Back
Home » வீடு-தோட்டம்
பிங் கலர் பெயிண்ட் வீடுகளில் ஏன் அடிக்கப்படுகிறது தெரியுமா? காரணம் இது தான்
Boldsky | 30th Jul, 2019 02:11 PM
 • பிங் பிரியர்கள்

  பொதுவாக பிங் நிறம் என்றால் பலருக்கு அலாதி பிரியம். அதிலும் பெண்களுக்கு சொல்லவே வேணாம். பிங், மஞ்சள், வான ஊதா, போன்ற சில கலர்களில் அவர்கள் எதைப்பார்த்தாலும் வாங்கிக் கொள்ளத் தான் ஆசைப்படுவார்கள்.


 • காதல் பரிசு

  காதலர்களும் தங்கள் காதலிக்கு முதலில் எது வாங்கிக் கொடுத்தாலும் பிங் கலர் அதில் பிரத்யேகமாக இடம்பெறும். மேலும் முன்பின் பரிட்சையமில்லாத பெண் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ உடை அல்லது ஏதாவது வாங்க வேண்டும் எனில் என்ன கலர் வாங்க வேண்டும் என நிச்சயம் சிந்திப்போம். அப்போது சட்டென்று நினைவில் வருவது பிங் கலர் தான்.


 • பிங் கலர் நல்லதா

  வாஸ்து பாக்குறோமோ இல்லையோ அதோட மருத்துவ பலன்கள் பார்க்காமல் ஒரு விசயத்தை செய்யுறதே இல்லை. அப்படி பார்க்கையில் எங்க எல்லாம் அன்பும் அரவணைப்பும் இருக்கோ அங்க எல்லாம் பிங் அடையாளமா பயன்படுத்தப்படுகிறது. உதாரணமா செவிலியர்கள், காதல் போன்ற இடங்களில் நீங்கா இடம் பெறுகிறது. மேலும் ஒரு வித மன அமைதியை இந்த நிறம் தரவல்லது.


 • ஏன் பிங் பெயிண்ட்

  வானவில்லில் இல்லாத நிறமாக இருந்தாலும் கூட பிங் நிறத்திற்கென்று ஒரு பொலிவுத் தன்மை என்பது உண்டு. எனவே இது உங்கள் வீட்டின் பொலிவுத் தன்மையை நன்கு கூட்டித் தருகிறது. இங்கே 12 வகையான பிங் கலர் பெயிண்டை பயன்படுத்தி செய்யக் கூடிய அலங்கார உக்திகள் இருக்கின்றன.


 • காரல் பிங்

  உங்கள் சோபாக்களை காரல் பிங்கை பயன்படுத்தி அலங்கரிக்கலாம். அல்லது உங்கள் வீட்டின் மூளைகளிலிருந்து இருந்து இதை ஆரம்பியுங்கள். காரல் பிங் நிறத்திற்கு இடையில் வெள்ளைப் பட்டைக் கோடுகளை இடும் போது சிறந்த பிராகசத்தை அளிக்கும். மேலும் இது சுவரில் வரைந்தது போன்ற ஒரு அனுபவத்தை நிச்சயம் அளிக்காது. மேலும் பப்பிள்காம் போன்ற காட்சியமைப்பை இது கொண்டிருக்கும்.


 • துலியன் பிங்

  பிங் கலருடன் சிறிது சாம்பல் நிறம் கலந்தது போல் காட்சியளிக்கும். படுக்கையறைகளில் இந்த வகை பெயிண்டுகளை பயன்படுத்தும் போது சாம்பல் நிற மேல் பூச்சு உங்கள் மெத்தை விரிப்புகளுக்கு புதிய பொலிவை வழங்கும்.


 • வெளிறிய பிங்

  நீங்கள் வீடுகளில் பல வண்ணங்களில் ஓவியங்கள் அல்லது பல வகையான கலர்களில் போட்டோக்களை சுவற்றில் அடுக்க விரும்பினால் வெளிறிய பிங் என்பது சரியானத் தேர்வாக இருக்கும்.


 • ஆழமான தூசி பிங்

  இந்த ஆழமான டஸ்ட் பிங் வகை பெயிண்டுகள் வருபவர்களை வரவேற்கும் விதமாக அமைகிறது. ,மேலும் சுவருக்கு அதிக ஆழத்தையும் வழங்குகிறது. வீட்டின் தறையை குளிர் பளிங்குகளால் அலங்கரிக்கப் போகிறீர்கள் என்றால் இந்தக் கலரை சுவற்றுக்கு அடிக்கலாம். மேலும் அடர் பழுப்பு நிற நாற்காலிகள், மேஜைகள் இருக்கும் இடங்களில் இந்தக் கலர் பயன்படுத்துவது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.


 • ப்ளஸ்

  ஏறக்குறைய வெள்ளை நிறத்தை ஒத்தது போல் காட்சியளிக்கும் இந்த பெயிண்ட். நவீன காலத்திற்கு ஏற்ற மரச்சாமன்களுடன் ஒத்து போகிறது. மேலும் இது உற்சாகத்தையும், பாலியல் கவர்ச்சியையும் ஏற்படுத்துவதாக அமைகிறது.


 • நியோன் பிங்

  பார்த்ததும் ஒருவித பளிச் என்ற உணர்வு வேண்டுமென்பவர்களுக்கு சுவற்றில் நியோன் பிங்கை பயன்படுத்தலாம். வான ஊதா நிற அலங்காரங்களையும், பாரம்பரியமான ஃபர்னிச்சர்களை பயன்படுத்தும் போது உங்கள் வீட்டின் அறைகள் அட்டகாசமாகத் தோன்றும்


 • நியோன் பிங்

  பார்த்ததும் ஒருவித பளிச் என்ற உணர்வு வேண்டுமென்பவர்களுக்கு சுவற்றில் நியோன் பிங்கை பயன்படுத்தலாம். வான ஊதா நிற அலங்காரங்களையும், பாரம்பரியமான ஃபர்னிச்சர்களை பயன்படுத்தும் போது உங்கள் வீட்டின் அறைகள் அட்டகாசமாகத் தோன்றும்.


 • காட்டன் கேண்டி பிங்

  பேபி பிங் என அழைக்கப்படும் இது படுக்கையறைகளுக்கு சிறந்ததாக இருக்கும் மேலும் படுக்கையறையில் வைக்கப்படும் கட்டில் அலமாரி, கண்ணாடி மேஜை போன்றவைகள் ராயல் இண்டிகோ நீலத்தில் இருக்கும் போது சிறந்த அனுபவத்தை தருகிறது.
வீட்டை அலங்காரம் செய்கிறோமோ இல்லையோ பெயிண்ட் அடிப்பது என்பது மிகவும் அவசியமான விசயமாகும். முன்பெல்லாம் பொங்கல், வருடப்பிறப்பிற்கு என்று வீட்டிற்கு பெயின்ட் அடித்துக் கொண்டது வழக்கம். ஆனால் அதற்கான தேவைகளை எல்லாம் தற்போது சந்தையிலுள்ள பெயிண்ட்கள் நிராகரித்துவிட்டன.

மூன்று வருடம் வரை தாங்கக்கூடிய பெயிண்ட்கள் எல்லாம் தற்போது சந்தையில் வலம் வருகின்றன. மூன்று வருடங்கள் தாங்குகிறது என்றால் நம்க்கு பிடித்தமான நிறங்களில் நமது வீட்டை நாம் ஏன் வைத்துக் கொள்ளக்கூடாது. நிச்சயம் வைத்துக் கொள்ளலாம். பிங் நிறத்தின் காதலர்களுக்குதான் இந்தக் கட்டுரை

   
 
ஆரோக்கியம்