Back
Home » ஆரோக்கியம்
நம்ம முன்னோர்கள் தயாரித்து குடிச்ச மூலிகை பீர் வீட்லயே எப்படி தயாரிக்கலாம்?
Boldsky | 23rd May, 2019 11:33 AM
 • ஹெர்பல் பீர்

  ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கு ஒரு சட்டமா என நவீன யுவதிகள் கேள்வி எழுப்புகிறார்கள் வெளிப்படையாக இல்லாமல் மனக்குமறலின் வழியாக ஆதங்கத்தை கொட்டுகிறார்கள். பொதுவெளியில் மோர் சாப்பிட்டு போரடித்துப் போனதால், இலைமறை காய்மறையாக பீர் சாப்பிடுகிறார்கள்.

  இனி அவர்களுக்கு எந்தக் கவலையும் தேவையில்லை. இருக்கவே இருக்கிறது பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஹெர்பல் பீர். நவநாகரீக யுகத்தில் மூலிகை பீருக்கு பரிந்துரை செய்யும் இந்தப் பெண்மணி, எப்படி தயாரிப்பது என்பதை ஒரு சுயசரிதை போல நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறார். இதற்காக அகராதிகளையும், வரலாறுகளையும் புரட்டிப்போடும் அவர், ஒரு மதுபானம் தயாரிப்பாளரின் மனைவி.


 • நான் கற்றுக் கொண்டது பீர்

  பீரைப்பற்றி எழுதவேண்டும் என்று ஒருபோதும் கற்பனை செய்தது இல்லை. இப்போது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஆல்கஹால் மூலம் மதுபானங்களை தயாரிக்கத் தெரிந்த எனக்கு, ஹெர்பல் அகாடமியில் சேர்ந்த பின்னர்தான் நொதித்தல் மூலம் மூலிகை பீர் தயாரிக்கலாம் என்பதை அறிந்து கொண்டேன். அதில் வெவ்வேறு வகைகளில், ஹெர்பல் மதுவை, உணவை எப்படித் தயாரிக்க வேண்டும் என்பதை அந்த பாடத்திட்டத்தின் வழியாக கற்றுக் கொண்டேன்.

  சரி நாம் ஏன் நமக்கு விருப்பமான மூலிகை பீரை தயாரிக்க கூடாது என்ற எண்ணம் என்னை உந்தித்தள்ளியது. பண்டைய காலங்களில் மூலிகை பீரின் பயன்பாடு என்ன, நமது முன்னோர்கள் எப்படி பயன்படுத்தினார்கள். இந்த நவீன காலத்தில் அது அவசியமா என்பது குறித்து பகிர்ந்து கொள்ள விழைகிறேன். கொஞ்சம் கவனத்தை என் கட்டுரையில் திருப்ப முடியுமா. உங்களை நூற்றாண்டுகளுக்கு பின்னால் அழைத்துச் செல்கிறேன்.


 • பீரா இது?

  எல்லா திட, தி்ரவப் பொருளுக்குப் பின்னணியில் ஒரு வரலாறு இருக்கிறது. மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பானத்தை பீர் என்று அழைக்க முடியுமா. இலக்கணப்படி அது சரியா என்பது கேள்வி.

  அதாவது hops மற்றும் கோதுமை சுவையுடன் நொதித்தல் முறையில் தயாரிக்கப்படுவது பீர் என ஆக்ஸ்போர்டு அகராதி கூறுகிறது. தொழில்நுட்ப வார்த்தையில் இது பீர் வகையில் அடங்காது. கசப்பு மற்றும் சுவையூட்டும் ஒரு மூலிகை கலவை ஆகும். ஆனால் மது உற்பத்தியாளர்கள் இதனை பீர் என்ற பெயரிலேயே அழைக்கிறார்கள்.

  MOST READ: இந்த சிவப்பு பூச்சி கடிச்சா விஷம் ஏறாம இருக்க உடனே என்ன செய்யணும்?


 • பீர் அரசியல்

  Reinheitsgebot காலம் வரை பீர் என்ற பொருளிலேயே அழைக்கப்பட்டது. ஏப்ரல் 1516 ஆண்டு பவாரியன்களால் இயற்றப்பட்ட சட்டத்தில் வரையறைகள் உருவாக்கப்பட்டன. பார்லி, தண்ணீர் மற்றும் hops ஆகிய பொருட்களால் தயாரிப்பது மட்டுமே பீர் என்றது. அந்த சட்டம். வணிக ரீதியான விலைப் போட்டியிலிருந்து விலக்கு அளித்தது. கோதுமை, கம்பு ரொட்டி உற்பத்தியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள சட்டம் அனுமதித்து.

  அதேநேரத்தில் இந்தச் சட்டம் மதப்பாகுபாடுகளை உருவாக்குவதாக சந்தேகிக்கப்பட்டது. ஜெர்மானிய புரிட்டன்ஸ் இனம் மதச்சடங்குகளில் புனித பானத்தில் பயன்படுத்தும் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. Hops பாலியல் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் சுலபமான வழி என இதனை கருதினார்கள்.


 • புனித ரசம்- ஆன்மீகத்தேவை

  பீர் முதன்முதலாக கண்டறியப்பட்டபோது மக்கள் அதனை புனித ரசமாக கொண்டாடினார்கள். அந்த மது சுதியை கூடுதலாக ஏற்றும் அளவுக்கு ஆல்ஹகால் தாராளமாக சேர்க்கப்பட்டது. பல சந்தர்ப்பங்களில் மூலிகை கரைசல் சேர்க்கப்பட்டது. நீத்தார் கடனாற்றும் சடங்குகளில் மூதாதையர்களுடன் அந்தரங்கமாக உரையாற்றுவதற்கு பீ்ர் ஒரு ஆன்மீகத் தேவையாக மாறியது. தங்களை சுற்றி குறுக்கும், நெடுக்குமாக அலைந்து நிம்மதியைக் கெடுக்கும் சாத்தான்களை விரட்டும் புனிதப் பொருளாகவும் ஆனது.

  MOST READ: எப்ப பார்த்தாலும் தூக்கம் தூக்கமா வருதா? இத செய்ங்க... சுறுசுறுப்பா ஆகிடுவீங்க...


 • மூதாதையர் நம்பிக்கை

  தாவரங்கள்,பாறைகள், மரங்களில் இருந்து புத்துயிர் அளித்த யாகங்களுக்கு உயிருடன் ஒன்றாக இணைந்திருப்பதாக மூதாதையர் நம்பினர். புனிதமான ரசம் தங்கள் சரீரங்களில் பாய்வதாக கருதி பீரை அருந்தினார்கள்.


 • கலாச்சார அசிங்கம்

  முன்னோர்கள் உட்கொண்ட மூலிகை பீர் , இந்த நவீன யுகத்திற்கு பொருத்தமான, அழகான வழி என கருதுகிறேன். டைவ் பார்கள், காலேஜ் பார்ட்டிகளில் போதை பானங்களைவிட இது உத்தமமானது. தற்போது ஆல்கஹாலுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். இது நமது கலாச்சாரத்துக்கு எதிரானது.. அசிங்கமானது.

  MOST READ: புராணங்களில் வரும் அரக்கர்களில் அதிக பலம்வாய்ந்த அரக்கர் யார் தெரியுமா?


 • ஈஸ்ட் சேகரிப்பு

  பழங்காலத்தில் பாக்கெட்டுகளில் சேகரிக்கப்பட்ட ஈஸ்டுகளை பயன்படுத்தவில்லை. விழாக்காலங்களில் மிருகங்களை பலியிட்டு, அதை இறைவனுக்கு ஆகுதியாக்கும் வழிமுறைகளில் ஈஸ்டுகளை சேகரித்தார்கள். அது சக்தி வாய்ந்ததாக இருந்த்து. இதற்காக மூதாதையர்கள் விழாக்களை எடுத்தார்கள். அதுபோல இன்றைய தலைமுறை விலங்குகளில் இருந்து ஈஸ்ட் சேகரிப்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.


 • சந்தோசம் தரும் மூலிகை பீர்

  செயற்கையான பீர் இப்போது ஆங்காங்கே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதில் முழுமையான உற்சாகம் இல்லை. நமது மூதாதையர் தயாரித்த பானத்தை உருவாக்கும்போது சந்தோசம் நம் வீட்டை நிரப்புகிறது. நமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது அலாதியானது. உணவும், வீடும் களைகட்டும். இதன்மூலம் ஒரு அன்பு பொதிந்த சமூகம் உருவாக்கப்படும்.

  MOST READ: உங்கள் ராசிக்கு தினமும் சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் எது? இதோ இதுதான்...


 • மூலிகையை நேசியுங்கள்

  மூலிகைச் செடிகளை நன்கு அறிந்து கொள்ளுங்கள். பீர் தயாரிக்க ஆர்வமாக இருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். எனக்குத் தெரிந்த செய்முறை நான் புத்தகங்களின் வழியாகச் சொல்கிறேன்.


 • மூலிகை பீர் செய்ய தேவையான பொருட்கள்.

  ஒரு கப் எலுமிச்சை சாறு (Melissa officinalis)
  முக்கால் கப் உலர்ந்த எலுமிச்சை (Aloysia citrodora)
  அரை கப் உலர்ந்த வண்ண மலர்ச்செடி Hibiscus spp.)
  1/4 கப் உலர்ந்த linden (Tilia spp.)
  1 பவுண்ட் பழுப்பு சர்க்கரை
  Safe Ale US-05 Dry Ale Yeast

  தேவையான உபகரணங்கள்

  கொதிக்க வைக்க பெரிய பானை ஒன்று
  ஒரு கலன் கண்ணாடி கார் பாய்
  காற்றை தடுக்க Airlock ஒன்று
  பீர் பாட்டில்கள் மற்றும் மூடிகள்.
  (Bottle capper)
  குப்பி மூடிகள் (Funnels)
  புனல்
  ஸ்ட்ரெய்னர்
  தூம்புக்குழாய் (Auto-siphon)
  நீர் அடரத்திமானி(Hydrometer)
  சுத்திகரிப்பு கருவி (Star San sanitizer)

  செய்முறை

  • சுத்திகரிப்பு கருவி உதவியுடன் உபகரணங்களை தூய்மைப்படுத்த வேண்டும். கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீரை ஆற விடவும். அதில் மூலிகைப் பொருட்களை சேர்த்து மூடி ஒரு மணிநேரம் ஸ்ட்ரெயின் மற்றும் குளிர விடவும். பின்னர் சர்க்கரையை சேர்க்கவும். அதனை மூடி புவியீர்ப்பை உள்வாங்கும் வகையில் வைக்கவும். உள்ளே செல்லுமாறு கார்பாயில் சர்க்கரையை செலுத்த வேண்டும்.

  பின்னர் ஈஸ்டை சேர்த்து 68 முதல் 70 டிகிரி வரையிலான குளிரில் வைக்கவும். நாள்தோறும் அதன் நடவடிக்கையை கவனிக்கவும். சில நாட்களுக்குப் பின்னர் சோதித்து சுவையை சரிபார்க்கவும். ஆல்ஹகாலை சரிபார்த்து ஒப்பிட்டு மீண்டும் ஊறல் போடவும். உங்கள் பீர் பாட்டிலை எடுத்து பீரை நிரப்பவும். காற்று வெளியேறாதுவாறு அடைத்து வைக்கவும். 2 வாரங்களுக்குப் பின் எடுக்கும்போது அது பீராக மாறி இருக்கும். இப்போது மூலிகை பீர் தயார்.

  MOST READ: வெயிலுக்கு சும்மா ஜில்லுனு இருக்கிற பவுடரை எப்படி நாம வீட்லயே தயாரிக்கலாம்?
இதிகாச காலத்தில் அவதார புருஷர்கள் தொடங்கி வைத்த சோம்பான, சுராபான சங்கதிகள், விரும்பியோ விரும்பாமலோ இன்றுவரை புழக்கத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அந்தப்புரத்தில் அரச மகுடங்களோடு வந்தவர்களை மஞ்சத்தில் புரட்டவும், இன்பத்தில் திளைக்க வைக்கவும் அன்று இது பயன்பட்டது. இன்று டாஸ்மாக் கடைகளில் வெரைட்டி வெரைட்டியாக கிடைக்கிறது. அன்று மகுடங்களோடு வந்தவர்கள் மாதுவோடு திரும்பினார்கள்.

இன்று வேட்டியோடு வருபவர்கள் ஜட்டியோடு திரும்புகிறார்கள். இன்பமோ, துன்பமோ, கல்யாண வீடோ, கருமாதி வீடோ மது இல்லாமல் அந்த நிகழ்ச்சியோ, விழாவோ முழுமை அடைவதில்லை. பாலின வேறுபாடு இல்லாமல், வயது வித்தியாசம் இல்லாமல் நவீன யுகத்தில் அங்கிங்கெணாதபடி எங்கும் புழங்கப்படுகிறது மது. அது பீரோ, பிராந்தியோ...

 
ஆரோக்கியம்