Back
Home » ஆரோக்கியம்
நீங்க எப்பவும் தனியாதான் சாப்பிடுவீங்களா? அத பத்தி ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு... இத படிங்க...
Boldsky | 20th May, 2019 03:20 PM
 • சாப்பாட்டு தனியர்கள்

  சமீபத்தில் பிரிட்டனில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் அடையப்பட்ட நலவாழ்வு குறியீடு, பிரிட்டனில் மூன்றில் ஒரு பங்கினர் எப்போதும் தனியாகவே சாப்பிடுகின்றனர் என்பதை காட்டுகிறது. சந்தையை குறித்து கணக்கெடுக்கும் நிறுவனம் பிரிட்டனில் 2,000 பேரிடம் நடத்திய கணக்கெடுப்பின் அறிக்கையில் லண்டன் மாநகரில் வசிப்பவர்களில் பாதி எண்ணிக்கை மக்கள் தனியாகவே உணவு உண்கின்றனர் என்று கூறியுள்ளது.

  MOST READ: இந்த லிஸ்டல இருக்கற மாதிரி சாப்பிடுங்க... 7 நாள்ல ஈஜியா 7 கிலோ எடை குறைக்கலாம்...


 • பாஸ்ட் ஃபுட்

  இதுபோன்ற தனியாக சாப்பிடக்கூடியவர்களை கருத்தில் கொண்டு பிரிட்டன் கடைகள் சிங்கிள் போர்ஷன் பர்கர், ஸ்டீக் மற்றும் காய்கறிகளை வாங்கி இருப்பில் வைத்துக்கொள்ள தொடங்கியுள்ளன. உணவகங்களும் 'ஒருவருக்கான மேஜை' என்ற கணக்கில் முன்பதிவு செய்வதை புழக்கத்தில் கொண்டு வந்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் இது போன்ற ஒரு நபருக்கான மேஜைக்கான பதிவுகள் 160 விழுக்காடு அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

  தனியொருவனாய் சாப்பிடும் பழக்கம் பெருகி வந்தாலும், அது வருந்தக்க விஷயமாகவே இருந்து வருகிறது. கூட்டமாக, குழுவாக இணைந்து சாப்பிடுவது உலகெங்கும் மனித குலத்தின் மரபாகவே கருதப்படுகிறது.


 • ஏதோ ஒன்று...

  கார்டியன் என்ற இதழில் எமி ஃபிளமிங் என்ற கட்டுரையாளர், "இணைந்து சாப்பிடுவது, மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு அடிப்படையான ஒன்றாகும்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனியாக சாப்பிடுவது வேலையை கூடுதலாக்குகிறது. ஒருவருக்கென்று உணவு தயாரிப்பது, பரிமாறிய பாத்திரங்களை கழுவுவது என்று வேலை அதிகம்.

  மொத்தமாக சமைத்து வைத்துக் கொண்டாலும் (Batch-cooking) அது போன்ற சமையல் முறைகள் நான்கு முதல் ஆறு நபர்களுக்கானதாகவே இருப்பதோடு, ஒருவித உணவை வாரம் முழுவதும் சாப்பிடுவதற்கு யாரும் விரும்ப மாட்டார்கள் என்றும் எமி ஃபிளமிங் எழுதியுள்ளார்.


 • கட்டாயத்தால்

  தனியாக சாப்பிட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், எப்படியாவது இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதால், ஃபிரிட்ஜில் இருப்பவற்றைக் கொண்டு ஏதோ ஒன்றை செய்து சாப்பிடுகிறார்கள். பெரும்பாலும் ஹம்மஸ் மற்றும் க்வாகமோலி ஆகிய டிப் வகைகளின் விற்பனை உயர்ந்துள்ளது. அவை சாப்பிடுவதற்கு எளிதானவையாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றவை என்பதால், தனிமையில் சாப்பிடக்கூடியவர்கள் பெரும்பாலும் இவற்றை விரும்புகிறார்கள்.

  MOST READ: வீட்ல பிரட் க்ரம்ஸ் இல்லையா? அதுக்கு பதிலா இதுல ஏதாவது ஒன்னு யூஸ் பண்ணுங்க...


 • குறைந்து வரும் பாரம்பரியம்

  பரபரப்பான வாழ்க்கை முறை, சாப்பாட்டுக்கு நேரம் ஒதுக்க அனுமதிக்கவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், பொதுவாகவே உட்கார்ந்து சாப்பிடும் நேரம் குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சாப்பிடுவதற்கு செலவழிக்கும் நேரத்தின் அளவு ஆண்டுதோறும் குறைந்து வருவதாகவும், உணவுக்குப் பதிலாக நொறுக்குத் தீனிகளை சாப்பிடும் வழக்கம் வளர்ந்து வருவதாகவும் எமி ஃபிளமிங் கூறியுள்ளார்.


 • எது நல்லது?

  தனியாக சாப்பிடுவதன் நன்மைகள் குறித்து ஆய்வுகள் வெவ்வேறு விதமான கருத்துகளை முன்வைக்கின்றன. குழுவாக சேர்ந்து சாப்பிடும்போது, தங்களுக்கான உணவு கட்டுப்பாடுகளை மீறுவதற்கு வாய்ப்பு உள்ளது. தனியாக சாப்பிட்டால், சரியான பரிந்துரைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ணமுடியும் என்று ஒருபுறமும் தனியாக சாப்பிடும் நபர்கள் காய்கறிகளை குறைவாகவே உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். சேர்ந்து சாப்பிடுகிறவர்கள் ஒப்புநோக்க அதிக காய்கறிகளை உண்கிறார்கள் என மறுபுறமும் கூறப்படுகிறது.


 • ஆய்வு

  நியூயார்க்கை சேர்ந்த எழுத்தாளர் ரேச்சல் சைமே என்பவர், தாம் வீட்டிலிருந்து வேலை செய்யும்போது தாம் அவ்வப்போது விரும்பியவற்றை சாப்பிட முடிவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவுக்கு அநேகர் பின்னூட்டமும் இட்டுள்ளனர்.

  அநேகருக்கு தங்கள் ஸ்மார்ட்போன் மூலம் ஹேங்க் அவுட் செய்யும் பழக்கம் உள்ளது. இது தனிமையாக உணர்வதை ஓரளவுக்கு தவிர்க்க உதவும். துணையை தேடும் மனநிலையையே இது வெளிக்காட்டுகிறது. சாப்பாட்டில் கவனம் செலுத்தி சாப்பிட்டு திருப்தியடைவதை இது தடுக்கிறது.


 • லக லக கல கல சாப்பாட்டு மேஜை

  வீட்டில் மூன்று பிள்ளைகள் இருந்தால் அந்த வீட்டு சாப்பாட்டு மேஜையே கலகலப்பாக இருக்கும். தனியாக சாப்பிட்டால் உணவில் மட்டுமே கவனம் செலுத்தி ருசித்து சாப்பிட வாய்ப்பு இருந்தாலும் கூடி சாப்பிடுவதே மனித பண்புக்கு மரபுக்கு ஏற்றதாக உணரச் செய்கிறது.

  MOST READ: கடலைமாவுக்கு பதிலா கிரிக்கெட் மாவுனு ஒன்னு வந்திருக்காமே? எதுல இருந்து எடுக்கறாங்க தெரியுமா?


 • என்ன செய்யலாம்?

  நம்முடன் அமர்ந்து சாப்பிடுவதற்கு யாருமேயில்லையே என்ற ஏக்கம் நிறைந்த மனதுடனே தனியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆகவே, நமக்குத் தெரிந்த இப்படிப்பட்ட தனி உணவர்களை நம்முடன் இணைந்து உணவு உண்ண அழைக்கலாம். அவன் தனியாக சாப்பிட்டால் எனக்கு என்ன என்று எண்ணாமல், அவர்களை அழைத்து நம்முடன் அமரச் செய்து சாப்பிட வைப்பதன் மூலம் தனிமையில் சாப்பிடுதல் என்ற வழக்கத்தை புழக்கத்திலிருந்து விரட்டுவோம்.

  குடும்பமாக அல்லது நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் இணைந்து சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக காப்பதோடு நம் பண்பாட்டையும் காக்கும்.
"மச்சி... என் ஃப்ரண்ட்டோ அக்காவுக்கு கல்யாணம்... சாப்பிட போறேன் வர்றியா?" என்று நண்பர்களை திரட்டிக் கொண்டு திருமண விருந்துக்குச் செல்பவர்கள் ஒருவகை. "அவனுக்கென்னப்பபா... மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு போயிருக்கான்," என்று ஏக்கத்தோடு கிண்டல் செய்யும் நண்பர்கள் ஒரு வகை.

சாப்பாடு என்பது பெரும்பாலும் விருந்தோடு தொடர்புடையதாகவே பார்க்கப்படுகிறது.

   
 
ஆரோக்கியம்