Back
Home » ஆரோக்கியம்
வெயில் காலத்துல எந்த நோயும் வராம இருக்க, இந்த உணவுகளை வாரத்திற்கு 2 முறை சாப்பிடுங்க..
Boldsky | 20th Mar, 2019 04:08 PM
 • நோய்கள்


  வெயில் காலத்தில் உருவாக கூடிய நோய்கள் முதலில் நமது எதிர்ப்பு சக்தி மண்டலத்தை தான் தாக்கம். மேலும், இவற்றின் வீரியம் பெரிய அளவில் ஏற்பட்டு நமது உடலை முழுவதுமாக பாதிக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன.

  வெயில் அதிகமாக இருப்பதால் புற்றுநோய், நீர்சத்து குறைபாடு, வலிப்பு, மூளை பாதிப்பு போன்ற பல பிரச்சினைகள் உருவாகலாம்.


 • வெங்காயம்


  வெயில் காலங்களில் பலரை வாட்டி எடுக்கும் பிரச்சினை நீர் கடுப்பு என்கிற நீர் சுளுக்கு தான். சிறுநீர் வராமல் பாதிக்கப்படுவோருக்கு சிறந்த மருந்தாக வெங்காயம் இருக்கும்.
  அத்துடன் உடலில் உள்ள செல்கள் பாதிக்கப்படாமல் இருக்க சூரிய ஒளியின் தாக்கத்தை இது குறைத்து விடும். ஆதலால், வெங்காயத்தை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

  MOST READ: இந்த பழங்களை வாங்கும் போது, நீங்கள் கட்டாயம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..? காரணம் என்ன • நெய்


  உணவில் அவ்வப்போது நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வெயில் காலத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். அத்துடன் உடல் சோர்வு, நீர்சூளுக்கு, நீர்சத்து குறைபாடு போன்றவற்றையும் இது தடுக்கும் ஆற்றல் கொண்டது. பாரம்பரியமாகவே வெயில் காலங்களில் இதனை உணவில் சேர்ப்பது வழக்கமாகும்.


 • நெல்லி


  வெயில் காலங்களில் எதிர்ப்பு சக்தி குறைபாடு அதிக அளவில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனை தடுக்க ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் சி போன்றவை நிறைந்த நெல்லியை வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டாலோ அல்லது ஜுஸ் போன்று தயாரித்து குடித்தாலோ நல்லது. இது பல்வேறு நோய் தொற்றுக்களை தடுக்கும் ஆற்றல் கொண்டதாம்.


 • இளநீர்


  கோடை வெயிலை சமாளிக்க இளநீர் அற்புதமான உணவாகும். இதில் அதிக அளவில் எலெக்ட்ரோலைட்கள், தாதுக்கள், உள்ளன. இந்த இயற்கை அமிர்தத்தை குடித்து வந்தால் வெயிலினால் உண்டாக கூடிய நோய்களின் பாதிப்பு குறைவு.


 • ஆரஞ்சு


  நீர்சத்து மிகுதியாக இருக்க கூடிய பழங்களில் ஆரஞ்சும் ஒன்று. வைட்டமின் சி அதிக அளவில் இதில் இருப்பதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  அத்துடன் பொட்டாசியம் அளவும் உடலில் உயரும். இதில் அதிக அளவில் எலெட்ரோலைட் இருப்பதால் உடனடி ஆற்றல் உங்களுக்கு கிடைக்கும்.

  MOST READ: சமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ..!


 • துளசி


  வாரத்திற்கு 2 முறை துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக உடலில் உள்ள நச்சு தன்மை கொண்ட அழுக்குகளை சுத்தம் செய்ய துளசி உதவும். அத்துடன் உள் உறுப்புகளின் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் இது குணப்படுத்தும்.


 • தயிர்

  நீச்சத்து குறைபாடு மற்றும் உடனடி ஆற்றலை கொடுக்கும் சிறந்த உணவு தயிர். செரிமான கோளாறுகளை தடுக்கும் அற்புதமான உணவு இது.
  வாரத்திற்கு குறைந்தது 3- 4 முறை தயிரை உணவில் சேர்த்து கொண்டால் வெயில் கால பாதிப்புகள் குறையும்.


 • தர்பூசணி


  வெயில் காலம் என்றால் தர்பூசணி இல்லாமலா இருக்கும். 90% இதில் நீர்சத்து உள்ளதால் இதை அதிக அளவில் எடுத்து கொள்ளலாம். இதனால் நீர் கடுப்பு, நீர்சத்து குறைபட்டு, சோர்வு போன்ற பாதிப்புகள் தடுக்கப்படும்.

  MOST READ: தாம்பத்திய உறவில் ஆண்கள் ஈடுபடாமல் அவதிப்படுவதற்கு, இந்த பத்துல ஏதோ ஒன்னு தான் காரணம்! • மாம்பழம்


  வைட்டமின் எ, சி, பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய ஊட்டச்சத்துக்கள் இதில் அதிக அளவில் இருப்பதால் வெயில் காலங்களில் சாப்பிடலாம்.
  வாரத்திற்கு 1 அல்லது 2 முறை இந்த பழத்தை சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும். அதற்காக அதிக அளவில் சாப்பிட்டால் சூட்டை கிளப்பி கொப்புளங்கள் போன்றவற்றை உருவாக்கி விடும்.
"சுட்டெரிக்கும் சூரியன்...தெறிக்க விடும் அனல் காற்று...மண்டைய பிளக்கும் வெயில்..." அட, இது கவிதை இல்லைங்க..! நாம இப்போ பாத்துகிட்டு இருக்குற பருவ நிலை மாற்றம் தான் இது. பருவநிலை எப்போ மாறும்னு இன்றைய கால கட்டத்துல சரியா யூகிச்சி சொல்ல முடியாத நிலைக்கு தான் நாம தள்ளப்பட்டுருக்கோம். மழை காலம்னு நமக்கு ஒரு அற்புதமான காலநிலை இருந்துச்சு. ஆனா, இது இப்போ முற்றிலுமாக மாறி போயிடுச்சி.

இன்றைய சூழல்ல வெயில் குறைவா அடிச்சாலே அது மிக பெரிய விஷயம் தான். வெயில் காலம் தான் மழை காலத்த விடவும் மோசமான ஒன்னா இப்போ இருக்கு. காரணம், வெயில் காலத்துல வர கூடிய அபாயகர நோய்கள் தான். அம்மை, அரிப்பு, சொறி, புற்றுநோய், நீர்சத்து குறைபாடு போன்றவை பல நோய்கள் வெயில் காலத்தில் தான் பெருமளவு உண்டாகிறது. இவற்றில் இருந்து உங்களை காக்க இந்த 10 உணவுகளை வாரத்திற்கு 2 முறையாவது சாப்பிட்டால் போதும்.

   
 
ஆரோக்கியம்