Back
Home » Business
நாள் முழுக்க பயன்படுத்தினாலும் ரூ.391தான்... யாரும் வராவிட்டால் பட்டினிதான் - பாலியல் தொழிலாளி
Good Returns | 12th Jun, 2019 02:18 PM
 • இது மட்டுமல்ல ஆப்பிரிக்கா

  ஆப்பிரிக்கா என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது, டிஸ்கவரி சேனலில் கண்டுகழித்த, அங்குள்ள கறுப்பின மக்களும், ஆப்பிரிக்காவின் ஏழு அதிசயங்களில் ஒன்றான செரிங்கெட்டி (Serengeti) விலங்குகள் சரணாலயமும் தான் நம்முடைய மனக்கண் முன் வந்த நிற்கும். அதற்கு பிறகுதான், அது ஒரு இருண்ட கண்டம் என்பதும், கூடவே மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள சகாரா பாலைவனமும், தெற்குப் பக்கம் உள்ள செழிப்பான தென்
  ஆப்பிரிக்கா போன்ற நாடுகள்தான்.


 • வறுமையின் பிடியில் ஆப்பிரிக்க நாடுகள்

  இதைத் தவிர்த்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும், மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளான சோமாலியா, உகாண்டா, நைஜீரியா, சியாரா லியோன், காமரூன் போன்ற நாடுகளும் உள்ளன என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்தாலும், பாடப்புத்தகத்தில் படித்தோடு அவற்றை கடந்து வந்துவிட்டோம்.


 • சியாரா லியோன்

  மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியாரா லியோன் என்பது 71740 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சிறிய நாடாகும். சுமார் 70 லட்சம் மக்கள் தொகை கொண்ட இதன் தலைநகரம் ஃப்ரீ டவுன். இயற்கை அன்னை வழங்கிய அனைத்து வளங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும், அவை அனைத்தும், அங்குள்ள ஆட்சியாளர்களால் சுரண்டப்பட்டு தங்களின் சொந்த உபயோகத்திற்கு பயன்பட்டனவே தவிர மக்களுக்கு துளிகூட பயன்படவில்லை என்பது சோகமான விசயமாகும்.


 • ஒரு பயனும் இல்லை

  தங்களை ஆளும் அரசுகளால் தங்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை என்று நினைத்து, இந்த நாட்டிலுள்ள மக்களில் பெரும்பாலான பெண்கள், சரி நாமாவது மற்ற ஆண்களுக்கு பயன்படலாமே என்ற உயர்ந்த எண்ணத்தில் செக்ஸ் தொழிலுக்கு வந்துவிட்டனர்.


 • செக்ஸ் தொழில்தான் பிரதானம்

  சியாரா லியோன் நாட்டில் வறுமை வரிசை கட்டி தாண்டவமாடுவதால், அங்குள்ள பெண்கள், செக்ஸ் தொழிலுக்கு தங்களை பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டனர். பெண்களில் சுமார் 3 லட்சம் பேர் செக்ஸ் தொழிலையே பிரதானமாக கொண்டுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது இபோலா வைரஸ் தாக்குதல் அதிகமாக இருப்பதால், பெரும்பாலான பெண்கள் தெருக்களிலேயே அலைந்து திரிந்து ஆண்களை அழைத்துச்சென்றுவிடுகின்றனர். இதனால் சில பெண்களுக்கு ஆண்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுகிறது.


 • ஒரு நாளைக்கு 7 முதல் 8 ஆட்கள்

  இங்குள்ள பெண் செக்ஸ் தொழிலாளியான ஃபட்மடா கனு (Futmada Kanu) என்பவர், தன்னுடைய சோகக் கதையை விவரிக்கும்போது, என்றைக்காவது ஒரு சில நாட்களில் மட்டுமே, ஒரே நாள் இரவில் 7 முதல் 8 வாடிக்கையாளர்கள் வருவதாக கூறினார். அதோடு பல சமயங்களில் வெறும் 40 ரூபாய்க்காக 2 நிமிடம் மட்டுமே செக்ஸ் வைத்துக்கொள்வேன். என்று ஏக்கப்பெருமூச்சோடு கூறினார்.


 • ஒரு நாளுக்கு 40 ரூபாய் தான்

  என்றாவது ஒரு நாள் செக்ஸ் உறவு வைத்துக்கொள்வதற்கு தெருக்களில் ஆண்கள் கிடைக்கவில்லை என்றால், அன்று முழுவதும் பட்டினி என்று தான் அர்த்தம். செக்ஸ் உறவு தேவைப்படும் ஆண்கள், என்னை அவர்களுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று, ஒரு நாள் முழுவதும் என்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டு 40 ரூபாய் மட்டுமே கொடுப்பார்கள் என்று வேதனைப்பட்டார்.


 • என்னுடைய உடம்பின் விலை ரூ.391 மட்டுமே

  என்னுடைய உடம்புக்கான ஒரு நாள் விலை ரூ.391 மட்டுமே. இந்த வருமானத்தில் ஆணுறை வாங்குவதற்காகவே 196 ரூபாயை செலவழிக்கிறேன். மிச்சம் உள்ள பணத்தில் தான் என்னுடைய குடும்பத்தையும் கவனித்துக் கொள்கிறேன். எனக்கு 2 உடன் பிறந்த சகோதரிகள் உள்ளனர். அவர்களையும் நான்தான் கவனித்துக் கொள்கிறேன். அவர்களுக்காகவே நான் இந்த செக்ஸ் தொழிலுக்கு வந்தேன்.


 • நான் நர்ஸாக வேண்டும்

  என்னுடைய சகோதரிகளின் பள்ளிக்கட்டணத்தையும் நான்தான் செலுத்தி வருகிறேன். என்னுடைய அம்மா எதிர்பாராத விதமாக இபோலா வைரஸ் தாக்குதலில் இறந்துவிட்டார். வேறு வழியில்லாமல் குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவே இந்த செக்ஸ் தொழிலுக்கு வந்துவிட்டேன் என்று விரக்தியாக கூறினார். என்னுடைய கனவு என்னவென்றால், என்றாவது ஒரு நாள் செவிலியராக வேண்டும் என்பதுதான் என்றார் ஏக்கத்துடன்.


 • செல்ஃபோனையும் லவட்டிட்டான்

  மரியமா ஃபோபானா என்ற பெண்மணி கூறுகையில், கடந்த முறை என்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்ட ஆண், அவருடைய செக்ஸ் தேவை முடிந்த உடனே, நான் சேர்த்து வைத்திருந்த பணத்தையும், என்னுடைய செல்ஃபோனையும் திருடிச்சென்று விட்டான். நான் அதை தடுக்க முயற்சி செய்து அவனுடன் தகராறு செய்போது, அவன் என்னுடைய முகத்திலும் உடம்பிலும் கடுமையாக தாக்கிவிட்டு ஓடிவிட்டான், என்றார் இயலாமையோடு.


 • சிறைக்கு போவோம்

  லட்சக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் இருந்தாலும் அவர்களை அவ்வப்போது போலீசார் கைது செய்கின்றனர். அபராதமும் போடுவதுண்டாம். அதை கட்ட முடியாமல் சிறைக்கு சென்று தண்டனை அனுபவிப்பார்களாம். சில போலீஸ்காரர்களுக்கும் தங்களை இம்சிப்பார்கள் என்கிறார்கள். பல பாலியல் தொழிலாளிகள் பட்டினியோடு வந்து மறுபடியும் தொழிலுக்காக சாலையில் நிற்பார்களாம்.


 • தேய்க்கும் இயந்திரமா என்ன

  பெண்களையும் தன்னைப்போல அனைத்து உரிமைகளும் உள்ள மனித ஜீவனாக நினைக்காமல், தன்னுடைய ஒரு நிமிட சுகத்திற்காக தன் உடலை தேய்க்கும் இயந்திரமாக மட்டுமே பெரும்பாலான ஆண்கள் நினைப்பதால் தான் இப்படிப்பட்ட பெண்கள் தங்கள் உடலை விற்பதற்காக வீதிக்கு வரவேண்டிய சோகமான நிலை ஏற்படுகிறது.
ஃப்ரீ டவுன்: தினமும் குறைந்தபட்சம் இருவருடன் தன்னுடைய படுக்கையை பகிர்ந்து கொண்டால் தான் அன்றாட சாப்பாட்டுக்கு 40 ரூபாய் கிடைக்கும் என்ற பரிதாப நிலையில் உள்ளது மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியாரா லியோன். ஒரு டாக்குமென்ட்ரி படத்திற்காக தனது சோக கதையை கூறியுள்ளார்.

சில நேரங்களில் என்னுடன் செக்ஸ் உறவு கொள்ள வருபவர்கள், செக்ஸ் அனுபவித்துவிட்டு நான் வைத்திருக்கும் பணத்தையும் வலுக்கட்டாயமாக பிடுங்கிக்கொண்டு செல்வது வாடிக்கையான ஒன்று என செக்ஸ் தொழிலாளி ஒருவர் தன்னுடைய சோகக் கதையை தெரிவித்தார்.

பெண்களையும் தன்னைப்போல அனைத்து உரிமைகளும் உள்ள மனித ஜீவனாக நினைக்காமல், தன்னுடைய ஒரு நிமிட சுகத்திற்காக தன் உடலை தேய்க்கும் இயந்திரமாக மட்டுமே பெரும்பாலான ஆண்கள் நினைப்பதால் தான் இப்படிப்பட்ட பெண்கள் தங்கள் உடலை விற்பதற்காக வீதிக்கு வரவேண்டிய சோகமான நிலை ஏற்படுகிறது.

   
 
ஆரோக்கியம்