Back
Home » செய்தி
காதலிக்கு சயனைடு.. விழித்து பார்த்ததால்.. கழுத்தை இறுக்கி கொலை.. கிரிமினல் காதலன் கைது
Oneindia | 12th Jul, 2019 11:16 AM
 • காதல் ஜோடி

  இந்நிலையில், கடந்த மாதம் 10ஆம் தேதி, திருவல்லிக்கேணி மியான் சாகிப் தெருவில் உள்ள எம்டிசி லாட்ஜில் இந்த ஜோடி ரூம் எடுத்து தங்கி உள்ளது. ஆனால் மறுநாள் வரை ஜோடி ரூமை விட்டு வெளியே வரவே இல்லை. அதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.


 • விசாரணை

  போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தால், காஜல் பிணமாக கிடக்கிறார். உயிருக்கு போராடிய சுமர்சிங்கை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அந்த ரூமில், ஒரு கூல் டிரிங்ஸ் பாட்டில் இருந்தது. ஒருவேளை அதில் விஷம் கலந்து இருவரும் தற்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என அனுமானிக்கப்பட்டது. இருவரது காதல் விவரங்களையும் சேகரித்த போலீசார், விசாரணையை ஆரம்பித்தனர்.


 • சந்தேகம்

  அப்போதுதான் காஜல் சயனைடு சாப்பிட்டுள்ளதும், கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வரவும் போலீசார் அதிர்ந்து போய்விட்டனர். அதனால் சிகிச்சை முடிந்து சுமர் சிங்கிடம் இதை பற்றி போலீசார் விசாரித்தனர்.


 • வாக்குமூலம்

  நடந்த விவரங்களை முன்னுக்கு பின் முரணாக சொல்லவும், போலீசார் தங்கள் பாணியில் வேலையை காட்டினர். அதன்பிறகுதான் விஷயம் வெளியே வந்தது. "காஜலுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துவிட்டார்கள். அவளுக்கு என்னை மறக்க முடியவில்லை. அதனால் நாம் காதலனுடன் ஒன்றாக வாழ முடியவில்லை, ஒன்றாக சாகவாவது செய்யலாம் என்று முடிவெடுத்தார். அந்த விருப்பத்தை என்னிடம் சொன்னாள். ஆனால் நான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.


 • சயனைடு

  பலமுறை தற்கொலைக்கு வற்புறுத்தினாள். அதனால்தான் ஒப்புக் கொண்டேன். எதை சாப்பிட்டால் உடனே உயிர் போகும் என்று நெட்டில் தேடி பார்த்தேன். அதன்படி சயனைட் வாங்கி வைத்து கொண்டேன். லாட்ஜில் ரூம் எடுத்தோம். கூல்டிரிங்ஸ்-ல் கலந்து குடிப்பதாகதான் பிளான். ஆனால் எனக்கு கடைசி நேரத்தில் மனசு மாறிவிட்டது. அதனால் ஜூஸில் சயனைடு கலந்து அவளுக்கு கொடுத்துவிட்டு, நானும் குடிப்பது போல நடித்தேன். இதை காஜல் கண்டுபிடித்து என்னிடம் கேட்டுவிட்டாள்.


 • புழல் சிறை

  அப்போது அவள் அரைகுறை உயிருடன் இருந்தாள். உயிருடன் பிழைத்தால், திரும்பவும் சாக சொல்வாளே என்று பயந்து போன நான், துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டேன்" என்றார். இதையடுத்து சுமர் சிங்கை கைது செய்த போலீசார் புழல் ஜெயிலில் அடைத்தனர்.
சென்னை: சுமர்சிங் ஒரு "டுபாக்கூர் காதல் மன்னன்" போல இருக்கு.. காதலியுடன் ஒன்றாக சேர்ந்து சாகலாம் என்றுதான் தற்கொலைக்கு போனார்.. ஆனால் என்ன நினைச்சாரோ தெரியவில்லை, திடீரென காதலியை சயனைடு விஷத்தை கொடுத்து, துப்பட்டாவால் கழுத்தையும் இறுக்கி கொலை செய்துவிட்டு எஸ்கேப் ஆகி உள்ளார்!

சென்னை சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சுமர் சிங் - காஜல். ரெண்டு பேரும் 3 வருட காதலர்கள். வழக்கம்போல் பெண்ணின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு.

அத்துடன் இன்னொரு மாப்பிள்ளையை பார்த்து நிச்சயதார்த்தமும் செய்து விட்டனர். மாப்பிள்ளையை காஜலுக்கு பிடிக்கவுமில்லை, காதலனை மறக்கவும் முடியவில்லை.

சந்தோஷமாக ஏரியில் குளிக்க சென்றார்... டிக் டாக் வீடியோவால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்

   
 
ஆரோக்கியம்