Back
Home » திரைத் துளி
"உங்கள் அபத்தமான வார்த்தைகளுக்கு தமிழர் வரலாறு பதில் தரும்"... பா.ரஞ்சித்துக்கு கருணாஸ் பதிலடி!
Oneindia | 12th Jun, 2019 12:43 PM
 • சாதி அடையாளம்

  "சாதியே கூடாது என்று பல ஆண்டுகளாக தமிழ்ச்சமூகத்தில் பலர் உறக்க வலியுறுத்திக்கொண்டே இருந்தாலும், சாதி அடையாளத்தையே தலைக்கவசமாய் தூக்கிகொண்டு திரிகிறார்! பல பொய்யான வரலாற்றை தனக்கு சாதகமாக திரிக்கிறார், தலித்தியம் பேசுகிற இயக்குநர் இரஞ்சித்!


 • பிற்போக்குவாதிகள்

  இவர் (ரஞ்சித்) போன்ற பல பிற்போக்கு வாதிகள் தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி புகழடைவதையே கொள்கையாக கொண்டுள்ளனர். நாம் அவர்களுக்கெல்லாம் பாடம் நடத்தி நேரத்தை விரயம் செய்யக் கூடாததுதான்! ஆனால் தமிழரின் மாபெரும் அடையாளமான தமிழ்ப் பேரரசன் இராசராசச்சோழனைக் கொச்சைப்படுத்தும் போது சில விடயங்களை பேச வேண்டியிருக்கிறது.


 • இழிவான பேச்சு

  சமீபத்தில் ஏதோ ஒரு விழாவில் இராசராசச் சோழனை எந்த அளவுக்கு இழிவாகப் பேச முடியுமோ அந்த அளவுக்கு இழிவாக பேசியுள்ளார். அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது. அவர் பேசியதின் சாரம் - மூன்று வகை, அதற்கு மட்டும் இந்த பதில்: "இராசராசச்சோழனை அனைத்து சாதியினரும் கொண்டாடுகின்றனர். இராஜராஜன்தான் எங்கள் (தலித்) நிலங்களை பறித்தார். பெண்கள் இராசராசச் சோழன் காலத்தில் இழிவாக நடத்தப்பட்டனர்" மேற்கண்ட இந்த மூன்றின் சாரம்தான் ரஞ்சித்தின் பேச்சு.


 • ரஞ்சித்தின் கொள்கை என்ன?

  அனைத்து சாதியினரும் கொண்டாடுவதன் மூலம் இராசராசச்சோழன் சாதி கடந்த தமிழனாக இருக்கிறார்! அதில் என்ன பிழை இருக்கிறது. தமிழனாக இருக்கக்கூடாது ஒரு குறிப்பிட்ட சாதியினராக இருக்க வேண்டும் என்கிறாரா? ஏதாவது ஒரு முடிவுக்கு வாருங்கள் ரஞ்சித்! சாதி இருக்கணுமா? வேண்டாமா? சாதி ஒழித்த சமூகம் தான் உங்கள் நோக்கமா? இல்லை சாதிய மையவாதம் மட்டும்தான் உங்கள் அரசியல் உங்கள்கொள்கையா? வெளிப்படையாக தர்க்க ரீதியாக பேசுங்கள்.


 • வரலாற்றை படித்ததுண்டா?

  இராசராசச்சோழன் வரலாற்றை என்றாவது முழுமையாக படித்ததுண்டா! வரலாற்றுச் சான்றுகளோடு கருத்துரைக்க பழகுங்கள் பொத்தாம் பொதுவாக உரைப்பதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்! எங்கள் நிலத்தை இராசராசசோழன் பறித்தார் என்கிறீர்களே! எதை வைத்து சொன்னீர்கள்! என்ன சான்று? "பறையர்களுக்கு இராசசச் சோழன் இறையிலி நிலம் வழங்கினார்" இதுதான் வரலாறு. பல்வேறு நூல்களிலும் கல்வெட்டிலும் இதற்கான தரவுகள் காணக்கிடக்கின்றன! அதில் ம. செந்தமிழன் அவர்கள் எழுதிய ஆய்வு மிக முக்கியச் சான்று! அவர் சான்றுகளை அப்படியே வரிசைப்படுத்துகிறேன். அது மட்டுமின்றி கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதிய "இராசராசேச்சரம்" உள்ளிட்ட பல கல்வெட்டு நூல்கள் சான்று காட்டுகின்றன சில தஞ்சை பெரியகோயில் கோயில் சுற்றிலும் இருப்பதையும் அறிந்து கொள்ளலாம்!


 • சான்று:1

  "உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் தஞ்சாவூர் எடுப்பித்த திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜீச்வரம் உடைய பரமஸ்வாமிக்கு வேண்டும் நிவந்தங்களுக்குத் தேவதானமாகச் சோழமண்டலத்து புறமண்டலங்களிலும் உடையார் ஸ்ரீ இராஜராஜதேவர் குடுத்த ஊர்களில், ஊர்நத்தமும் ஸ்ரீ கோயில்களும் குளங்களும் ஊடறுத்துப்போன வாய்க்கால்களும் பறைச்சேரியும் கம்மாணசேரியுஞ் சுடுகாடும் உள்ளிட்டு இறைஇலி நிலங்களும்...' (இராஜராஜேச்சரம், முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் /2010/ பக் 426)


 • கல்வெட்டு கூறும் தகவல்

  இக்கல்வெட்டு கூறும் தகவல், 'இராசராச சோழன் பெருவுடையார் கோயிலுக்கான தேவதான நிலங்களாகக் கொடுத்த ஊர்களில் பறைச்சேரியும், கம்மாள சேரியும் உண்டு. மேலும் இந்தச் சேரிகளுக்கான நிலங்கள் இறையிலி நிலங்கள் ஆகும். அதாவது, பறைச் சேரி, கம்மாளச் சேரி மக்கள் அனுபவிக்கும் நிலங்களுக்கு அரசின் வரி விதிப்பு இல்லை. இதிலிருந்து நாம் இப்போது அறிந்து கொள்ளும் செய்தி இறையலி நிலங்களை பறையர்களுக்குக் கொடுத்தார் என்பதே!.


 • பிராமணர்களுக்கு தரவில்லை

  'சோழச் சருப்பேதிமங்கலம் ஆயிரம் பிராமணர்க்கு பங்கெழுதி கூறிட்டுக்கொள்கவென்று திருமுகப் பிரசாதஞ்செய்தருளி சம்கரித்து கூறிட்டமையில்.....இவ்வூர் பங்கெழுதி கரை பறித்து கையோலை வாங்கின...' (சோழர்கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல் / முனைவர் மே.து.ராசுகுமார் /2004/ பக் 152, 153). மேற்படி கல்வெட்டின் முழுமையான வரிகள் காட்டும் பொருள், பிராமணர்களுக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலங்கள் அவர்களது முழு உரிமைக்கு விடப்படவில்லை. மாறாக, சில ஆண்டுகளுக்கு ஒரு முறை கரையோலை முறையில் இடம் மாற்றி வேறு இடம் தரப்பட்டது.' இதன் மூலம் பிராமணர்கள் குறிப்பிட்ட நிலத்தின் மீது சொந்தம் கொண்டாடும் முறை தடுக்கப்பட்டது. இது நில அபகரிப்பை மீட்டு அனைவர்க்கும் வழங்கப்பட்டதற்கான சான்று!


 • தஞ்சை பெரிய கோயில்

  "கேரளாந்தகன் திருவாயில் மெய்காப்பாளர், இராசராசன் திருவாயில் மெய்காப்பாளர், அணுக்கன் திருவாயில் மெய்காப்பாளர்" என்ற கல்வெட்டு வரிகள் உணர்த்தி நிற்கும் சேதி, "தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் சொத்துக்களை 118 ஊர்களில் ஊருக்கு ஒரு மெய்க்காப்பாளர் என்ற முறையில் நிர்வகித்து வந்தனர். இவர்களைப் பராமரிக்கும் பொறுப்பு அந்தந்த ஊர் மக்களுக்கே விடப்பட்டது. இக்கல்வெட்டை ஆய்ந்த முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் பின் வருமாறு கூறுகிறார்: "தஞ்சைப் பெருங்கோயிலின் சொத்துகள் எவற்றையும் மன்னனது படையினரோ அல்லது அலுவலரோ பாதுகாக்கவில்லை. நூற்றுப் பதினெட்டுக்கும் மேற்பட்ட சோழ மண்டல ஊர்மக்களே பாதுகாத்தனர் என்பது குறிப்பிடத் தக்க செய்தியாகும். மக்களாட்சி நெறிக்கு இதனினும் சிறந்த சான்றொன்று இருக்க முடியாது' (இராஜ ராஜேச்சரம், முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் /2010/பக் 432)


 • தேவரடியார்

  தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் செய்கிறவர்கள் அல்ல. ரஞ்சித் அவர்களே! இனிமேலாவது தேடிப் படியுங்கள் உங்கள் அபத்தமான வார்த்தைகளுக்கு தமிழர் வரலாறு பதில் தரும்.", இது போல் நிறைய ஆதாரங்களை குறிப்பிட்டு பா.ரஞ்சித்தின் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் கருணாஸ்.

  ரஞ்சித் அவர்களே! இனிமேலாவது தேடிப் படியுங்கள் உங்கள் அபத்தமான வார்த்தைகளுக்கு தமிழர் வரலாறு பதில் தரும்.
சென்னை: இராஜராஜச்சோழனின் வரலாறு தெரியாமல் இயக்குநர் பா.ரஞ்சித் கொக்கரிப்பதாக தெரிவித்துள்ளார் நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ்.

ராஜராஜ சோழன் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசிய கருத்துகள் கடும் கண்டனத்துக்கு ஆளாகி வருகிறது. அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பா.ரஞ்சித்துக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ரஞ்சித்தின் கூற்றுக்கு எதிராக பல்வேறு ஆதாரங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,

நாளைய போட்டிக்கு முன்பு சூப்பர் ஸ்டார் படம் பார்த்த தோனி, பாண்டியா, ஜாதவ், ராகுல்

   
 
ஆரோக்கியம்