Back
Home » ஆரோக்கியம்
எடுப்பான உடல் அழகுடன் கேரளத்து பெண்கள் இருப்பதற்கு இந்த ஒன்று தான் காரணம்!
Boldsky | 26th Mar, 2019 04:56 PM
 • சிறப்புகள்


  பொதுவாக இன்றைய கால கட்டத்தில் தமிழக இளைஞர் மற்றும் இளைஞிகளுக்கு கேரள நடிகர் மற்றும் நடிகைகளின் மீது மிகவும் ஆழமான ஈர்ப்பு வந்துள்ளது.
  சமீப காலங்களில் சாய் பல்லவி மீது வந்த இதே ஈர்ப்பு தான் நயன் மீது பல வருடத்திற்கு முன்னரே வந்து விட்டது. இதே போன்று மம்முட்டி, மோகன் லால், துல்கர் சல்மான், நிவின் பாலி போன்ற நடிகர்களையும் சொல்லலாம்.


 • நடனம்


  பெரும்பாலும் கேரள மக்கள் நடனத்தை தங்களது உடல் நலத்தை பாதுகாக்க பயன்படுத்தி கொள்கின்றனர். உடல் சிக்கென்று இருக்கவும், நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்கவும் நடனம் இவர்களுக்கு உதவிக்கிறதாம்.
  பத்தில் 6 கேரள பெண்களுக்கு நன்றாக நடனமாட தெரியும் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.


 • ஆயுர்வேதம்


  கேரள மக்கள் குடிக்கும் நீரில் இருந்து சாப்பிடும் உணவு வரை எல்லாவற்றிலும் ஆயுர்வேதம் உயிர் மூச்சு போல கலந்திருக்கும்.
  இயற்கை முறையிலான உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பயிற்சி ஆகியவை தான் இவர்களின் அதிக ஆரோக்கியத்திற்கு காரணமாம்.

  MOST READ: வீட்டில் உள்ள இந்த 10 பொருட்களில் பயங்கர அமானுஷ்ய சக்திகள் ஒளிந்துள்ளதாம்..! • அரிசி


  கேரளாவில் பயன்படுத்தப்படும் நவார அரிசி பல்வேறு மருத்துவ குணம் கொண்டது. அதே போன்று சற்று அகலமாக இருக்க கூடிய கேரளா அரிசியும் நீண்ட ஆயுளை தர கூடும்.
  இவர்களின் சில பிரதான உணவு முறை தான் எடுப்பான உடல் அழகை இவர்களுக்கு தருகிறது.


 • உணவு வகைகள்


  கேரளாவின் மீன் கறி முதல் அப்பம் வரை எல்லாமே அதிக பிரசித்தி பெற்றவை தான். முக்கியமாக வேக வைத்த அரிசி, காரசாரமான குழம்பு, சாம்பார், அப்பளம், புளியம், புட்டு, மோர் குழம்பு, பாயசம் போன்றவை அதிக ஆரோக்கியம் நிறைந்தவையாக உள்ளது.


 • யோகா


  உடலை சிக்கென்று வைத்து கொள்ள கேரள மக்கள் உடற்பயிற்சியை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். முக்கியமாக யோகா போன்றவற்றை இவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
  யோகாவின் அதீத பயன் இவர்களின் உடலில் நோய்களை உண்டாக்காமல் பார்த்து கொள்கிறது.


 • மசாலா பொருட்கள்


  கேரளா உணவுகள் அதிக ஆரோக்கியம் கொண்டதாக இருப்பதற்கு இவர்களின் மசாலா பொருட்களும் முக்கிய காரணமாகும்.
  சாப்பிட கூடிய உணவுகளில் ஏலக்காய், இஞ்சி, இலவங்கப்பட்டை, மேலும் பல வித மசாலாக்களை இவர்களின் உணவில் சேர்க்கின்றனர்.

  MOST READ: 5 மணி நேரம் தொடர்ந்து 'மாரத்தான் செக்ஸ்'..! உயிரை பறிகொடுத்த பெண்மணி..! காரணம் இதுதான்! • மீன்


  கேரளா மக்கள் கடல் உணவுகளை அதிகம் விரும்பி உண்ணுவார்கள். இதனால் தான் இவர்கள் நீண்ட காலம் இளமையாகவும், சிக்கென்ற உடல் அமைப்புடனும் இருப்பதற்கு ஒரு காரணமாகும். இன்று வரை இவர்களின் உணவில் மீன் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.


 • இறைச்சி


  கேரளா என்றாலே மாட்டிறைச்சி மிகவும் பிரபலமாகும். இதனால் பல நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. கேரள மக்கள் தங்களது உணவில் மாட்டிறைச்சிக்கு பெரும் பங்கை தந்துள்ளனர்.
  அளவாக இதை உணவில் சேர்த்து கொள்வதால் உடல் வலிமை கூடுகிறது. இதுவும் இவர்களின் சிறப்பான உடல் அமைப்பிற்கு முக்கிய காரணமாகும்.

  இதை தவிர வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளது என நீங்கள் நினைத்தால் கமெண்ட்டில் பதிவு செய்யலாம்.
கேரளா என்றாலே கடவுளின் பூமி என்று கூறுவர். ஆனால், சிலர் கேரளாவை தேவதைகளின் பூமி என்றே அழைக்கின்றனர். காரணம், இங்குள்ள அழகு நிரம்பிய பெண்களும் ஆண்களும் தான். மற்ற மாநிலத்து பெண்களுக்கும் ஆண்களுக்கும் கேரளத்து மக்கள் மீது எப்போதும் ஒரு தனி ஈர்ப்பு இருக்கத் தான் செய்கிறது. இது இன்று நேற்று வந்த ஈர்ப்பு கிடையாது.

பல ஆண்டுகளாக கேரள படங்களில் நடக்கும் கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளின் மீது எப்போதுமே ஒரு கண் இருந்தே வருகிறது. இவர்கள் இத்தனை பேரழகுடனும் இருப்பதற்கும், எடுப்பான உடல் வாகுவை பெற்றுள்ளதற்கும் என்ன காரணம் என நீண்ட நாட்களாக ஒரு புதிர் இருந்து வருகிறது. இதற்கு பின் இத்தனை காலமாக மறைந்திருந்த ஒரு இரகசியம் இந்த பதிவின் மூலம் வெளியாக உள்ளது. கேரள மக்கள் இத்தனை சிறப்புடன் இருக்க என்ன காரணம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

   
 
ஆரோக்கியம்