Back
Home » ஹீரோ
மேடியின் சால்ட் அண்ட் பெப்பர் லுக்... மயங்கிய ரசிகை - அட்வைஸ் செய்த மாதவன்
Oneindia | 10th Aug, 2019 05:23 PM

சென்னை: தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பிய இளம்பெண்ணுக்கு, தன்னை விட அழகான நல்லவர் ஒருவர் கிடைப்பார். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் என்று நடிகர் மாதவன் அறிவுரை கூறி வாழ்த்தியுள்ளார்.

நடிகர் மாதவன் மேடி என்று ரசிகைகளால் செல்லமாக அழைக்கப்படுபவர். நிகழ்ச்சி தொகுப்பாளர், எழுத்தாளர், நடிகர் என்பதோடு மட்டுமின்றி தன்னை ஒரு படத் தயாரிப்பாளராகவும் வெளிக்காட்டியுள்ளார்.

மணிரத்தினத்தின் இயக்கத்தில் 2000ல் வெளிவந்த அலைபாயுதே திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் குறிப்பாக ரசிகைகளின் இதயங்களில் நீங்காத இடத்தை பிடித்தவர். கனவு நாயகனாக வலம் வந்தவர். தமிழ் திரையுலகிற்கு வந்து 19 ஆண்டுகள் ஆன பின்னும் கூட, இன்னும் பெண்களிடையே அவர் மீது உள்ள கிரேஸ் கொஞ்சமும் குறையவேயில்லை. 49 வயதானாலும், இன்றைக்கும் இளம் பெண்கள் மனதிலும் அவர் கனவு நாயகனாகவே வலம் வருகிறார். அவர் இப்போது இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

மாதவன் தற்போது ராக்கெட்ரி-தி நம்பி எஃபெக்ட் என்று பெயரிடப்பட்ட திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இப்படம் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

1994ஆம் ஆண்டு, நம்பி நாராயணன் என்ற இஸ்ரோ விஞ்ஞானி, அந்நிய நாட்டிடம் பணம் பெற்றுக்கொண்டு ராக்கெட் ரகசியங்களை விற்றுவிட்டதாக பொய் குற்றம் சாட்டி அவரை கைது செய்தனர். சி.பி.ஐ நடத்திய விசாரணையில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என்று தெரியவந்தது. இதனையடுத்து நம்பி நாராயணன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார்.

இந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்ட கதையை ராக்கெட்ரி-தி நம்பி எஃபெக்ட் படமாக மாதவன் இயக்கப்போகிறார் இந்த திரைப்படத்தின் படத் தொகுப்புக்கு இடையே தனது கூலான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஒரு செல்ஃபி எடுத்து அதை தன்னுடய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரின் இந்த செம்ம கெட்டப்பை பார்த்த இளம்பெண்கள் கூட்டம் அசந்து போய் விட்டனர் இந்த செல்பி ரசிகைகளிடையே வைரல் ஆனது. படையப்பா படத்துல நீலாம்பரி சொல்ற மாதிரி வயசானலும் உன்னோட அழகும் லுக்கும் அப்படியே தான் இருக்கு மேடி என்று சொல்லாமல் சொல்லியுள்ளனர்.

இந்த புகைப்படத்தைப் பார்த்து ரசித்த ஒரு 18 வயது இளம் ரசிகை அதன் பின்னோட்டங்களில் 18 வயது பெண்ணாகிய நான் உங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன், என்று தெரிவித்துள்ளார்.

இதற்கான பதிலை மேடியிடம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நேரத்தில் உங்களுக்கு என்னை விட நல்லவர் கிடைப்பார், கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் என்று மிகுந்த தன்னடக்கத்துடன் பதிலளித்துள்ளார். இது அவருடைய நற்பண்பை வெளிக்காட்டியுள்ளது. அன்றும், இன்றும், என்றும் மேடி மீது உள்ள ஈர்ப்பு ரசிகைகளிடம் குறையவே குறையாது.

   
 
ஆரோக்கியம்