Back
Home » ஆரோக்கியம்
தூங்கி எழுந்ததும் வரிசையா தும்மல் வருதா? ஏன் தெரியுமா? என்ன பண்ணினா வராது?
Boldsky | 8th Aug, 2019 01:30 PM
 • ஏற்படும் நோய்கள்

  இந்த பூஞ்சையால் ஏற்படும் ஒவ்வாமை நோய்கள் அல்லது நோய்த்தொற்றுகள் அஸ்பெர்கில்லோசிஸ் என்று அழைக்கப்படுகின்றன. பூஞ்சையின் வெவ்வேறு வகைகளில், அஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ் பெரும்பாலும் பொதுவாக நோயை உண்டாக்குகிறது, ஆனால் ஏ. ஃபிளாவஸ், ஏ. நைகர் மற்றும் ஏ. டெர்ரியஸ் போன்ற பிற உயிரினங்களும் ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களை ஏற்படுத்துகின்றன.

  MOST READ: முடி கொட்டி கொட்டி உங்க தலை இப்படி ஆயிடுச்சா?... நீங்க ஏன் இத ட்ரை பண்ணக்கூடாது?


 • அஸ்பெர்கிலஸ் ஃபுமிகேட் நோய்களின் வகைகள்:

  1.நாள்பட்ட நுரையீரல் அஸ்பெர்கில்லோசிஸ்

  இந்த நோய் படிப்படியாக வளர்ச்சி அடைகிறது. இது பெரும்பாலும் நுரையீரலில் காற்று இடங்கள் உருவாக காரணமான நாள்பட்ட நுரையீரல் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நபர்களிடையே காணப்படுகிறது. இந்த துவாரங்கள், சிகிச்சையளிக்கப்படாமல் இருக்கும்போது நுரையீரல் திசுக்கள் தடிமனாகவும் , தழும்பும் ஏற்படலாம். காசநோய் மற்றும் எம்பிஸிமா ஆகியவை இந்த நிலைக்கு எடுத்துக்காட்டுகள். இரவில் வியர்வை, காய்ச்சல், விவரிக்கப்படாத எடை இழப்பு, இருமல், இருமும்போது இரத்தம் வெளியேறுதல், மூச்சுத் திணறல், நோய் அல்லது அசௌகரியம் மற்றும் சோர்வு போன்ற உணர்வுகள் இதன் அறிகுறிகளாக உணரப்படுகின்றன.


 • 2. ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சி

  அஸ்பெர்கிலஸ் வித்துகளுக்கு ஒரு ஒவ்வாமை எதிர்வினையாக, இந்த நிலை உங்கள் காற்றுப்பாதைகள் மற்றும் நுரையீரலில் சேதத்தை ஏற்படுத்துகிறது. இது பொதுவாக ஆஸ்துமா மற்றும் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் உள்ள நபர்களில் காணப்படுகிறது. இந்த நிலை அறிகுறிகள் பலவீனம், காய்ச்சல், நோய் அல்லது அசௌகரியம், இருமலில் பழுப்பு நிற சளி வெளியேறுவது அல்லது சளியுடன் இரத்தம் கலந்து வருவது போன்றவையாகும்.


 • 3. ஆக்கிரமிப்பு அஸ்பெர்கில்லோசிஸ்

  இது அஸ்பெர்கில்லோசிஸின் மிக தீவிரமான வடிவம் மற்றும் சிகிச்சையளிக்கப்படாமல் இருக்கும்போது, அது இறப்பையும் விளைவிக்கும். ஆக்கிரமிப்பு அஸ்பெர்கில்லோசிஸ் என்பது அஸ்பெர்கில்லோசிஸின் கடுமையான வடிவமாகும், இது நுரையீரலில் தொடங்கி படிப்படியாக உங்கள் தோல், மூளை அல்லது சிறுநீரகங்கள் போன்ற உங்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது. இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் மற்றும் மார்பு வலி ஆகியவை இந்த நிலையின் அறிகுறிகளில் அடங்கும்.

  MOST READ: இந்த பொண்ணோட காதுக்குள்ள எவ்ளோ பெரிய உண்ணி போயிருக்கு பாருங்க... பார்க்கவே ஒருமாதிரி இருக்கா?...


 • ஆபத்து காரணிகள்

  உங்களிடம் பின்வரும் அம்சங்கள் இருந்தால், நோய்கள் மற்றும் ஒவ்வாமைகள் தாக்கக்கூடிய ஆபத்தில் நீங்கள் இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.

  . பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு
  . சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் அல்லது ஆஸ்துமா போன்ற நுரையீரல் நிலை
  . குறைந்த வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை
  . நீண்ட கால கார்டிகோஸ்டீராய்டு சிகிச்சை
  . சமீபத்திய இன்ஃப்ளூயன்ஸா நோய்த்தொற்றிலிருந்து நீங்கள் மீண்டு வந்திருந்தால்


 • நோய் கண்டறிதல்

  பூஞ்சையால் ஏற்படும் தொற்றுநோய்களின் அறிகுறிகள் மற்ற நுரையீரல் நிலைமைகளைப் போலவே இருப்பதால் இந்த நிலையைக் கண்டறிவது பெரும்பாலும் கடினம். பூஞ்சை கண்டறிவதற்கு பயன்படுத்தப்படும் முறைகளில் , பூஞ்சை கண்டறிய சளி கோழையின் மாதிரி எடுத்து கல்ச்சர் பரிசோதனை செய்வது, தொற்றின் அடையாளங்களை பரிசோதிக்க மார்பு எக்ஸ்-ரே, இரத்த ஓட்டத்தில் பிறபொருளெதிரிகள் இருப்பதை உறுதி செய்ய இரத்தப் பரிசோதனை, அஸ்பெர்கிலஸ் மற்றும் பிற பூஞ்சை இனங்களின் பூஞ்சை செல் சுவரின் ஒரு பகுதியை சரிபார்க்க சோதனைகளும் நடத்தப்படுகின்றன.

  தவிர, ஒரு கோழை அல்லது திசு மாதிரியிலிருந்து அஸ்பெர்கிலஸ் இனங்களைக் கண்டறிய பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (பி.சி.ஆர்) பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஒவ்வாமை பாதிப்பை உறுதிப்படுத்த தோல் அல்லது இரத்த பரிசோதனைகள் நடத்தப்படும்.

  MOST READ: புற்றுநோய்க்கட்டி எப்படி உருவாகுதுனு தெரியுமா?... இத பார்த்து தெரிஞ்சிக்கங்க...


 • தொற்றுக்கான சிகிச்சை

  சிகிச்சை நடவடிக்கைகள் நிலைமைகளைப் பொறுத்தது. ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சி அஸ்பெர்கில்லோசிஸ், வாய்வழி கார்டிகோஸ்டீராய்டுகள் மூலம் சிகிச்சையளிக்கப்படலாம். முடிச்சுகள் அல்லது ஒற்றை அஸ்பெர்கில்லோமாக்களைக் கொண்ட நாள்பட்ட நுரையீரல் அஸ்பெர்கிலோசிஸுக்கு சிகிச்சை தேவையில்லை. நாள்பட்ட நுரையீரல் அஸ்பெர்கில்லோசிஸின் தீவிரமான நிகழ்வுகளுக்கு மற்றும் ஆக்கிரமிப்பு அஸ்பெர்கில்லோசிஸ் போன்றவற்றிற்கு சிகிச்சையளிக்க பூஞ்சை காளான் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன,

  இவை தவிர, ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், எம்போலைசேஷன் அல்லது அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல் போன்றவை ஒரு சிகிச்சை முறையாக கருதப்படுகிறது.
அஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ் என்பது ஒரு வகை பூஞ்சை ஆகும், இது பொதுவாக நம்மைச் சுற்றி காணப்படுகிறது. தாவரங்கள், மண் மற்றும் வீட்டு தூசுகளில் கூட இந்த வகை பூஞ்சை காணப்படுகிறது. நம் நுரையீரல் மண்டலத்திற்குள் நுழைந்து எரிச்சல் மற்றும் ஒவ்வாமைகளை ஏற்படுத்தும் அதன் வித்துகளை நாம் அனைவரும் சுவாசிக்க முனைகிறோம்.

ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தி கொண்ட ஆரோக்கியமான நபரில், எந்த ஆபத்தும் ஏற்படுத்தாமல் இந்த பூஞ்சை அகன்று விடும். இருப்பினும், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ள நபர்களின் விஷயத்தில், பூஞ்சை பல்வேறு சிக்கல்களையும் கடுமையான தொற்றுநோயையும் ஏற்படுத்தும்

அஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ் 90 சதவீத அஸ்பெர்கிலஸ் நோய்களுக்கு காரணமாக அமைகிறது. ஒரு தனி நபர் தினசரி குறைந்தபட்சம் இந்த பூஞ்சையின் பல நூற்றுக்கணக்கான வித்துகளை சுவாசிக்கிறார் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன, ஆனால் அவை நுரையீரல் நோய்கள் அல்லது பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

   
 
ஆரோக்கியம்