Back
Home » ஆரோக்கியம்
உங்களுக்கு குடல்ல பிரச்சினை இருக்கானு எப்படி கண்டுபிடிக்கலாம்? அதோட அறிகுறி என்ன?
Boldsky | 12th Jun, 2019 11:15 AM
 • பாதிக்கப்பட்ட ரிப்போர்ட்

  சிடிசி எமிடெமிலாஜி படி ஒவ்வொரு வருடமும் 100, 000 மக்களில் 5-30 மக்கள் இந்த குடல் அழற்சி நோயால் பாதிப்படைகின்றனர் என்று அமெரிக்க ரிப்போர்ட் கூறுகிறது. சராசரியாக 100, 000 பேர்களில் 60-100 நபர்கள் பாதிப்படைகின்றனர். மத்திய கிழக்கு பகுதிகளில் இந்த நோய் வருவது குறைவாக இருந்தாலும் இதன் பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  MOST READ: இந்த மந்திரத்த தினம் சொன்னீங்கன்னா உங்க முகத்துலயும் இப்படி தேஜஸ் பொங்குமாம்...


 • காரணங்கள்

  இந்த மாதிரி குடல் அழற்சி நோய் வருவதற்கு சரியான காரணங்கள் தெரியவில்லை. சூழ்நிலை காரணிகள் மற்றும் மரபணு காரணிகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சில நபர்களுக்கு மட்டும் இந்த பாதிப்பு ஏன் ஏற்படுகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.


 • நோய்க் காரணிகள்

  சில காரணிகள் தான் இந்த குடல் அழற்சி நோய் வரக் காரணமாக அமைகிறது. அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.


 • வயது

  15-40 வயதை அடைந்தவர்கள் இதனால் அதிகளவு பாதிப்படைகின்றனர். 40 க்கு மேலே இதன் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கூடுகிறது. 60-65 வயதில் பாதிப்பு அதிகம் தான்.

  MOST READ: கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்... அப்பறம் ஏன் வெயிட் பண்றீங்க...


 • இன வேறுபாடு

  இந்த நோய் குறிப்பாக யூதர்களை தாக்குகிறது. ஆனால் காலப்போக்கில் சூழ்நிலைக் காரணிகளால் இந்த பாதிப்பு எல்லோரையும் பாதிக்கும் வண்ணம் மாறுபட்டு கொண்டு வருகிறது.


 • மரபணு

  உங்கள் குடும்பத்தைச் சார்ந்த யாராவது குடல் அழற்சி நோயால் பாதிப்படைந்து இருந்தால் உங்களுக்கும் இந்த நோய்த்தாக்கம் வரலாம். 25% குடல் அழற்சி நோய் குடும்பத்தில் யாராவது அல்சரேடிவ் கோலிடிஸ் மற்றும் க்ரோன் நோய் பெற்றிருப்பதால் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 • புகைப் பிடித்தல்

  புகைப்பிடித்தலும் க்ரோன் நோயை அதிகரிக்க செய்கிறது. எனவே புகைப்பிடித்தலை நிறுத்தினாலே போதும் நோயின் தீவிரத்தை ஓரளவு குறைக்க முடியும். அதே மாதிரி புகைப்பிடித்தல் அல்சரேடிவ் கோலிடிஸ் நோயை அதிகரிப்பதில்லை. மாறாக நோயெதிப்பு மண்டலத்தை குறைத்து நோயை தீவிரப்படுத்தி விடும். எனவே குடல் அழற்சி நோயை சரி செய்ய வேண்டும் என்றால் முதலில் புகைப்பதை நிறுத்த வேண்டும்.


 • உணவுப் பழக்கம்

  எண்ணெய்யில் பொரித்த, கொழுப்பு அதிகமுள்ள, அதிக சர்க்கரை உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிருங்கள். இது க்ரோன் நோயை அதிகரிக்கும். நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள் குடல் அழற்சி நோய் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

  MOST READ: உங்க எதிர்கால அதிர்ஷ்டத்த சொல்லப்போற ரேகை இதுதான்... உங்களுக்கு எப்படி இருக்குனு பாருங்க...


 • பால் அழற்சி

  உங்கள் குழந்தைகளுக்கு பால் அழற்சி இருந்தால் அதை தவிருங்கள். ஏனெனில் அழற்சி யினால் அல்சரேடிவ் கோலிடிஸ் ஏற்பட வாய்ப்புள்ளது.


 • உடல் பருமன்

  உடல் பருமன் உடையவர்கள் கூட குடல் அழற்சி நோயால் பாதிப்படைகின்றனர். உடல் பருமன் நோயின் அறிகுறிகளை அதிகமாக்கி விடும்.


 • குடல் சுவர் அழற்சி

  இது கேஸ்ட்ரோஎண்ட்ரிட்ஸ் என்று கூறப்படுகிறது. குடல் சுவரில் ஏற்படும் தொடர்ச்சியான அழற்சி இதை ஏற்படுத்துகிறது. இது பொதுவாக சால்மோனெல்லா அல்லது காம்பிளோபாக்டர் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. 15 வருஷம் குடல் சுவரில் அழற்சி இருப்பவர்களுக்கும் குடல் அழற்சி நோய் வர அதிக வாய்ப்புள்ளது.


 • அப்பன்டெக்டோமி

  அப்பன்டிக்ஸ் ஆப்ரேசன் உங்களுக்கு அல்சரேடிவ் கோலிடிஸ் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. 20 வயதிற்கு முன்னரே அப்பன்டிக்ஸ்லில் ஏற்படும் அழற்சியை கண்டறிந்து சிகிச்சை பெறுவது நல்லது.


 • வலி நிவாரணிகள்

  ஸ்டீராய்டு இல்லாத மருந்துகள், அழற்சி எதிர்ப்பு பொருட்கள் போன்றவை குடல் அழற்சியை ஏற்படுத்தும். நாள்பட்ட அல்லது மாதத்திற்கு 15 நாட்களுக்கு இந்த மருந்தை சாப்பிட்டுக் கொண்டு வரும் போது இந்த பாதிப்பு ஏற்பட நிறையவே வாய்ப்புள்ளது. பராசிட்டமல், டைலெனோல் போன்றவற்றால் எந்த பாதிப்பும் இல்லை.
  வாய்வழி கர்ப்பத்தடை மாத்திரைகள் மற்றும் ஹார்மோன் மாற்று சிகிச்சை
  கர்ப்பத்தடை மாத்திரைகள் மற்றும் ஹார்மோன் மாற்று சிகிச்சை தெரபி போன்றவை குடல் அழற்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

  MOST READ: காப்பர் டி - காண்டம் ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? உடலுறவின்போது எது பெஸ்ட்?


 • முடிவு

  இந்த நோய் வராமல் தடுக்க ஆபத்தான காரணிகளை தவிர்ப்பது நல்லது. இதனால் நோய் வராமல் குறைக்கலாம். மேலும் குடலில் ஏற்படும் அழற்சியை ஆரோக்கியமான வாழ்க்கை முறை கொண்டு சரி செய்யலாம்.

  புகைப் பிடித்தலை தவிருங்கள்
  உடல் எடையை குறையுங்கள்

  நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள், பதப்படுத்தப்பட்ட மற்றும் செயற்கை சர்க்கரைகளை தவிருங்கள்.
  வலி நிவாரணி மருந்துகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டாம்
  வாய்வழி கர்ப்பத்தடை மாத்திரைகளுக்கு பதிலாக வேறு வழியை பின்பற்றலாம்
  மாதவிடாய் ஒழுங்கற்ற தன்மை, ஹார்மோன் சிகிச்சைக்கு மருத்துவரை அணுகி அதன் மூலம் சிகிச்சை பெற்று கொள்வது நல்லது.
குடல் அழற்சி நோய் என்பது குடலில் ஏற்படும் ஒருவித செரிமானக் கோளாறு ஆகும். இது பார்ப்பதற்கு அல்சரேடிவ் கோலிடிஸ் மற்றும் க்ரோன் நோய் மாதிரி இருந்தாலும் இதன் அறிகுறிகள் கொஞ்சம் வித்தியாசமானது.

நாள்பட்ட அறிகுறிகள் தெரியும் போது மட்டுமே இதன் அழற்சியை கண்டறிய இயலும். இதனால் தான் சில நோயாளிகளில் இந்த இரண்டு நோய்களையும் வித்தியாசப்படுத்துவது என்பது கடினமாக உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.

   
 
ஆரோக்கியம்