Back
Home » ஆரோக்கியம்
உடம்புலாம் ஒரே வலியா இருக்கா? கவலைப்படாதீங்க... இந்த மசாஜ் மட்டும் பண்ணுங்க...
Boldsky | 24th Apr, 2019 04:13 PM
 • ரோல்பிங் என்றால் என்ன?

  புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக நமது உடல் இயக்கம் தோல்வியுறும் போது முதுகில் வலி உண்டாகக் கூடும். சில நேரங்களில் இந்த வலியால் சோர்வு, உடம்பு பாகங்கள் நேர் கோட்டில் இல்லாமல் முதுகு வளைந்து கூன் ஏற்படும் நிலை ஏற்படும். இந்த நிலை பொதுவாக 40 வயதை அடைந்தவர்களுக்கே அதிகமாக ஏற்படும். இதனால் உடம்பை சமநிலையில் வைத்திருக்க முடியாது.

  எனவே இப்படி இருக்கும் நிலையை சரி செய்ய ரோல்பிங் முறை பயன்படுகிறது. இதில் உடம்புக்கு புவி ஈர்ப்பு விசை திசையில் ஒரு விசை கொடுத்து உடம்பை நேராக்கும் முயற்சியாகும். இப்படி உடம்பை நேராக்கும் போது உடம்பானது பழைய நிலைக்கு வந்து விடும்.

  ரோல்பிங் என்பது கட்டமைப்பு மாற்றத்தின் ஒரு முழுமையான செயல் முறையாகும். அது ஆரோக்கியமான நல்வாழ்வை மட்டுமல்ல, உணர்ச்சி ரீதியிலான ஆரோக்கியத்தையும் தருகிறது. உடம்பின் வடிவமைப்பு, அழுத்தத்தை குறைத்தல், நாள்பட்ட வலி போன்றவற்றை போக்குகிறது. ரோல்ஃபிங் உடம்பின் மையப்பகுதி மீது கவனம் செலுத்துகிறது (உடலில் இணைந்த திசுக்களின் வழியாக இணைத்து நிலைப்படுத்தி உடலை நேராக்குகிறது.


 • நாள்பட்ட முதுகு வலி

  முதுகில் ஏற்படும் நாள்பட்ட அழுத்தம் முதுகு, கழுத்து, தோள்களில் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் முதுகில் தீராத வலி உண்டாகும். இதை கண்டுக்காமல் விட்டு விட்டால் காலப்போக்கில் கூனல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வலியை ரோல்பிங் முறை பயன்படுகிறது. இது பேசியல் தசைகளை தளர்ச்சியாக்கி அதில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது.

  இதற்கு முதுகை நேராக வைத்து நிமிர்ந்து உட்கார்ந்து இருந்தாலே நல்ல பலன் கிடைக்கும். 1/3 பங்கு ஏற்படும் முதுகு வலியே நாள்பட்ட முதுகு வலி யாக மாறி விடுகிறது. ரோல்பிங் முறை மூலம் இநத முதுகு வலியை குறைத்து நோயாளிகளுக்கு திருப்தியை தர முடியும்.

  MOST READ: பப்ஜி கேம் விளையாடி தமன்னாவுக்கு நடந்த கொடுமைய நீங்களே பாருங்க...


 • விளையாட்டு திறனை மேம்படுத்துதல்

  விளையாட்டு வீரர்களுக்கு இந்த ரோல்பிங் முறை மிகவும் சிறந்தது. புவிஈர்ப்பு விசையை பயன்படுத்தி எப்படி நம் உடலை நேராக்க வேண்டும் என்பது அவர்களுக்கு முக்கியமானது. எனவே இந்த ரோல்பிங் முறையை அவர்கள் பயன்படுததி வந்தால் உடல் வடிவமைப்பை ஒன்னு போல் ஆக்கி விடலாம்.

  மேலும் இந்த முறை சுருங்கிய தசை நார்களை விரிவடையச் செய்து எளிதாக அசைவுகளுக்கும்,தசைகள் ரிலாக்ஸிற்கும் பயன்படுகிறது. இதனால் விளையாட்டு வீரர்களால் எப்பொழுதும் எனர்ஜியுடன் செயல்பட முடியும்.


 • டெம்போராமண்புலர் ஜாய்ன்டு சிண்ட்ரோம்

  தாடை மற்றும் தலைப் பகுதியை இணைக்கும் பகுதியில் ஏற்படும் வீக்கம், இறுக்கம் இந்த அழற்சியால் ஏற்படுகிறது. இதனால் தாடைகளை திருப்பும் போது க்ளிக் என்ற சத்தம், வலி, திருப்ப முடியாமை போன்றவை ஏற்படும். எனவே இந்த பிரச்சினையிலிருந்து விடுபட ரோல்பிங் முறை உதவுகிறது. அதிலிருந்து ஒரு எளிதான ரீலிவ்வை தருகிறது.

  MOST READ: வேகன் டயட்ல இருக்கிறவங்க ஸ்வீட் சாப்பிடலாமா? இந்த 5 ஸ்வீட்டும் தாராளமா சாப்பிடலாம்


 • உடல் வடிவமைப்பு, தண்டுவட ஆரோக்கியம்

  தண்டுவட வளைவு பிரச்சினை இருப்பவர்களுக்கு ரோல்பிங் சிறந்த ஒன்று. இந்த ரோல்பிங் முறை தண்டுவட பகுதியில் உள்ள மென்மையான திசுக்களை சரி செய்து ஒட்டுமொத்த தசை நரம்பு மண்டலத்தையும் சரி செய்கிறது. இது பாராசிம்பதடிக் நரம்பு மண்டலத்தை நீட்சியாக்கி தசைகளில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது.
  ஆஸ்துமா மற்றும் சுவாசத்தை மேம்படுத்துகிறது.

  ரோல்பிங் முறை ஆஸ்துமாவிற்கு இயற்கையான தீர்வை தருகிறது. ஆஸ்துமா பிரச்சினை சரி செய்து சுவாசித்தலை மேம்படுத்துகிறது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு சுவாசிப்பின் போது முழு மார்பு விரிவாக்கத்தின் வரம்பைத் தடுக்காததால் மார்பில் உள்ள நரம்புகள்மற்றும் தசைகள் நன்றாக விரிவடைய ரோல்பிங் பயன்படுகிறது.

  ஒழுங்கற்ற மற்றும் தடைப்பட்ட சுவாசம் உடல் நிலையை மோசமாக்கி விடும். எனவே ரோல்பிங் மூலம் இந்த நிலையை சரி செய்து சுவாசித்தலை மேம்படுத்த முடியும் .இதன் மூலம் உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைக்கும் மற்றும் அழுத்தம் குறையும்.

  MOST READ: திருநங்கைகளால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா? அது உண்மையிலே சாத்தியமா?


 • ரோல்பிங் செய்வது எப்படி

  ரோல்பிங் முறை செய்வதற்கு முன்னாடி உங்களுக்கு ஏற்றவாறு ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். இதை செய்ய 1-2 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். ரோல்ஃபிங் செய்வதற்கு பயிற்சியாளர் உங்களுக்கு உதவியாக இருப்பார். வலியுள்ள பகுதிகளை மூவ் பண்ணி உங்களுக்கு உதவி செய்வார். நடத்தல், வளைத்தல், தூக்குதல், மூச்சை இழுத்து விடுதல் போன்றவற்றை செய்ய சொல்லுவார்கள்.


  ரோல்ப் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஒருங்கிணைப்பு பயிற்சி 10 பயிற்சி வகுப்புகளை கொண்டுள்ளது. இதை மூன்றாக பிரித்து செய்கின்றனர்.

  MOST READ: உருளைக்கிழங்கு மட்டும் போதும் இந்த எல்லா பிரச்சினைக்கும் தீர்வு கெடச்சிடும்... எப்படி அப்ளை பண்ணணும்


 • சீசன் 1-3

  இந்த சீசனில் இணைப்புத் திசு கொண்டு தரைக்கு சமமாக உடல் பாகத்தை அமைக்க வேண்டும். இது "சிலீவ் சீசன்" என்று அழைக்கப்படுகிறது. முதல் சீசன் மூச்சுப் பயிற்சி, நுரையீரல் விலா எலும்பு மற்றும் கைகளுக்கு கொடுக்கப்படுகிறது. மேல் கால், ஹாம்ஸ்டிங்ஸ், கழுத்து மற்றும் முதுகெலும்பிஇருந்து தொடங்கப்படுகிறது.
  இரண்டாவது சீசனில் உடம்பை நிலையாக வைக்க வேண்டும். பாதங்கள் மற்றும் கால்களுக்கு கீழே உள்ள தசைகளைக் கொண்டு சமநிலையில் நிற்க வேண்டும்.
  மூன்றாவது நிலையில் தலை, தோள்பட்டை வளையம், இடுப்பு போன்றவை நேர்கோட்டில் இருக்குமாறு புவி ஈர்ப்பு விசையை பயன்படுத்தி நிற்க வேண்டும்.


 • சீசன் 4-7

  இது தான் ரோல்பிங் முறையில் முக்கியமான முறை. இடுப்பிற்கு கீழ் பகுதி மற்றும் தலையின் மேல் பகுதி போன்றவை நிலப்பரப்பை நோக்கி நேராக இருக்க வேண்டும். கால் பகுதியில் உள்ள ஆழ்ந்த திசுக்கள் நல்ல சப்போர்ட்டை கொடுக்கும்.
  சீசன் நான்கில் பாதங்களின் வளைவு பகுதி இடுப்பிற்கு கீழ் பகுதியை நோக்கி கால்களை தூக்க வேண்டும்.

  சீசன் 5 ல் அடிவயிற்று தசைகளை கொண்டு முதுகுப் பகுதியை சமன் செய்ய வேண்டும்.

  சீசன் 6 ல் கால்கள், முதுகுக்கு கீழ் பகுதி, இடுப்பு பகுதி கொண்டு சப்போர்ட் செய்ய வேண்டும்.

  சீசன் 7 ல் தலை மற்றும் கழுத்தை கவனிக்க வேண்டும்.

  சீசன் 8-10

  இந்த சீசனில் பயிற்சியாளர் உங்களுக்கு மெதுவான மூவ்மெண்ட்டை கொடுப்பார். சீசன் 8-9 உங்களுக்கு ஏற்ற முறையை பயிற்சியாளர் தேர்ந்தெடுத்து பயிற்சி அளிப்பார்.சீசன் 10 ல் சமநிலை கற்றுத் தரப்படுகிறது.

  MOST READ: இந்த 5 அறிகுறி இருந்தா அந்த காதல் சத்தியமா கல்யாணத்துல முடியாது... அது என்னென்ன?


 • பக்க விளைவுகள்

  தலைப்பகுதிக்கு ரோல்பிங் செய்யும் போது ஆரோக்கியமான திசுக்களில் எதாவது வலி பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். எனவே ரோல்பிங் முறை செய்வதற்கு முன்னாடி மருத்துவரை அணுகுவது நல்லது. ரோல்ஃபிங் முறை செய்வதற்கு முன் எதாவது பாதிப்பு, தொற்று, காயங்கள் இருப்பதை கவனிக்க வேண்டும். மருத்துவரிடம் இது குறித்து ஆலோசித்து கொள்வது நல்லது.
  ரோல்பிங் செய்யக் கூடாதவர்கள்

  உளவியல் பிரச்சினை உள்ள நபர்கள்
  கர்ப்பிணி பெண்கள்
  தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள்
  இணைப்புத் திசு பிரச்சினை உள்ளவர்கள்
  புற்றுநோய் தாக்கம் உள்ளவர்கள்
  இரத்தக் கட்டுதல் பிரச்சினை உள்ளவர்கள்
  இரத்த அடர்த்தி குறைப்பு மருந்து எடுப்பவர்கள்
  ரோல்பிங் முறையில் ஏற்படும் அசெளகரியம்
  முதன் முதலாக செய்யும் போது வலி அசெளகரியம் ஏற்படலாம்.
  காயங்கள் அல்லது வலியின் அளவை பொருத்து வலி ஏற்படும்.


 • ரோல்பிங் பயிற்சியாளர்

  ரோல்பிங் பயிற்சியாளர் ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்றவாறு பயிற்சி அளிப்பார்கள். அதிக வலி இருந்தால் அதிக அசெளகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் அவர்கள் உங்களுக்கு பழைய நிலையை அடைய மெதுவாக பயிற்சி அளிப்பார்கள். ரோல்பிங் முறை செய்வதற்கு முன்னும் பின்னும் அதிகமாக தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். ரோல்பிங் முறை செய்த பிறகு காயங்கள் ஏற்படுவது சகஜம். இதற்கு வெந்நீர் மற்றும் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம்.

  MOST READ: ஆஸ்துமா எவ்வளவு நாளில் மரணத்தை ஏற்படுத்தும்... எப்படி தடுக்கலாம்?
ரோல்பிங் என்பது ஒரு மசாஜ் டெக்னிக். இந்த முறையை எந்த வயது ஆனவர்களும் செய்யலாம். எப்படிப்பட்ட உடம்பு வாகுக்கும் இது ஏற்றது. இது ஒரு உடல் கட்டமைப்பு ஒருங்கிணைப்பு. இது உடலின் மென்மையான திசுக்களை ஆழ்மயமாக்குவதன் மூலம் உடலின் முழுமையான அமைப்பு முறையை சரி செய்கிறது. நமது உடலில் உள்ள மையோபேசியல் தசைகளை புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்ப ஒழுங்குபடுத்துகிறது.

இந்த முறை 20 ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட பகுதியில் இருந்து தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த முறை மிகுந்த புகழை பெற்றுள்ளது. எல்லாரும் இந்த முறையை பின்பற்ற போட்டி போட ஆரம்பித்துள்ளனர். உடல் செயல்பாடுகள் ஒருங்கிணைப்பு, எளிதில் மூச்சு விட உதவுதல், ஆற்றலை அதிகரித்தல், மன அழுத்தத்தை போக்குதல் ஒட்டுமொத்தமாக நமது உடல் நலத்தை மேம்படுத்துதல் போன்ற ஏகப்பட்ட நன்மைகளை அள்ளித் தருகிறது.

   
 
ஆரோக்கியம்