Back
Home » Business
நவரத்னமாய் ஜெலிக்கும் 9 திட்டங்களே காரணமாம்.. ஜெகனின் வெற்றி பாதைக்கு .. பேஷ் பேஷ் நல்ல திட்டம்!
Good Returns | 13th Jun, 2019 01:29 PM
 • ஒய்.எஸ்.ஆர் அசரா (YSR Aasara)

  இந்த திட்டத்தில் பெண்கள் கூட்டுறவு சங்கத்தில் பெற்ற கடன்கள் நான்கு தவணைகளாக தள்ளுபடி செய்யபடுமாம். அதோடு 0% வட்டியில் கடன்கள் தரப்படுமாம்.


 • ஓய்வூதியம் (Pension Scheme)

  இந்த ஓய்வூதியம் திட்டத்தினை பெறுவதற்கான வயதுத் தகுதி 65-லிருந்து 60-ஆக குறைக்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு மூவாயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


 • அம்மாவொடி (Amma Vodi)

  அம்மாவொடி திட்டத்தில் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை செல்லும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.500 உதவி தொகையுகம், இதே 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை செல்லும் குழந்தைஅக்ளுக்கு 70 ரூபாயும், மாற்று திறனாளிகளுக்கு மாதம் 1000 ரூபாயும் வழங்கப்படுமாம்.


 • ஏழைகளுக்கு வீடு (Housing Scheme for the poor)

  அடுத்த ஐந்து ஆண்டுகளில் 25 லட்சம் பேருக்கு வீடுகள் இத்திட்டத்தில் கட்டித்தர ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி உறுதியளித்திருந்தது. இந்த வீடுகள் பெண்களின் பேரில் பதிவு செய்யப்பட்டுமாம். அதோடு வீடு கட்டுவதற்கு வட்டியில்லாமல் கடன் வழங்கப்படுமாம் இத்திட்டத்தில்.


 • ஆரோக்ய ஸ்ரீ (Aarogyasri)

  ஏழைகளுக்கு தரமான மருத்துவ சேவையை தருவதற்காக ஆந்திர மாநில அரசு செயல்படுத்திவரும் நல திட்டங்களில் முதன்மையானது ஆரோக்ய ஸ்ரீ. இந்த திட்டத்தின் கீழ் வீட்டின் தலைவர் உடல் நிலையால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, அல்லது குடும்பம் தன்னை தானே பராமரிக்க உதவுகிறது என்றாலோ, சிறு நீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கோ ஓய்வூதியங்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார் ஜெகன்.


 • பொறியியல் படிப்பவர்களுக்கு கல்வி கட்டணம் இலவசம் (Fee reimbursement)

  ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்தபோது பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிர்ந்தது. இது தற்போது முழு கட்டணத்தையும் திருப்பி அளிப்பதுடன் சேர்த்து, உணவு மற்றும் உறைவிட செலவுகளுக்கு ஆண்டுக்கு 20,000 இலவச நிதி உதவி வழங்கப்படும் என்றும், கலந்தாய்வு வழியாக பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் 1 -1.5 லட்ச ரூபாய் மதிப்பிலான கட்டணம் அரசால் நேரடியாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார் ஜெகன்.


 • ஜலயாக்னம் (Jala Yagnam)

  இந்த திட்டத்தின் கீழ் போலாவரம் திட்டம் உள்ளிட்ட நிறைவேற்றப்படாமல் உள்ள அனைத்து நீர்ப்பாசன திட்டங்களையும் அரசு நிறைவேற்றும் எனவும் உறுதி மொழி அளித்திருந்தது இந்த அர்சு.


 • மதுவுக்குத் தடை (Prohibition of Alcohol)

  2024-ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் முழுமையாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் என அவர் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அதோடு மாநிலம் முழுவதும் மூன்று கட்டங்களாக மது விற்பனை தடை செய்யப்படும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.


  பதவியேற்றதும் செய்தது என்ன?
  மதுவிலக்கை அமல்படுத்துவதன் முதன் கட்டமாக சட்டத்துக்கு புறம்பான மதுக்கடைகளை கண்டறிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் ஜெகன் கூறியுள்ளார். அதோடு ஊரக பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வு பணியாளர்களுக்கான ஊதியம் மாதம் மூவாயிரத்திலிருந்து பத்தாயிரமாக உயர்த்தப்படும் என அறிவித்திருக்கிறார். மூத்தோர்களுக்கான மாத ஓய்வூதியத் தொகை இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 2500 ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


 • முதயோர் உதவி தொகை

  இந்த நிலையில் பதவியேற்ற நாளிலிருந்து இன்று வரை பல அதிரடி திட்டங்களை அதிரடியாக செயல்படுத்தியும் அறிமுகப்படுத்தியும் வருகிறார். குறிப்பாக இரண்டாயிரம் ரூபாயாக இருந்த முதியோர் உதவித் தொகையை நான்கு வருடங்களில் நான்கு கட்டங்களில் மூவாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கான அறிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளார்.


 • 5 துணை முதலமைச்சர்கள்

  இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் முதல்வராக பதவியேற்ற பின், ஒரு வாரம் கழித்து ஜூன் 8ம் தேதி 25 பேர் அவரது அமைச்சரவையில் இணைந்தனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் 14 பேர் பேர் பிற்படுத்தப்பட்ட பட்டியலின மலைவாழ் மற்றும் இதர சிறுபான்மையினராகும். அதோடு முதல் முறையாக ஆந்திர அரசில் ஐந்து பேர் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளனர்.


 • ஒய்.எஸ்.ஆர் ரைது பரோசா (YSR Rythu Bharosa)

  ஜெகன் தான் ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்கும் குறைவாக விவசாயிகளுக்கு ரூ 50,000 நிதி உதவி அளிக்கப்படும் என உறுதியளித்திருந்தார். அதாவது நான்கு ஆண்டுகளில் தலா ரூ.12,500 ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் வழங்கப்படும் என்றும், மேலும் வட்டியில்லா கடன்கள், முதல் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு இலவச நிதி உதவி வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். பகல் பொழுதில் 9 மணி நேர இலவச மின்சாரம், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் இலவச குளிர் பதன கிடங்குகள், உணவு பதப்படுத்தும் மையங்கள் உள்ளிட்ட திட்டங்கள் விவசாயிகளின் நலன் பொருட்டு செயல்படுத்தப்படும் எனவும் வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு இதன் மூலம் இயற்கை பேரழிவு நிதியாக 2000 கோடி ரூபாயாகவும், சந்தை உறுதி படுத்தலுக்காக 3000 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும் என்றும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளதாம்.
அமராவதி : ஆந்திராவின் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்தே பல சமூக நல திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். ஜெகன் மோகன் இந்த அளவுக்கு பெரும்பான்மையான இடங்களை பிடித்து ஆட்சியைப் பிடிக்க இந்த 9 நல திட்டங்கள் (நவரத்னலு) குறித்த அவரது வாக்குறுதியும் ஒரு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆந்திராவில் கடந்த மக்களவைத் தேர்தலோடு சேர்த்து நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி அமோக வெற்றி பெற்றது. குறிப்பாக சட்டப்பேரவைத் தேர்தலில் 175 தொகுதிகளில் 151-ல் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளார் ஜெகன். மக்களவைத் தேர்தலிலும் 25 தொகுதிகளில் 22-ல் அவரது கட்சியே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிந்துபோனபிறகு இரண்டாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகன் மோகன். கடந்த மே மாத இறுதியிலேயே முதல்வராக பதிவியேற்றுக்கொண்டார்.

என்னய்யா கொடுமை இது.. தாஜ்மஹால்ல மூனு மணி நேரத்துக்கு மேல இருந்தா கட்டணம் அதிகமாம்

   
 
ஆரோக்கியம்