Back
Home » ஆரோக்கியம்
சீனர்கள் இந்த புதுவித உப்பை ஏன் உணவில் சேர்க்கறாங்க தெரியுமா? இதில் மறைந்துள்ள இரகசியம் என்ன..?
Boldsky | 18th Mar, 2019 05:35 PM
 • சீன கலாச்சாரம்


  இந்திய உணவு முறையில் எப்படி மசாலாக்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறதோ, அதே போன்று சீன கலாசாரத்தில் இந்த சூப்பர்சால்ட் தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

  ஒரு வகையான வசீகர ருசி இந்த உப்பில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை சீனர்கள் பயன்படுத்துவதற்கு சில காரணிகள் உண்டு.


 • என்ன உப்பு?


  சீன வகை உணவுகளில் பெரும்பாலும் "அஜினோமோட்டோ" என்கிற உப்பு வகை சேர்க்கப்படும். இதை ஆங்கிலத்தில் Monosodium glutamate என்று கூறுவார்கள். இது ஒரு புது வித ருசியை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளதாக உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், இதில் பல பாதிப்பு உள்ளதாக வதந்திகள் உள்ளன.

  PC: Dynomat


 • வதந்திகள்


  பொதுவாக அஜினோமோட்டோ சேர்த்த உணவுகளை சாப்பிட்டால் மோசமான நோய்கள் உடலில் உண்டாகும் என பலரும் கருதுகின்றனர்.

  மிக முக்கியமாக தோல் நோய்கள், நெஞ்சு வலி, தலை வலி, மயக்கம் முதலிய பாதிப்புகள் இதனால் ஏற்படுகிறது என கூறப்படுகிறது. ஆனால், உண்மை என்ன தெரியுமா?

  MOST READ: தூங்கும்போது விந்து வெளியேறுவதை தடுக்க, இரவில் தேனுடன் இதை கலந்து சாப்பிட்டால் போதும்!
 • ஆய்வு!


  1968 ஆம் ஆண்டு முதல் தான் இந்த வகையான வதந்திகள் அஜினோமோட்டோ உப்பின் மீது பரவி வந்தது. அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி American Chemical Society) இதை ஆய்வு செய்து, இந்த உப்பை சீரான அளவில் எடுத்து கொண்டால் பாதிப்பில்லை என கூறி விட்டது.


 • பாதிப்புகள்


  இந்த உப்பை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மட்டுமே பாதிப்பு உண்டாகும். அத்துடன் இதை அதிக அளவில் எடுத்து கொண்டால் சில பாதிப்புகள் சிலருக்கு ஏற்பட கூடும் என இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

  மற்றபடி இதை உணவில் சேர்த்து சாப்பிடும் போது எந்தவித பாதிப்பும் இருக்காதாம்.


 • சீன உணவுகள்


  சீனர்கள் இந்த வகை உப்பை உணவில் சேர்ப்பதற்கு சில காரணங்கள் உள்ளதாம். இந்த அஜினோமோட்டோ உப்பை உணவில் சீரான அளவு சேர்த்து சாப்பிட்டால் பசியின்மையை போக்கி விடுமாம். அத்துடன் உடல் எடை கூடும் பிரச்சினையையும் இது குறைக்குமாம்.


 • செரிமான கோளாறுகள்


  இந்த வகை உப்பை உணவில் சேர்த்து கொள்வதால் செரிமான கோளாறு நீங்கும். மலச்சிக்கல், அஜீரண பிரச்சினை உள்ளோர்க்கு இது சிறந்த தீர்வை தரும்.
  இந்த உப்பை மிதமான அளவு சீனர்கள் எல்லா வித உணவுகளிலும் சேர்ப்பார்களாம். இது கூட இவர்களின் நீண்ட ஆயுளுக்கும், அதிக ஆரோக்கியத்திற்கும் முக்கிய காரணம் என பலர் பேசுகின்றனர்.

  MOST READ: உடலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்க, இந்த உணவை மட்டும் தொடர்ந்து சாப்பிடுங்க..!


 • வயதானவர்களுக்கு


  50 வயதுக்கும் மேற்பட்டோர் இந்த வகை உப்பை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் நல்லது தான் உடலுக்கு நடக்குமாம். வயதான காலத்தில் நமது நாக்கில் உள்ள சுவையை தர கூடிய உணரிகள் கொஞ்சம் கொஞ்சமாக அதன் செயல்பட்டை இழந்திருக்கும். இதை தடுக்க இந்த உப்பு இவர்களுக்கு உதவுகிறதாம்.


 • தீர்வு!


  உணவு விஷயத்தில் நாம் நிச்சயம் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும். அதற்காக, கண்ட வதந்திகளை நம்புவது தான் தவறு.
  உணவை பற்றிய வதந்திகளை எப்போதுமே ஒரு முறைக்கு பல முறை பரிசோதித்து விட்டு அதன் பின் கடைபிடித்தால் நல்லது.
ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தனித்துவமான உணவு முறை இருக்கத்தான் செய்கிறது. சில நாடுகளின் உணவு முறை பல மக்களாலும் ஏற்கப்பட்ட ஒன்றாக இருந்து வருகிறது. சிலரின் உணவு முறைகள் உலக அளவில் நம்பர் 1 இடத்தை பெற்றுள்ளது. எப்படி இந்திய உணவில் சில மசாலா இரகசியங்கள் ஒளிந்துள்ளதோ அதே போன்று மற்ற நாடுகளின் உணவு முறையிலும் பல வித இரகசியங்கள் ஒளிந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதுவும் இன்றைய கால கட்டத்தில் பெரும் அளவில் பிரபலமாக உள்ள சீன உணவுகளை உதாரணத்திற்கு சொல்லலாம். சீன வகை உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிடுவோரே இன்று அதிகம். இதன் ருசியை ஒரு முறை சுவைத்து விட்டால் இதற்கு நிச்சயம் நாம் அடிமை தான். நூடுல்ஸ், ஷவர்மா, தந்தூரி, கபாப், ரோல்ஸ்...இப்படி பல்வேறு உணவுகளை அடுக்கி கொண்டே போகலாம்.

சீன உணவுகளுக்கு நாம் அடிமையாக இருப்பதற்கு ஒரு வகையான உப்பு தான் காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன. உண்மையிலே அப்படி இந்த உப்புக்குள் என்னதான் இருக்கிறது? சீனர்கள் இந்த உப்பில் மறைத்துள்ள இரகசியம் என்ன? இதனால் கிடைக்கும் பயன்கள் என்ன? போன்ற பல விவரங்களை இந்த பதிவில் அறியலாம்.

   
 
ஆரோக்கியம்