Back
Home » உலக நடப்புகள்
உலக மக்கள் தொகை தினம்... இனப்பெருக்கம் ஒரு நாட்டுக்கு எவ்வளவு முக்கியம்?
Boldsky | 11th Jul, 2019 05:10 PM
 • இந்த தினத்தின் முக்கிய குறிக்கோள்கள்

  இந்த தினம் இளம் வயதினர்களுக்காக கொண்டாடப்படுகிறது.
  இளம் வயதினர் சிறு வயதிலேயே தவறாக கர்ப்பம் தரிப்பது போன்ற பிரச்சினைகளை தவிர்க்க வேண்டும் என்று பேசப்படுகிறது.

  சமூகத்தில் இருந்து பாலின வழக்கங்களை அகற்ற கற்பிக்கப்படுகிறது.
  பாலினம் பற்றிய கல்வி பெண்களுக்கும் ஆண்களுக்கும் அவசியம் என்பதை பற்றி எடுத்துக் கூறுகிறது.

  ஒவ்வொரு தம்பதியினருக்கும் இனப்பெருக்ககத்தின் முக்கியத்துவம் பற்றியும் அதன் சுகாதார தன்மைகள் பற்றியும் விளக்கமளிக்கப்படுகிறது.

  செக்ஸ் ரீதியாக பரவக் கூடிய நோய்கள் பற்றியும் அதை எப்படி தடுக்கலாம் குறித்தும் விழிப்புணர்வு செய்யப்படுகிறது.

  பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டம் பற்றியும், அவர்களுக்கான உரிமைகள் குறித்தும் விளக்கமளிக்கப்படுகிறது.

  பாலியல் தொடர்பான அறிவை வழங்குதல், திருமணத்திற்கு தயார்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்குதல் போன்ற செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

  MOST READ: இந்த ஊர்ல 69 நாளா சூரியன் மறையவே இல்லையாம்... என்ன ஆகப்போகுது பூமிக்கு?...


 • இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியம் :

  இனப்பெருக்க உறுப்புகள் ஆரோக்கியம் என்பது வெறும் உறுப்புகளை பாதுகாப்பது மட்டும் அல்ல. மன ரீதியாக, உடல் ரீதியாக மற்றும் சமூக நல்வாழ்வு நிலையில் அணுக வேண்டும். அப்பொழுது தான் இனப்பெருக்கம் வாயிலாக பரவக் கூடிய நோய்களை நாம் தவிர்க்க முடியும். இதன் மூலம் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பெற முடியும்.


 • இனப்பெருக்க உறுப்புகளின் பிரச்சினைகள்

  நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) படி, இனப்பெருக்க சுகாதார பிரச்சினைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.


 • கருப்பை நார்த்திசுக்கட்டிகள்

  இந்த கருப்பை நார்த்திசுக்கட்டிகள் ஒரு புற்றுநோய் கட்டுகள் மாதிரி பெண்களுக்கு ஏற்படுகிறது. பெண் குழந்தைகளின் சிறு வயதிலேயே ஏற்படும் இந்த கட்டிகள் பெண்களின் இனப்பெருக்க உறுப்பை பாதிக்கிறது. இந்த திசுக்கட்டிகள் கருப்பையின் சுவர்களை சுற்றி வளருகின்றன. இதனால் பெண்களுக்கு கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்படும்
  முதுகுவலி
  அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  அடிவயிறு மந்தமாக இருப்பது போன்ற உணர்வு
  வலி மிகுந்த மாதவிடாய்
  உடலுறுவின் போது வலி
  கருவுறாத தன்மை
  கருச்சிதைவு அடிக்கடி ஏற்படுதல் போன்றவை ஏற்படும்.


 • எண்டோமெட்ரியோசிஸ்

  இந்த நோயும் பெண்ணின் கருப்பையை பாதிக்கிறது. கருப்பையில் இருக்கும் சாதாரண திசு வேறு எங்காவது வளரும்போது, ​​குறிப்பாக கருப்பைகள், கருப்பையின் பின்னால், சிறுநீர்ப்பை மற்றும் குடலில் வளரும்போது எண்டோமெட்ரியோசிஸ் ஏற்படுகிறது. இந்த தவறான திசு கருவுறுவதை தடுத்தல், வலி மற்றும் அதிகமான இரத்த போக்கு போன்றவற்றை மாதவிடாய் காலங்களில் ஏற்படுத்துகிறது.

  MOST READ: எண்ணெயை ஊசிமூலம் செலுத்தி இப்படி ஆகியிருக்கும் 50 வயசு பாடிபில்டர்... என்ன பன்றாரு பாருங்க...


 • எச். ஐ.வி /எய்ட்ஸ்

  உயிரைக் கொல்லும் இந்த எய்ட்ஸ் நோய் உடலுறவு வழியாக பரவுகிறது. எச். ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஆணுடனோ பெண்ணுடனோ தொடர்பு கொள்ளும் போது இந்த நோய் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட ஒருவருக்கு போட்ட ஊசியை மற்றவர்க்கு செலுத்தும் போதும் இந்த நோய் பரவுகிறது. அதே மாதிரி கருவுற்ற பெண்கள் இந்த நோய் குழந்தைக்கு பரவாமல் தடுக்க சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். எச் ஐ வி விழிப்புணர்வு பற்றியும் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வாற்றுகிறது.


 • பாலி சிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம்

  ஒரு பெண்ணின் கருப்பைகள் அல்லது அட்ரீனல் சுரப்பிகள் இயல்பை விட அதிகமான ஆண் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் போது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் ஏற்படுகிறது. இதன் விளைவாக கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன. பருமனானவர்களுக்கு பி.சி.ஓ.எஸ் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதய நோய் மற்றும்நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து அதிகம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.


 • இன்டர்ஸ்டீடியல் சிஸ்டிடிஸ்

  இது ஒரு நாள்பட்ட சிறுநீர்ப்பை பாதிப்பாகும். இதன் விளைவாக சிறுநீர்ப் பையில் மீண்டும் மீண்டும் அசெளகரியம் ஏற்படுகிறது. இந்த பாதிப்பால் சிறுநீர்ப்பை சுவர்களில் வீக்கம் மற்றும் எரிச்சல் உண்டாகும். சிறுநீர்ப்பை விறைப்பதை ஏற்படுத்தும். அடிக்கடி சிறுநீர் கழித்தல், வயிற்று வலி, சிறுநீர்ப்பையில் கடுமையான வலி போன்றவை இன்டர்ஸ்டீடியல் சிஸ்டிடிஸின் அறிகுறிகளாகும்.


 • பாலியல் துன்புறுத்தல்

  தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை என்பது உலகளவில் அதிகரித்து வருகிறது. ஒரு பெண்ணின் அல்லது ஆணின் இஷ்டம் இல்லாமல் பாலியல் செயலுக்கு உட்படுத்துவது என்பது மனித தன்மை அற்ற செயலாகும். இந்த பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுபவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம். இப்படியே சென்றால் பெண்கள் என்ற உயிர் இவ்வுலகில் இருக்காது. எனவே பாலியல் வன்முறையை கண்டிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

  பெண்களை பாதுகாப்பது தான் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும்.ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் பாதுகாப்பு கொடுப்பதும், ஒரு ஆணுக்கு பெண் உறுதுணையாக இருப்பதும் தான் இயற்கை. அதை மறந்து வன்முறையில் ஈடுபடுவது அழிவிற்கு வழி வகுக்கும். இந்த உலக மக்கள் தொகை நாளன்று பாலியல் பலாத்காரம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது முக்கியம்.


 • உடலுறவின் வழியாக பரவக் கூடிய நோய்கள்

  பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஒட்டுண்ணிகள் வழியாக இந்த நோய்கள் பரவுகின்றன. 20 வகையான பாலியல் தொடர்பான நோய்கள் பரவுகின்றன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

  MOST READ: கோவிலுக்குள் புகுந்த முதலை... மக்கள் அத பார்த்து என்ன பண்ணாங்க தெரியுமா?


 • இனப்பெருக்க உறுப்புகளின் முக்கியத்துவம்

  மக்கள் ஒரு பாதுகாப்பான மற்றும் திருப்திகரமான பாலியல் வாழ்க்கையை மேற்கொள்வதே நல்லது. ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்றால் அதற்கு உடல், மனம் இரண்டு ஒத்துழைப்பும் முக்கியம். எனவே ஆண், பெண் இருபாலருக்கும் இனப்பெருக்கத்திற்கான விருப்பத்தை கூற உரிமை உள்ளது. மேலும் சிறு வயதில் இருந்து பெரியவர்கள் ஆகும் வரை நம் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் பேண வேண்டும்.

  இப்படி ஆரோக்கியமான பழக்கம் பின்னாளில் ஏற்படும் கருவுறுதல் சிக்கலை களைந்து விடலாம். இப்பொழுது எல்லாம் கருவுறுதலுக்கு நிறைய மருத்துவ முறைகள் இருந்தாலும் நிறைய பணமும் செலவழிக்க வேண்டியுள்ளது. இதற்கு காரணம் உங்கள் இனப் பெருக்க மண்டலம் ஆரோக்கியமாக இல்லாமல் இருப்பதே. எனவே நம் உடலுறுப்புகள் மீது கவனம் செலுத்த தவற வேண்டாம்.

  குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் கொடுப்பதும் ஒரு பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க பயன்படுகிறது. இதனால் சில பிரச்சினைகள் வருவதை நாம் தடுக்க முடியும். பிரசவத்திற்கு பின் வரும் பிரச்சினைகள், கருப்பை மற்றும் மார்பக புற்று நோய், குழந்தைகள் நலம் மேம்படுத்துதல்.

  நமது இனப்பெருக்க உறுப்பு ஆரோக்கியமாக இருந்தால் கருச்சிதைவு, நோய்த் தொற்று, தேவையற்ற கர்ப்பம், கருவுறுதல் சிக்கல், கருப்பை புற்று நோய், பாலியல் பிரச்சனை, ஊட்டச்சத்து பற்றாக்குறை, இரத்த சோகை போன்றவற்றை தவிர்க்கலாம்.


 • பாதிக்கும் காரணிகள்

  பொருளாதார சூழ்நிலைகள்
  வேலை வாய்ப்பு
  கல்வி
  குடும்ப சூழல்
  சமூக மற்றும் பாலின உறவுகள்.
  தெரிந்து கொள்ள வேண்டியவை
  வளரும் நாடுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கர்ப்பத்தை தவிர்க்க விரும்பும் கிட்டத்தட்ட 214 மில்லியன் பெண்கள் எந்தவொரு கர்ப்ப தடை சாதனத்தையும் பயன்படுத்துவதில்லையாம்.

  குடும்பக்கட்டுப்பாடு, கருத்தடை காப்பீடு போன்றவற்றின் மூலம் பாதுகாப்பற்ற கருக்கலைப்பை தவிர்க்க முடியும்.

  உடலுறவின் போது காண்டம் பயன்படுத்துவது எய்ட்ஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

  திட்டமிடப்படாத கர்ப்பத்தை தடுக்க, கருத்தடை சாதனங்கள் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு போன்றவற்றின் மூலம் தடுப்பதோடு தேவையற்ற விதத்தில் ஒரு குழந்தை கொல்வதை தடுக்கலாம். கருக்கலைப்பால் ஒரு தாய் இருப்பதை தடுக்கலாம்.

  என்ன மக்களே இந்த உலக மக்கள் தொகை தினம் வெறும் நாளாக இல்லாமல் மேற்கண்ட நன்மைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் இவ்வுலகிலும் உயிர்கள் தளிர்க்கும். நோய் நொடி இல்லாமல் எல்லோரும் வழமாக வாழலாம்.

  ஒரு உயிரை தோற்றுவிக்கும் தாய்மையை போற்றுவோம். அத்தோடு அப்பெண்மையும் காப்போம்.
உலக மக்கள் தொகை நாளன்று ஒவ்வொரு உயிரின் பிறப்பிற்கு காரணமான நம் இனப்பெருக்க உறுப்பை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும், வாங்க பார்க்கலாம்

ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த உலகத்தில் ஒவ்வொரு உயிரும் தணிக்க காரணமானது நம் இனப்பெருக்க உறுப்புகள் தான். உயிரினங்கள் இல்லை என்றால் இந்த உலகம் இல்லை. அப்படிப்பட்ட இனப்பெருக்க உறுப்புகளை நாம் ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.

அதுமட்டுமல்லாமல் இந்த நாளில் உலக மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதன் அவசியமும் முக்கியமும் கூறப்படுகிறது. மக்களிடையே இனப்பெருக்க உறுப்புகளின் முக்கியத்துவம் பற்றியும் ஆரோக்கியம் பற்றியும் பேசப்படுகிறது. ஒரு தாய் தன் கருவில் சுமந்து ஒரு உயிரை ஈன்றெடுக்க வேண்டும் என்றால் அவளுடைய கருவறை மிகவும் முக்கியம். அப்படிப்பட்ட ஒரு தாயின் கருவறையை நாம் ஆரோக்கியமாக பேணிக் காக்க வேண்டும் என்று இந்த நாளில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

   
 
ஆரோக்கியம்