Back
Home » சிறப்பு பகுதி
இன்றோடு 13 ஆண்டுகள்… மறக்க முடியாத தமிழ் சினிமாக்களின் வரிசையில் புதுப்பேட்டை… !!
Oneindia | 26th May, 2019 03:08 PM
 • ஓப்பனிங் எப்படி?

  ஏன் என்றால் தமிழ் சினிமாவுக்கு என்று ஒரு ஓப்பனிங் இருக்கிறது. இவர் நடித்தால் இப்படி நடக்கும்.. வசூலாகும், பேர் கிடைக்கும் என்று.. அத்தகைய எந்த ஓப்பனிங்கும் இல்லாமல் ஒரு ஒல்லிச்சிறுவனாக காட்சியளித்த தனுஷின் சினிமா வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்ற படம் புதுப்பேட்டை. தனுஷூக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்த படம்.


 • அதே தாதா கதை

  ரொம்ப சாதாரணமான, கேட்டு பாத்து பழகி போன கதை, ஒரு ஏழை பையன் பெரிய தாதாவாகிறான். அதன் இயக்குநர் செல்வராகவன் மேக்கிங்கில் கலக்கி இருப்பார். படத்தில் ஒரு பத்து நிமிடங்கள் கழித்து தான் புதுப்பேட்டை என்று டைட்டில் கார்டு போடுவதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது.


 • ரத்தக்களறி காட்சிகள்

  ஸ்கூல் பையனாக இருந்து, தாதாவாக பயணித்து, அப்படியே அரசியல் வாதியாகிறார். தாதா என்றால் கட்டுக்கோப்பான உடல்வாகு, ஆஜானு பாகுவான தோற்றம் என்ற பார்முலாவை தூக்கி ஓரமாக வைத்திருக்கிறது இந்த படம். ஒல்லிப் பிச்சான் ஆசாமி ஒருவர் டான் ஆகிறார். கேட்கும்போது சிரிப்பு வருகிற இந்த விஷயத்தை அந்த படத்தில் சாத்தியமாக்கி இருப்பார் செல்வ ராகவன். அந்த ஒல்லிப்பிச்சான் நடிகர் உடல் முழுக்க ரத்தகளறியாய் காட்சியளிக்கிறார்.


 • கலக்கிய நடிகர்கள்

  தனுஷின் அப்பா, கஞ்சா கும்பல் லீடர் அன்பு, அதற்கடுத்த அரசியல் தலைவர், எதிரி மூர்த்தி, நண்பர்கள் என ஒரு பட்டாளமே சிறப்பாய் நடித்து தள்ளியிருக்கிறது. சோனியா அகர்வால்... சினேகா (இந்த படத்தில் விலைமாது கேரக்டர்) என சொல்லிக் கொண்டே போகலாம். படத்தின் திரைக்கதை, காட்சியமைப்புகள், வசனங்கள் என எல்லாம் திருப்தியே.


 • மாஸ் காட்சிகள்

  படத்தில் ஒரு காட்சி... உடன் வந்தவர்கள் அனைவரும் தப்பித்து ஓட.. அத்தனை ரவுடிகளும் சுற்றி சுற்றி அவர் மீது கத்தியை சுழற்றுகிறார். சட்டையின் நிறம் மாறுகிறது. முகத்தில் வெட்டுக்கள்... கால்களை இழுத்து... இழுத்து.. கதறும் தனுஷ்.. அதன் பின் ஒரே அடியில் வில்லனின் தம்பியை கொல்கிறார். ஏத்துக்க முடியவில்லை என்றாலும் அதனை சாத்தியமாக்கி இருப்பார்.


 • தொழில் பழகும் காட்சிகள்

  மற்றொரு காட்சி டாப்கிளாஸ் ரகம். டானாக மாறவேண்டும் என்ற பாத்திரத்தில், தனுஷூக்கு ஒருவர் எப்படி வெட்ட வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்கும் காட்சி. வெட்டும் போது நமது பாடி லாங்குவேஜ் எப்படி இருக்க வேண்டும், அலர்ட்டாக இருக்க வேண்டும் என்று சொல்லும் காட்சிகள். இதுபோன்ற வன்முறை காட்சிகள் பல இருந்தாலும்... தொழில் பழகும் காட்சிகள் ரசிக்கத் தக்க ஒன்று. அந்த காட்சியில்.. கவலைப்படாதே மேல.. உன்ன பத்தி நல்லா சொல்றேன் என்ற வசனத்தில் டைமிங்கான காமெடியும் லேசாக உண்டு.


 • கொக்கி குமார் கதாபாத்திரம்

  பின்னர் கொக்கி குமாராகி மாறி... தாதாயிசம் பண்ணும் காட்சிகள். ஏலத்தில் மற்ற ரவுடிகள் செய்யும் அலப்பறைகள்... என சொல்லிக் கொண்டே போகலாம். சினேகா விலைமாதுவாக ரயில்வே ஸ்டேஷனில் அறிமுகமாகும் காட்சி. மிகவும் ரிஸ்க்கான கதாபாத்திரம் என்று உணர்ந்திருந்த அவர் நடிப்பில் யதார்த்தத்தை அழகாக காட்டி இருப்பார்.


 • யாருக்குத் தான் பிடிக்காது?

  ஆக்ரோஷம், சிரிப்பு, கோபம் என எல்லா ஏரியாவிலும் தனுஷ் அருமையான ரகம். அம்மான்னா ரொம்ப பிடிக்குமா" என்றதும் லேசாக சிரித்து விட்டு "யாருக்குத்தான் பிடிக்காது?" என்பது அற்புத காட்சி. படத்தில் வன்முறை அதிகம் என்று சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் இது ஒன்றும் முதல் வன்முறைப் படம் அல்ல.


 • வெட்ட முடியாது… அட்ஜஸ்ட் பண்ணு

  மற்ற வன்முறை படங்களுக்கும் புதுப்பேட்டைக்கும் உள்ள வித்தியாசம் எதுவெனில் இந்தப் படத்தில் வன்முறை ரசிக்கத்தகுந்ததாக காட்டப்படுகிறது. குறிப்பாக, கடைசியில் வில்லனைக் கொல்லப் போகும் போது, உடல் பலவீனமாகிக் கைகள் ஆட 'கரெக்டா வெட்ட முடியாது அட்ஜஸ்ட் பண்ணிக்கோ'என்னும் போதும் தியேட்டரில் ரசித்து சிரிப்பதைப் பார்க்க முடிகிறது.


 • ரசிக்க வைத்த படம்

  இந்த படத்தை பற்றி தற்போது பேச வேண்டிய அவசியம். இன்று மே 26.. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்னே இதே நாளில் வெளியானது தான் புதுப்பேட்டை. இப்போதும் அந்த படத்தை பலரும் பேச வைக்கிறது. காரணம்.... புதுப்பேட்டை வன்முறையை ரசிக்கத் தக்கதாகக் காட்டுகிறது. வன்முறை சகஜமான ஒன்றாக உணர்த்தப்படுகிறது. வன்முறையை வேடிக்கை பார்ப்பவர்களாக மட்டுமே இருக்கும் பார்வையாளர்களை வன்முறையை ரசிக்கவும் கைதட்டவும் வைக்கிறது என்பது தான்....!!
சென்னை: 13 ஆண்டுகளுக்கு முன்... 2006ம் ஆண்டு... மே 26...:!! யாரும் நினைத்து பார்க்காத வகையில்...தனுஷின் புதுப்பேட்டை படம் ரிலீசாகி இன்றுடன் 13 ஆண்டுகள் ஆகிறது. எனவே... அதை பற்றி ஒரு சின்ன ரீவைண்ட்.

தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் மிக சாதாரணமாக பொழுதை கழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடங்கிய நாள். ஆனால்... அவர்களின் பொழுது, அன்றாட வாழ்க்கையை ஒரு திரைப்படம் பெருமளவு ஆக்கிரமித்து விடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

காரணம்... புதுப்பேட்டை.. (Survival of the Fittest) என்ற ஆங்கில வரிகளுடன் வெளியான ஒற்றை படம். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து இதே நாளில் அந்த படத்தை பற்றி திரையுலகத்தினர் பேசாமல் இருக்க முடியவில்லை. தமிழ் சினிமாவில் போலீசாரை கதாநாயகர்களாக சித்திரித்து ரிலீசான சினிமாக்கள் உண்டு. தாதாக்களாக மையப்படுத்தி உருவாகிய படங்களும் உண்டு. அவற்றில் தவிர்க்க முடியாத படம் என்றால் புதுப்பேட்டை.

   
 
ஆரோக்கியம்