Back
Home » ஹீரோ
Actor dhanush: அண்ணனின் தோல்வியை சரி செய்ய தம்பி தனுஷ் முடிவு!
Oneindia | 27th Jun, 2019 12:35 PM
  • மூடி டைப்

    செல்வ ராகவன் ஏற்கனவே எப்போதும் மூடி டைப்பில் இருப்பார். சூர்யா நடித்து தான் இயக்கிய நந்த கோபால் குமரன் படம் படு தோல்வி அடைந்ததில் எப்போதும் போனும் கையும்தானாம். அதான் ட்வீட்டர் ஹேஷ்டேக் போட்டு தன் மனதைத் தேற்றிக்கொண்டு இருக்கார். மீறிப் போனால் குழந்தைகளிடம் விளையாட்டு. இதைப்பார்த்து வீடே அப்செட்டில் இருந்திருக்கிறது.


  • நொந்து போன தனுஷ்

    அண்ணனைப் பார்த்து நொந்து போனே தனுஷ், கொஞ்ச நேரம் எதுவும் பேசலையாம். தம்பி வருத்தப்படக் கூடாது என்று இயல்பாக இருக்க முயல, சரி சரி விடுன்னு அண்ணன் முதுகில் தட்டி அணைத்துக் கொண்டாராம் தனுஷ்.. பார்த்துக்கலாம் விடு...அடுத்து நிச்சயம் ரெண்டு பேரும் ஒண்ணு சேர்றோம்...


  • புதுப்பேட்டை மாதிரி

    நாம ரெண்டு பேரும் சேர்ந்து படம் பன்றோம்..காதல் கொண்டேன் புதுப்பேட்டை மாதிரி ஹிட் குடுக்கறோம். உன் கேரியரை காப்பாத்தித் தர வேண்டியது என் பொறுப்பு.நீ கதையை ரெடி பண்ணுன்னு சொல்ல, குடும்பமே சந்தோஷத்தில் இருக்கிறதாம் இப்போது.


  • இப்போதைக்கு தேதி இல்லை

    தனுஷே நினைத்தாலும் அண்ணனுக்கு இப்போதைக்கு தேதி குடுக்க முடியாதாம். சத்ய ஜோதி ஃபிலிம்ஸுக்கு ரெண்டு படம், கலைப்புலி தாணுவுக்கு ரெண்டு படம் என்று கமிட் ஆகி இருக்கும் தனுஷ், அடுத்த ஒன்றரை வருடத்தில் நான்கு படங்களையும் முடித்துக் கொடுத்துதுவார். அடுத்து செல்வராகவனுக்கு தேதி கொடுப்பார் என்று திரையுலகில் பேசிக்கொள்கிறார்கள்.




சென்னை: இயக்குநர் செல்வராகவன் அடுத்து ஒரு வெற்றி படத்தை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கார்.

என்னதான் நந்த கோபால் குமரன் வெற்றி படம்தான் என்று செல்வராகவன் ட்வீட் போட்டுக்கொண்டு இருந்தாலும், படம் தோல்வி எனும் உண்மை உண்மைதானே.

இதை செல்வ ராகவன் மனசாட்சி அவருக்கு உறுத்தி சொல்லாமலா இருக்கும்? மனிதர் வெளியில் மகிழ்ச்சியாக இருப்பது போல காமித்து கொண்டாலும், உள்ளுக்குள் செம அப்செட்.

   
 
ஆரோக்கியம்