Back
Home » ஆரோக்கியம்
43 வயசுலயும் சுஸ்மிதா சென் சிக்குனு இருக்க என்ன பண்றாங்கனு தெரியுமா? நீங்களே பாருங்க...
Boldsky | 9th Aug, 2019 12:12 PM

நம்மில் பலரும் இளம் வயதில் செய்யும் உடற்பயிற்சியை வயது அதிகரிக்க அதிகரிக்க செய்யத் தவறி விடுகிறோம். கடும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உள்ளவர்கள் கூட, வயது அதிகமாகும்போது அத்தகைய கடும் பயிற்சியில் இருந்து தம்மை விலக்கி வைத்துக் கொள்ள எண்ணுகின்றனர். கடுமையான பயிற்சி செய்யும் அளவுக்கு தங்கள் உடல் பலமாக இல்லை என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டாகிறது. ஆனால் இதற்கு விதிவிலக்காக இருப்பவர் 43 வயதாகும் இந்தியாவின் முன்னாள் பிரபஞ்ச அழகி மற்றும் பாலிவுட் நடிகை சுஷ்மித்தா சென். அவருக்கு 43 வயது என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள்.

வெகு சிலர் மட்டுமே வயது அதிகமாக அதிகமாக இளமையாக தோற்றமளிப்பார்கள். அந்த வரம் பெற்ற மிகச் சிலரில் சுஷ்மித்தாவும் ஒருவர். அவர் தனது தீவிர பயிற்சி, ஒழுக்கம் மற்றும் நிலைத்தன்மையுடன் முதுமையை வெல்ல முயற்சித்து அதில் வெற்றியும் அடைகிறார். அவரது உடற்பயிற்சி வழக்கத்தைப் பார்வையிட உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், சுஷ்மிதாவின் பொறாமையைத் தூண்டும் ஜிம் செல்ஃபிகள் மற்றும் உடற்பயிற்சி வீடியோக்களைக் காணுங்கள், இது அவரது உடற்தகுதி தொடர்பான செய்திகளில் அவர் ஏன் ஊடகங்களில் முன்னணியில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள போதுமானதாக இருக்கும். ஜிம்னாஸ்டிக் வளையத்தில் தனது வொர்க்அவுட்டைச் செய்து வரும் இன்ஸ்டாகிராமில் சுஷ்மிதாவின் சமீபத்திய இடுகை ஒரு நாளில் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.

   
 
ஆரோக்கியம்