Back
Home » உலக நடப்புகள்
எடையை குறைக்க 382 நாட்கள் சாப்பிடாமலே இருந்த மனிதர்... அப்புறம் என்னாச்சு தெரியுமா?
Boldsky | 12th Jul, 2019 11:29 AM
 • 382 நாள் விரதம்

  ஆம். ஒரு மனிதர் தனது வாழ்நாளில் தொடர்ந்து 382 நாட்கள் சாப்பிடாமல் வாழ்ந்திருக்கிறார். 382 நாட்களுக்கு எதையும் சாப்பிடாத மனிதனைப் பற்றி விஞ்ஞான ஆதாரங்களை வழங்கும் பழைய மருத்துவ இதழில் விளக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கு உண்மையானது. தனது கதையை பகிர்ந்து கொள்வதற்காகவே அந்த நபர் உயிர் பிழைத்திருந்தார்.

  MOST READ: தினம் 10 பீர் குடிச்சதால இந்த டாக்டருக்கு என்ன ஆச்சுனு பாருங்க...


 • எடையைக் குறைக்க

  1973 ஆம் ஆண்டு முதுகலை மருத்துவ இதழின் பதிப்பில் வெளியிடப்பட்ட வழக்கு விவரங்கள் "மிகவும் பருமனான ஒரு மனிதனின் நம்பமுடியாத கதையை வெளிப்படுத்தின. ஸ்காட்லாந்தில் ஒரு நபர் தன்னுடைய எடையைக் குறைப்பதற்காக மொத்தம் 382 நாட்கள் சாப்பிடுவதை நிறுத்தி இருந்தார்.


 • விநோத செயல்

  இந்த நபரின் இந்த வினோத செய்கையால் அவருடைய உடல் ஆரோக்கியத்தில் எந்த ஒரு பாதிப்பு இல்லாமல் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததோடு மட்டும் இல்லாமல், அவருடைய எடை 456 பவுண்டில் இருந்து 180 பவுண்டாக குறைந்திருந்தது. டன்டீ ஸ்கூல் ஆஃப் மெடிசின் மருத்துவர்கள், வழக்கத்திற்கு மாறாக நீண்ட விரதத்தை அனுபவித்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், மனிதனின் எடை 196 பவுண்டுகள் நிலையானதாக இருப்பதை வெளிப்படுத்தினர்.

  MOST READ: காத்ரீனா கைய்ஃப் எப்பவும் சிக்குனு இருக்கற சீக்ரட் என்ன தெரியுமா? அவங்களே சொன்னது...


 • கின்னஸ் சாதனை

  நீண்ட நாட்கள் சாப்பிடாமல் இருந்ததற்கான கின்னஸ் சாதனையில் இவருடைய பெயர் 1971ம் ஆண்டு இடம்பிடித்தது. இந்த நபர் 382 நாட்களில் எந்த வித திட உணவும் எடுத்துக் கொள்ளாத நிலையில் அவருடைய உடலில் படிந்திருந்த அளவுக்கு அதிகமான கொழுப்பில் இருந்த ஆற்றலால் அவர் உயிர் பிழைத்திருந்தார். இது தவிர, அவர் உடலின் உயிரியல் செயல்பாடுகளுக்காக பொட்டாசியம், சோடியம் மற்றும் ஈஸ்ட் மாத்திரைகளை உட்கொண்டு வந்தார்.


 • குடல் அசைவுகள்

  அவரது குடல் அசைவுகள் மிகவும் அரிதாக இருப்பதை மருத்துவர்கள் வெளிப்படுத்தினார், அவர் ஒவ்வொரு 37 முதல் 48 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே மலம் கழித்து வந்தார். அவர் தனது உடல்நலத்தை கட்டுக்குள் வைத்திருந்தார்.


 • சிறுநீர் பரிசோதனை

  மேலும் அவரது இரத்தம் மற்றும் சிறுநீரை பரிசோதிக்க அடிக்கடி மருத்துவமனைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மருத்துவ அறிக்கைகளுக்கு ஏற்ப, மருத்துவர்கள் அவருடைய குறைபாடுகளை சரி செய்யும் நோக்கில் புதிய மாத்திரைகளை அவருக்கு அறிமுகம் செய்து வந்தனர்.

  MOST READ: காதுக்குள் இருந்து உயிருடன் பல்லியை வெளியே எடுத்த டாக்டர்... அப்புறம் என்ன ஆச்சுனு தெரியுமா?


 • திட உணவு

  சிகாகோ ட்ரிப்யூன் அறிக்கையில் ஒரு அறிக்கையின் படி, மிக நீண்ட நாட்கள் சாப்பிடாமல் இருந்த அவர், தனது உணவுக் கட்டுப்பாட்டை முடித்து கொண்ட பிறகு சரியான முழுமையான திட உணவைச் சாப்பிட்ட நேரம், அவர் உணவின் சுவையை மறந்து விட்டதாகத் தெரிய வந்தது. இதனைக் கேட்கவே விநோதமாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எடை குறைப்பை மேற்கொள்வதில் முக்கிய பங்கு வகிப்பது விரதம் இருப்பது அல்லது நமக்கு பிடித்தமான உணவு வகைகளைத் தவிர்ப்பது போன்ற வழிகளாகும். நமக்கு பிடித்த உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது என்பது கடினமான வழியாக இருந்தாலும், குறைவாக சாப்பிடுவது என்பது ஒரு எளிய வழிமுறையாகும்.

ஆனால் இதனையும் ஒரு குறிப்பிட்ட குறைந்த கால கட்டத்திற்கு மட்டுமே செயல்படுத்த முடியும். ஆனால் உணவை முற்றிலும் ஒதுக்கிவிட்டு எதுவுமே சாப்பிடாமல் வாழ்வது என்பதை கற்பனை செய்து பார்க்க முடியுமா?

   
 
ஆரோக்கியம்