Back
Home » பயணம்
சியோனி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Native Planet | 28th May, 2019 03:40 PM

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சத்புரா' பீடபூமியின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சியோனி' ஒரு அழகான, அமைதியான சுற்றுலாத் தலமாக பிரசித்தி பெற்று விளங்குகிறது. 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ம் தேதி உருவாக்கப்பட்ட இந்த மாவட்டம் சுமார் 8,758 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு பரந்து விரிந்துள்ளது. விவசாயமே இந்த மாவட்டத்தின் பிரதான தொழில் ஆகும். இந்த மாவட்டத்தில் பாயும் வைன்கங்கா' நதி சியோனி மாவட்டம் முழுவதையும் செழிப்புடன் வைத்திருக்கிறது.

SumanthaPhotography

சியோனி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

அது பிற்காலத்தில் சிவ நக்ரி' அல்லது சியோனி' என புகழ் பெற்றது. மேலும் இந்த இடம் ருட்யார்ட் கிப்ளிங்' எழுதிய ஜங்கிள் புக்' புத்தகத்தில் இடம் பெற்று உலகப் பிரசித்தி பெற்றுள்ளது. இந்த சியோனி, ஜங்கிள் புக்கில் சீஒனீ' என குறிப்பிடப்படுகிறது. சியோனி என்கிற பெயர் சியோனா எனகிற பெயரிலிருந்து மருவியதாக கருதப்படுகிறது. இந்த சியோனா என்கிற பெயர் இங்கு அதிகம் காணப்படும் ஒரு புகழ் பெற்ற மரத்தின் பெயராகும். வெர்பேனியல் குடும்பத்தை சேர்ந்த இந்த மரம் இங்கு அதிகம் காணப்படுகிறது. இந்த மரத்திலிருந்து பெறப்படும் கட்டைகள் டொலக் செய்ய பயன்படுகிறது. சியோனா மரத்தை தவிர இங்கு அதிகம் காணப்படும் தேக்கு மரம் பெரிய அளவில் பெஞ்ச் உற்பத்தித்திக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சியோனி சுற்றுலா

சியோனி சுற்றுலாவில் இங்குள்ள ஆசியாவிலேயே மிகப் பெரிய மண் அணையான ஆசியா-பீம்கார்க் முக்கிய இடம் வகிக்கிறது. விவசாயத்திற்கு பெரிதும் உதவும் இந்த அணை வைன்கங்கா நதியின் குறுக்கே சப்பாரா என்கிற இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள பென்ச்' புலிகள் சரணாலயம் மற்றொரு முக்கிகயமான சுற்றுலா தலமாகும். இங்குள்ள பர்கட்' என்கிற சிறிய நகரம் அதன் வளமான பள்ளத்தாக்குகள் மற்றும் அழகிய சுற்றுப்பகுதிகளுக்காக மிகவும் பிரபலமானது. முகாம், மலையேறுதல் மற்றும் பிற வெளிப்புற பொழுதுபோக்குகளில் ஆர்வமுள்ள சுற்றுலா பயணிகள் பர்கட்டிற்கு சுற்றுலா செல்லலாம். இங்குள்ள மகாகாலேஷ்வர் கோயில், சிவ ஆலயம், மற்றும் அமோடாகார் போன்றவை சிறப்புமிக்க பிற சுற்றுலா இடங்களாகும்.

Dr Dinesh Bisen IRS

சியோனி பயணம்!

குளிர் காலங்களில் சியோனிக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது. மேலும் சியோனி சாலை, ரயில் மற்றும் விமானம் மூலம் மாநிலத்தின் மற்ற நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

திக்ஹோரி கிராமத்தில் அமைந்துள்ள மகாகாலேஷ்வர் கோயில் மிகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். இந்த சிறிய கிராமம் சியோனிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மிகப் பழமையான இந்த கோவில் 8 ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற இந்திய தத்துவ ஞானி ஜகத் குரு ஆதி சங்கரரால் கட்டப்பட்டது.

புகழ் பெற்ற சிவன் கோவிலான இது இந்துக்கள் மத்தியில் மிகுந்த முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. ஜாதி, மதம், போன்றவைகளை கடந்து ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் இந்து வருகை புரிந்து கடவுளின் ஆசீர்வாதத்தை பெற்றுச் செல்கின்றனர். எளிதாக அணுகும் வண்ணம் அமைந்துள்ள இந்த கோவிலை சுற்றுலா பயணிகள் பொது போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்தி அடைய முடியும்.

சியோனி சுற்றுலா செல்லும் வழியில் அமைந்துள்ள் ஒரு அழகிய இடமே அமோடாகார். இந்த அழகிய இடமே நூலாசிரியர் ருட்யார்ட் கிப்ளிங்ன் பிரபல புத்தகமான "ஜங்கிள்புக்" ஹீரோ "மோக்ளி"யின் வேலை செய்யும் இடம் என்று கருதப்படுகிறது. இந்த அழகிய இடம் சியோனி -மாண்டலா மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கிருந்து சுற்றுலா பயணிகள் சோனா ராணி' அரண்மனையின் எஞ்சியுள்ள பகுதிகளைபார்க்க முடியும்.

இந்த இடம் சுஹுவில் இருந்து இருந்து சுமார் 10 கிலோமீட்டர் மற்றும் சினோயில் இருந்து சுமார் 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பார்வையாளர்களின் மூச்சடைக்கச் செய்யும் சியோனியின் கண்ணுகினிய காட்சியானது என்றும் நம் மனதில் நிலைத்திருக்கும். சியோனி மற்றும் சட்டர்பக்ஸ்ஸிற்கு சுற்றுலா வரும் பயணிகள் கண்டிப்பாக இந்த இடத்திற்கு வருகை தர வேண்டும்.

   
 
ஆரோக்கியம்