Back
Home » செய்தி
சட்டத்தில் ஓட்டை இருக்குன்னா இவரு அடைக்க வேண்டியதுதானே.. யார் வேணாம்னு சொன்னது.. சீமான் சீறல்
Oneindia | 12th Jul, 2019 09:26 AM
 • ஒரே சுடுகாடு

  ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி என்று கூறுவதே நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது. நான் என்ன கேட்கிறேன், ஒரே வரி, ஒரே ரேஷன் கார்டு கொண்டு வர்றீங்க சரி, ஒரே குளம் எல்லாரும் குளிக்கலாம், ஒரே கோயில், எல்லாரும் உள்ளே போகலாம், ஒரே சுடுகாடு, எல்லாரையும் ஒரே இடத்துல புதைக்கலாம்.. இப்படி கொண்டு வர முடியுமா உங்களால்?


 • எவ்ளோ கேவலம்

  வீடு முழுக்க குப்பையை கொட்டி வெச்சிட்டு, வெளியில வெள்ளை அடிக்கிறது எவ்வளவு கேவலமானது? அடிப்படையே அழுகி போய் கிடக்கு, அதை சரிபண்ணாம ஒரே நாடு, ஒரே தேர்தல்...ன்னு என்ன இது?

  வங்கி மோசடி புகார்.. மெஹுல் சோக்சியின் துபாய் சொத்துகள், சொகுசு கார் பறிமுதல்.. அமலாக்க துறை அதிரடி


 • 150 டிஎம்சி

  நதி நீர் இணைப்பு என்பது ஏமாற்று வேலை, இனிப்பான பசப்பான வார்த்தை, இதை சாத்தியப்படுத்துவது சாதாரணமானது இல்லை. கோதாவரி- காவிரி ஆறுகளை இணைத்தால் மட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைத்துவிடுமா? ஏற்கனவே பாராளுமன்றம், உச்சநீதிமன்றம் சொல்லியும் 150 டிஎம்சி தண்ணீரை தர மறுக்கிற கர்நாடகா, இப்போ நதிகளை இணைச்சிட்டால் மட்டும் தந்துடுவாங்களா?


 • வைகை

  மறுபடியும் திறந்து திறந்து விட்டுடுவாங்களா? பெரிய மேதைங்க மாதிரி பேசறாங்க.. தாமிரபரணியை எங்க கொண்டு போய் இணைப்பீங்க? வைகையை எங்க கொண்டு போய் சேர்ப்பீங்க? ஆர்எஸ் மங்கலம் கண்மாய்ல கொண்டு போய் சேர்ப்பீங்களா?" என்றார்.


 • என்ன தண்டனை?

  மாநிலங்களவை உறுப்பினராக வைகோ தேர்வு செய்யப்பட்டதற்கு சட்டத்தில் ஓட்டை இருப்பதாக கூறும் எச்.ராஜா சொல்லி உள்ளது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான், "ஓட்டை இருக்குன்னா அதை அவர் அடைக்க வேண்டியதுதானே, யாரு வேணாம்னு சொல்றது? பேசறதே தேச துரோகமா? அப்படின்னா இவர் நீதிமன்றத்தை அவமதிச்சு பேசினாரே.. இவருக்கு என்ன தண்டனை தர்றது?


 • அதுதான் தப்பு

  தடை செய்யப்பட்ட இயக்குத்துக்கு ஆதரத்து பேசறது குற்றம் ஆகாது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பில் சொல்லியிருக்கு. ஆனால் அந்த இயக்கத்துக்கு பண உதவி செய்தாலோ, ஆயுத உதவி செய்தாலோ அதுதான் குற்றம் ஆகும் என்று சொல்கிறது. ஆதரிச்சு பேறது குற்றமே இல்லை" என்று பதிலளித்தார்.
சென்னை: சட்டத்தில் ஓட்டை இருக்கா.. அப்படி ஓட்டை இருக்குன்னா அதை இவரு அடைக்க வேண்டியதுதானே என்று எச்.ராஜாவை சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன், 262-வது குரு பூஜையை முன்னிட்டு, அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசினார். அப்போது நீட் தேர்வு, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி என்பது குறித்த கேள்விகளை எழுப்பினர். அதற்கு சீமான் சொன்னதாவது:

   
 
ஆரோக்கியம்