்த சக்கரம் தான்.

  அடைபட்டுள்ள இந்த சக்கரத்தை விடுவிக்க பச்சை காய்கறிகளான ப்ரோக்கோலி, பட்டாணி, காலே போன்றவற்றை சாப்பிட்டு வரலாம்.

  MOST READ: இப்படி இருக்குற பானை வயிறை 2 வாரங்களில் தேனை கொண்டு குறைப்பது எப்படி?
 • ஐந்தாம் சக்கரம்


  தொண்டை பகுதியை மையமாக கொண்டுள்ளது தான் இந்த சக்கரம். இது நீல நிறத்தில் இருப்பதால் இதில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் மற்றும் பாதிப்புகளை தீர்க்க நீல நிற பழங்கள் உதவும். முக்கியமாக அத்திப்பழம், ப்ளூபெரி, ப்ரூன்ஸ் போன்றவை பயன்படும்.


 • ஆறாம் சக்கரம்


  மூன்றாம் கண் சக்கரம் என்றே இந்த சக்கரத்தை அழைப்பார்கள். இது ஊதா நிறத்தை குறிக்கிறது ஆதலால், ஊதா நிற உணவுகள் இதற்கு ஏற்றதாகும்.

  ஆழ்மன ஆற்றல், மன அழுத்தம், மன குழப்பங்கள் போன்றவற்றிற்கு தீர்வை தரும். இதற்கு திராட்சை, பிளாக்பெரி, ப்ளம்ஸ், முதலிய உணவுகளை சாப்பிட்டு வந்தாலே போதுமாம்.


 • ஏழாம் சக்கரம்


  சஹாஸ்வரா சக்கரம் தான் ஏழாவது சக்கரமாகும். இது வெள்ளை அல்லது ஊதா நிறத்தில் காணப்படும். மன மகிழ்ச்சி, அறிவு திறன், ஆரோக்கியமான உடல் ஆகியவற்றை வழங்குவது இந்த சக்கரம் தான். இதற்கு சூரிய ஒளி அல்லது தூய காற்றுள்ள பகுதி தான் சிறப்பான தீர்வை தரும்.


 • கட்டுப்பாடுகள்


  7 சக்கரங்களையும் யார் அடக்கி ஆள்கிறார்களோ, அவர்களால் நிச்சயம் எல்லா வகையான செயலையும் செய்ய இயலும். ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை அந்தந்த கால நேரத்தில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் இருக்கும்.

  MOST READ: தூங்க போகும் முன் இளநீர் குடிங்க! அப்புறம் பாருங்க என்னவெல்லாம் நடக்குதுனு..!
நமது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது மிக சுலபமான விஷயம் தான். என்றாலும் அதற்கான தெளிவான உணவு கட்டுப்பாடும், சீரான உடல் நிலையும் மிக அவசியமாகும். மனித உடலை ஆட்டி படைக்க கூடிய ஆற்றல் சக்கரங்களுக்கு தான் உள்ளது. நமது உடலில் இருக்க கூடிய பல சக்கரங்களில் மிக முக்கியமானது 7 சக்கரங்கள் மட்டுமே. வலுவான உடலை பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு சக்கரங்கள் உதவும்.

சக்கரங்களை நமது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள நமக்கு தேவைப்படுவது உணவுகள் தான். குறிப்பாக ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒரு சிறப்பான பழம் மற்றும் காய்கறி உதவுகிறது. 7 வகையான சக்கரங்களையும் சுறுசுறுப்புடன் வைத்து கொள்ள இந்த 7 வகையான உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் என இயற்கை மருத்துவம் கூறுகிறது. இனி 7 வகையான சக்கரங்களுக்கு தேவையான உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

   
 
ஆரோக்கியம்