Back
Home » ஆரோக்கியம்
வெங்காயத்தில் இருக்கும் இந்த பொருள் உங்களின் ஆயுளை அதிகரித்து இளமையை தக்கவைக்கும் தெரியுமா?
Boldsky | 23rd May, 2019 04:58 PM
 • பியஸ்ட்டின் ஏற்படுத்தும் தாக்கம்

  ஒருவருக்கு வயதாக தொடங்கும்போது அவரது உடலில் இருக்கும் செல்கள் சேதமடைய தொடங்குகிறது. வயது உங்கள் செல்களை பாதிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. நமது நோயெதிர்ப்பு மண்டலம் இந்த செல்களை வெளியேற்றுவது கஷ்டப்படும். இந்த சேதமடைந்த உயிரணுக்கள் நமது நோயெதிர்ப்பு சக்தியை குறைத்து வீக்கம், சுருக்கம், தளர்ச்சி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். பியஸ்ட்டின் இந்த சேதமடைந்த செல்களை வெளியேற்றி வயதாவதை குறைப்பதோடு ஆயுளை அதிகரிக்கிறது. இந்த பியஸ்ட்டின் சில பழங்களில் அதிகளவு உள்ளது.


 • ஸ்ட்ராபெரி

  புதிய பழங்களை எடுத்து அதனை அப்படியே சாப்பிடுவது அல்லது அதை வைத்து வேறு சமைத்து சாப்பிடுவதை போன்ற ஆரோக்கியமான விஷயம் எதுவுமில்லை. இந்த பழம் மூளை சீரழிவை தடுத்து அல்சைமர் போன்ற நரம்பியல் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. இதனை நீங்கள் எந்த விதத்தில் வேண்டுமென்றாலும் எடுத்து கொள்ளலாம்.


 • ஆப்பிள்

  அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் ஆப்பிள் மிகவும் முக்கியமானதாகும். இது உங்கள் நுரையீலை பாதுகாக்கும். இதில் இருக்கும்ஊட்டச்சத்துக்கள் உங்கள் சருமத்திற்கு பொலிவு வழங்குவதுடன் இறந்த சரும செல்களை வெளியேற்றும் பணியையும் செய்கிறது.

  MOST READ: பிரம்ம ராட்சஷர்கள் என்றால் உண்மையில் யார்? அவர்களுக்கு ஏன் கோவில் கட்டப்பட்டது தெரியுமா?


 • பெரிஸ்மோன்

  பெரிஸ்மோன் என்பது கிட்டத்தட்ட தக்காளி போல இருக்கும் ஒரு பழமாகும். அளவான இனிப்பு சுவையுடன் இருக்கும் இது இரண்டு வகைகளில் கிடைக்கிறது. வலிமையான ஆன்டிஆக்சிடன்ட் ஆன இது உங்கள் செரிமானத்தை ஊக்குவிக்கும். பியஸ்ட்டின் மற்ற பழங்களை காட்டிலும் இதில் அதிகளவு உள்ளது.


 • தாமரை வேர்கள்

  மிதமான இனிப்பு சுவையில் இருக்கும் தாமரை வேர்களை உணவுகளில் பயன்படுத்தலாம். இதில் இருக்கும் நீர்ச்சத்து நமது உடலில் இருக்கும் நீரின் அளவை குறையாமல் பார்த்து கொள்வதோடு நமது இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்.


 • வெங்காயம்

  வெங்காயம் இல்லாத உணவே இல்லை என்று கூறலாம். வெங்காயத்தை அதிகம் சாப்பிடுவபவர்களுக்கு ஆயுள் அதிகம் என்று கூறுவார்கள். இது இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது, மேலும் இரத்தத்தை சுத்திகரிக்கும் பணியையும் செய்கிறது.


 • வெள்ளரிக்காய்

  வெள்ளரிக்காய் இயற்கை கொடுத்த ஓர் வரமாகும். அதிக நீரசத்துக்கள் கொண்ட இது உங்கள் சருமத்தை எப்பொழுதும் பொலிவாக வைத்திருக்க உதவுகிறது. சில புற்றுநோய்களையும் இதுதடுக்கக்கூடும்.

  MOST READ: கையில் செம்பு காப்பு அணிவதால் உங்கள் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?


 • மாம்பழம்

  குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் கிடைக்கும் இது உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உங்கள் இரத்த செல்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. சருமத்தை தெளிவுற செய்து, கெட்ட கொழுப்புகளை வெளியேற்றும் பணியையும் இது செய்கிறது.
இளமையான தோற்றம் என்பது யாருக்குத்தான் பிடிக்காது. அனைவருக்குமே எப்போதும் இளமையாக வாழ வேண்டும் என்று ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் சில காலத்திற்கு பிறகு இளமையான தோற்றத்தை தொடர்வது என்பது அனைவருக்குமே மிகவும் கடினமானதாக மாறிவிடுகிறது.

வயதான தோற்றம் ஏற்படுவதற்கு ஒரே காரணம் எதுவென்று கூறமுடியாது. வயதாவதை தடுப்பதற்கு உலகம் முழுவதும் பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு அவர்கள் கண்டுபிடித்த ஒரு முக்கியமான பொருள்தான் பியஸ்ட்டின் ஆகும். இந்த பியஸ்ட்டின் உடலில் இருக்கும் பல தாமதமடைந்த செல்களை சரிசெய்யவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரித்து ஆயுளை அதிகரிக்கும். இந்த பியஸ்ட்டினை எந்த பொருட்களில் இருந்து பெறலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

 
ஆரோக்கியம்