Back
Home » லேட்டஸ்ட்
தலைநகர் டெல்லியை காப்பாற்ற அமெரிக்காவிடம் சென்ற இந்தியா! பின்னணி என்ன?
Gizbot | 12th Jun, 2019 10:48 AM
 • சர்பேஸ் டு ஏர் மிஸைல் சிஸ்டம்- 2

  இந்தியா அமெரிக்காவிடம் இருந்து நேஷனல் அட்வான்ஸ் சர்பேஸ் டு ஏர் மிஸைல் சிஸ்டம்- 2 ஏவுகணையை (National Advanced Surface to Air Missile System-II -NASAMS-II) பெறுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. சுருக்கமாக நாசம்ஸ்-2 என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை ஆனது இஸ்ரேலிய, ரஷ்யா மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைக்கப்பெற்று, இந்தியாவின் தலை நகரமான டெல்லியை பாதுகாக்கும் 'மல்டி லேயர்டு ஷீல்ட்' திட்டமாக உருவாக்கம் பெற உள்ளது.


 • அச்சுறுத்தல்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும்!

  இந்த பாதுகாப்பு கவசம் ஆனது டெல்லியை குறி வைக்கும் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இது சார்ந்த விற்பனைக்கான ஒப்புதல் கடிதத்தை வருகிற ஜூலை முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் அமெரிக்கா இந்தியாவிடம் சமர்ப்பிக்கும் என்று பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ் செலவாகும் தொகையானது சுமார் ரூ. 6,000 கோடி அல்லது கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 • டெல்லியை சுற்றி!

  மேலும் வெளியான சில தகவல்களின் படி, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடக்கும் இந்த ஒப்பந்தம் கையெழுத்திட பட்டடவுடன், ஆயுத விநியோகங்கள் ஆனது அடுத்த இரண்டு அல்லது நான்கு ஆண்டுகளில் நடைபெறும். இந்த ஒப்பந்தம் மட்டுமின்றி, டெல்லியை சுற்றி ஏவுகணை மின்கலங்களை நிறுவுவதற்கான தளங்களின் தேர்வு உட்பட பல சுற்று பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடைபெற்றுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


 • டெல்லியை மட்டுமின்றி இந்தியாவின் எல்லைகளையும் பாதுகாக்கும்!

  அமெரிக்கா அதன் டெர்மினல் ஹை ஆல்டிட்யூட் ஏரியா டிஃபென்ஸ் (THAAD) மற்றும் பாட்ரியாட் திஅட்வான்ஸ்டு கேபபிலிட்டி (PAC-3) மிஸைல் டிஃபென்ஸ் சிஸ்டம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளுமாறு இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்து வருவதால், ரஷ்யா மற்றும் இந்தியாவிற்கு இடையே ஏற்பட்ட எஸ்-400 ட்ரையம்ஃப் சர்பேஸ் டு ஏர் மிஸைல் டிஃபென்ஸ் ஒப்பந்தம் ஆனது முறியக்கூடும் வாய்ப்பு உள்ளதாகவும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ரஷ்யாவிடனான இந்த எஸ்-400 ஒப்பந்தம் ஆனது தலைநகர் டெல்லியை மட்டுமின்றி இந்தியாவின் எல்லைகளையும் பாதுகாக்கும் என்பதால், இந்த ஒப்பந்தம் ரத்தாக வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.


 • மூப்பரிமாண செண்டினல் ரேடார்கள்!

  ஒப்பந்தத்திற்கு காரணமான நாசம்ஸ் ஏவுகணையை பொறுத்தவரை, அது உள்ளான அடுக்கு பாதுகாப்பு, மேற்பரப்பு-வானில் பாயும் ஏவுகணைகள், துப்பாக்கி அமைப்புகள் மற்றும் எய்ம்-120சி-7 அம்ராம்ஸ் (மேம்பட்ட நடுத்தர அளவிலான காற்று-வான் ஏவுகணைகள்) போன்ற பல்வேறு ஆயுதங்களின் கலவையாகும். கிடைக்கப்பெற்ற தகவலின் படி, இந்த ஏவுகணையானது மூப்பரிமாண செண்டினல் ரேடார்கள், ஃ பயர் டிஸ்ட்ரிபூஷன் சென்டர் மற்றும் கமாண்ட் அன்ட் கண்ட்ரோல் யூனிட்களின் கீழ் செயல்படும் திறனையும் கொண்டுள்ளது.


 • பாரக் -8!

  தலைநகர் மீதான பாதுகாப்பு கவசத்தின் இரண்டாவது அடுக்கு ஆனது மொபைல் எஸ்-400 அமைப்புகளால் பாதுகாக்கப்படும். அதற்கு அடுத்தபடியாக அடுக்கு ஆனது டி ஆர் டி ஓ உருவாக்கிய பல்லிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு முறையால் பாதுகாக்கப்படும். அதன் பிறகு, டி ஆர் டி ஓ மற்றும் இஸ்ரேலிய ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்ட பாரக் -8 எனும் நடுத்தர-தூர மேற்பரப்பு-வான் ஏவுகணை அமைப்புகள் பாதுகாப்பு பணிகளை புரியும்.


 • சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு கவுன்டர் அட்டாக்!

  ஒருபக்கம் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே முன்னேற்றப்பட்ட போர் விமானங்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி செய்வதற்கான ஒரு இரகசிய ஒப்பந்தம் நடைபெற்று வருவதாகவும், இதன் மூலம் சீனா தனது இராணுவ பலத்தை விரிவாக்குவதாகவும் தகவல்கள் வெளியாகின. மறுபக்கம், பென்டகனின் 2019 ஆண்டிற்கான ஏவுகணை பாதுகாப்பு விமர்சனத்தில் (MDR) உலகில் மிகவும் செயல்திறன்மிக்க நில-அடிப்படையான பல்லிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணை திட்டத்தை சீனா கொண்டுள்ளது என்று கூறியது.


 • சந்தேகமும் இல்லை!

  இம்மாதிரியான தகவல்களை கொண்டே இந்தியா தனது பாதுகாப்பு வட்டத்தை பலப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது என்பது வெளிப்படை. உண்மையிலேயே பாகிஸ்தானும் சீனாவும் ரகசியமாக பணியாற்றி வந்திருப்பின், இந்தியாவின் இந்த குறிப்பிட்ட நகர்வு ஆனது அந்நாடுகளுக்கான கவுன்டர் அட்டாக் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தலைக்கு மேல் தொங்கும் கத்தி போல பாகிஸ்தானையும், சீனாவையும் கொண்டுள்ள இந்தியா, சரியான நேரத்தில் தனது பாதுகாப்பு அமைப்பில் மிகச் சிறந்த நகர்வு ஒன்றை நிகழ்த்தி உள்ளது. இது பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு சரியான கவுன்டர் அட்டாக் ஆக அமையும் என்பதிலும் எந்த சந்தேகமும் வேண்டாம். அப்படி என்ன நகர்வு? அப்படி என்ன கவுன்டர் அட்டாக் என்பதை பற்றி விரிவாக காணலாம்.

   
 
ஆரோக்கியம்