Back
Home » செய்தி
தமிழ் உள்பட மாநில மொழிகளுக்கு தடை.. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே இனி தபால்துறை தேர்வு
Oneindia | 12th Jul, 2019 12:01 PM

டெல்லி: தபால்துறை தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

தபால் துறை பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்துகிறது. தபால்காரர், மெயின்கார்டு, உதவியாளர், உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு நடத்துகிறது. இந்நிலையில் தபால் துறை தேர்வுக்கான பாடத்திட்டம் கடந்த மே 10ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிலேயே வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. முன்னதாக 23 மாநில மொழிகளிலும் வினாத்தாள் இருக்கும் இதுதான் நடைமுறையாக இருந்தது.

இந்நிலையில் நேற்று தொலைத்தொடர்பு துறை சுற்றறிக்கை ஒன்றை அனைத்து தலைமை தபால் நிலையங்களுக்கும் அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில், அனைத்து தேர்வுகளுக்கும் தாள் ஒன்று வினாத்தாள் இதற்கு முன்பு மாநில மொழிகளில் வழங்கப்பட்டு வந்தது. இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தாள் இரண்டு வினாத்தாள் எப்படி என்றால், ஆங்கிலத்தில் சொற்றடர் வழங்கப்படும். அதை தங்களது உள்ளூர் மொழிக்கு தேர்வு எழுதபவர்கள் மாற்ற வேண்டும். இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் தாள் ஒன்று வினாத்தாள் இதுவரை மாநில மொழிகளில் இருந்த நிலையில் இனி இந்தி ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி மாநில மொழி கிடையாது என்றும் அதனால் ஆங்கிலத்தோடு இந்தியில் தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

   
 
ஆரோக்கியம்