Back
Home » மியுசிக்
ஷாலினே பாண்டே இடுப்புல தான் எக்ஸாம் பார்முலா இருக்கு - 100% காதல்
Oneindia | 12th Aug, 2019 08:28 AM
 • 100% காதல் ஆடியோ ரிலீஸ்

  100% படத்தின் பாடல் இசை வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், நடிகை ஷாலினி பாண்டே, இயக்குநர் பாக்கியராஜ், நடிகை ரேகா, ஜெயச்சித்ரா, ஜே.எஸ்.கே.சதீஷ், அப்புக்குட்டி, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, தோட்டா தரணி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்த கொண்டனர்.
  படத்தைப்பற்றியும் பாடல்களைப் பற்றியும் தங்களின் அனுபவங்களை பலரும் பகிர்ந்து கொண்டனர்.


 • குடும்பதோடு பார்க்கலாம்

  விழாவில் பேசிய நாயகன் ஜி.வி.பிரகாஷ், 100% காதல் படம் இளைஞர்களுக்கான படம் மட்டும் கிடையாது. அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது என்றார். நடிகை ரேகா இந்த படத்தை வாழ்த்தி பேசினார். அப்போது போது, உண்மைக் காதல் என்றைக்குமே ஜெயிக்கும் என்பது நிச்சயம். எனவே இந்தக் காதலும் நிச்சயமாக ஜெயிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.


 • இளைஞர்களின் கீதமாகும் 100% காதல் பாடல்கள்

  'கண்ணும் கண்ணும் பிளஸ்... இனிமே இல்லை மைனஸ் இரண்டு மைனஸ் சேர்ந்த ஈக்வேசன்'...பாடலும் இசையும் இன்றைய இளைய தலைமுறை இசை ரசிகர்களின் கீதமாக ஒலிக்கப்போகிறது. 'ஏனடி ஏனடி'... பாடல் காதல் பிரிவில் தவிக்கும் இளசுகளுக்கு பிடித்தமான பாடலாக அமையும் அதிக இளைஞர்களின் ரிங்டோனாக மாறினாலும் ஆச்சரியமில்லை. ஒரு வானம் தாண்டியே... பாடல் செம மெலடி.. பாடல்களும், இசையும் படத்தோடு ஒன்றியிருக்கும் அனைவருக்குமே பிடிக்கும்.


 • ஷாலினி பாண்டே

  அர்ஜூன் ரெட்டி நாயகி நடிகை ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகும் முதல் தமிழ் படமாகும். கல்லூரியில் மாணவர்களுக்கு இடையில் நடக்கும் கலாட்டாக்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் எக்ஸாம் ஹாலில் ஹீரோயின் ஷாலினி பாண்டே தன்னுடைய இடுப்பில் ஃபார்முலாவை எழுதிவைத்து ஹீரோ ஜி.வி.பிரகாஷுக்கு பிட் அடிக்க உதவுவது படம் பார்க்கும் இளசுகளை நிச்சயமாக சூடேற்றும் என்று கூறியுள்ளார் இயக்குநர்.


 • முக்கிய நடிகர்கள்

  காதலும் நகைச்சுவையும் கலந்து உருவாகியுள்ள இந்தப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பின்பு நடிகை ஜெயச்சித்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாசர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், தம்பி ராமைய்யா, மனோபாலா, தலைவாசல் விஜய், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் வாரிசான யுவன் மயில்சாமி சிறு வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் அப்புக்குட்டி,பாடகர் வேல்முருகனும் நடித்துள்ளளனர். கதை சொல்லிக்கொண்டே பாடுவது போல் நடித்துள்ளாராம் வேல்முருகன்.


 • இயக்கம் தயாரிப்பு

  100% காதல் படத்தை இயக்குநரான சந்திரமவுலியின் மனைவி புவனா சந்திரமவுலி தயாரித்திருக்கிறார். இணை தயாரிப்பாளர் தெலுங்கு இயக்குநர் சுகுமார். படத் தொகுப்பு காசி விஷ்வநாதன். ஹீரோவாக நடிப்பதோடு இசையும் அமைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். கேமரா மேன் கணேஷ். இவர் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் ஆல் டைம் ஃபேவரைட் கேமரா மேன் ஆவார். அவருடைய விளம்பரப் படங்கள் அனைத்திற்கும் இவர் தான் கேமரா மேனாக பணியாற்றியுள்ளார். கலை இயக்குநர் தோட்டா தரணி. உடைகள் ஏற்பாடு கவிதா.100% காதல் திரைப்படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது.
சென்னை: காதலுடன் நகைச்சுவையும் கலந்து தயாராகியுள்ள 100% காதல் படம் இளைஞர்களுக்கான படம் மட்டும் கிடையாது. அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது என்று படத்தின் நாயகன் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். மெலடி மெட்டுக்களால் கட்டிப்போட வைக்கும் பாடல்களால் உருவாகியுள்ளது 100% காதல்.

100% காதல் படமானது, நாகசைதன்யா-தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியான 100% லவ் படத்தின் ரீமேக் ஆகும். நடிகர் ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டே நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். எம்.எம்,சந்திரமவுலி இந்தப் படத்தை இயக்கி உள்ளார். கல்லூரியில் படிக்கும் மாணவருக்கும், மாணவிக்கும் இடையில் நடக்கும் போட்டியை காதலுடன் நகைச்சுவையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் படங்களை உயிர்ப்போடு வைத்திருப்பதை இசையும் பாடல்களும்தான். 100% காதல் படமும் இதற்கு விதி விலக்கல்ல. இந்தப் படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் பாடலாசிரியர் மோகன் 8 பாடல்களையும், கவிஞர் சினேகன் ஒரு பாடலையும் எழுதியுள்ளார். ஹீரோவாக நடிக்கும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் பாக்யராஜ் மற்றும் நடிகை ரேகா உள்பட நட்சத்திர பட்டாளங்கள் கலந்துகொண்டனர்.

   
 
ஆரோக்கியம்