Back
Home » ஹீரோ
உங்க பொங்க சோறும் வேணாம்.. பூசாரித்தனமும் வேணாம்டா.. கிளம்பிப் போன விஜய் சேதுபதி!
Oneindia | 12th Aug, 2019 10:56 AM
 • நல்ல மனசுக்காரன்

  பொதுவாக விஜய் சேதுபதி யாரிடமும் எந்த வம்புதும்பும் வெச்சுக்கவே மாட்டார். திரைத்துறைக்கு அவர் வந்த இந்த சின்ன கால கட்டத்தினுள் அவருக்கு வந்து சேரவேண்டிய சம்பள பாக்கிகள் சில கோடிகளை தொடும். ஆனாலும் 'நண்பனுக்கு என்ன கஷ்டமோ!' என்று விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் மனுஷன். அதேபோல் தான் இம்மாம் பெரிய பீக்கில் இருப்பதை கொஞ்சம் கூட மனசில் ஏத்திக்காமல் எல்லோரிடமும் டவுன் டூ எர்த்தாக பழகும் மனுஷன்.


 • ஜாலியான மனுஷன்

  ரசிகர்களிடம் மிக சாதாரணமாக கலப்பார் வி.சே. எந்தளவுக்கு என்றால், அவரோடு செல்ஃபி எடுக்கையில், உரிமையாக ரசிகர்களின் மொபைலை வாங்கி இவரே எடுத்துக் கொடுப்பார். 'என் கூட விஜய்சேதுபதி செல்ஃபி எடுத்துக்கிட்டார்' என்று பெருமையாக ரசிகப்புள்ளைக பேசிட்டு திரியட்டுமே எனும் எண்ணம் அவருக்கு.


 • முரளிதரன் பஞ்சாயத்து

  இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பிராஜெக்டில் வி.சே. கமிட் ஆகிட, பஞ்சாயத்து பற்றிக் கொண்டு எரிய துவங்கியது. அது, இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் பயோபிக்கில் நடிக்க வி.சே. கமிட் ஆன விஷயம்தான். '800' என தலைப்பு யோசிக்கப்பட்டது அந்தப் படம். நம்பர்களில் தலைப்பு வைத்தால் தனக்கு நச்சுன்னு ஒர்க்-அவுட் ஆகுமென்று வி.சே.வும் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு, ஸ்டோரி டிஸ்கஷனுக்காக மும்பையும் சென்று உட்கார்ந்தார்.


 • எதிர்ப்பு

  ஆனால் இந்தப் படத்தில் நடித்தால் விஜய்சேதுபதி ஒரு தமிழனே இல்லை, தமிழின துரோகியாக பார்க்கப்படுவார்! என்று சர்வதேச தமிழ் அமைப்பை சேர்ந்தோர் முழங்க ஆரம்பித்தனர். காரணம்? முத்தையா முரளிதரன் பூர்வீகமாய் தமிழராய் இருந்தாலும், பிறப்பு மற்றும் வளர்ச்சி மட்டுமில்லாமல் மன அளவிலேயே பக்கா சிங்கள பாசம் ஜாஸ்தி கொண்டவர். ஈழத்தின் இறுதிப்போர் முடிந்தபின் 'இலங்கையில் இனி அமைதி நிலைக்கும்' என்று வெளிப்படையாய் சொல்லி, ராஜபக்‌ஷேவை மனதார பாராட்டியவர்.


 • விலகிட்டேன் பேபி

  பூர்விக அடிப்படையில் தானொரு தமிழன் என்பதை மறைக்கும், மறுக்க முயலும் நபர்! அவரது பயோபிக்கிலா விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். கூடாது , மீறி நடித்தால் போராடுவோம்! என்றனர். இந்த பகீர் எதிர்ப்புகளை கண்டு சற்றே பதறித்தான் போனார் விஜய் சேதுபதி. முக்கிய நபர்கள் சிலரிடம் ஆலோசனை நடத்தியவர், இப்போது அந்த ப்ராஜெக்டில் இருந்து விலகிவிட்டார். யெஸ் '800' படத்தில் வி.சே. நடிக்கப்போவதில்லையாம்.


 • வேணவே வேணாம்ய்யா

  பேசியதை விட அதிகளவு சம்பளம், பெரிய ப்ரமோஷன் என என்னவெல்லாமோ கூறி அவரை சம்மதிக்க வைக்க முயற்சித்ததாம் தயாரிப்பு தரப்பு. அதற்கு 'உங்க பொங்கச் சோறும் வேணாம். பூசாரித்தனமும் வேணாம்' என்றபடி பெரிய கும்பிடாய் போட்டு, எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

  உண்மையான நாட்டுக்கட்டடா.. அப்படின்னு பாராட்டத் தோணுது!

  - ஜி.தாமிரா
சென்னை: அப்படிச் சொல்வதற்கு கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது, ஆனாலும் அந்த உண்மையை சொல்லாமல் விட்டால் தமிழ் கூறும் சினிமா ரசிக உலகம் நம்மை மன்னிக்காது! எனும் ஒரே காரணத்தினால் அதை உடைத்துப் பேசுகிறோம்.

அதாவது 'மக்கள் செல்வன்' என்று இயக்குநர் சீனு ராமசாமியால் சீல் குத்தப்பட்ட மாஸ் ஹீரோ விஜய் சேதுபதிக்கு ரசிகைகள் பட்டாளம் எக்கச்சக்கம். அவர்கள் மத்தியில் தலைவனுக்கு செல்லப்பெயர் என்ன தெரியுமா?...'ஸ்வீட் கருப்பன்! நாட்டுக்கட்டை' என்பதுதான்.

கிராமம், நகரம், சிட்டி, அல்ட்ரா சிட்டி என்று எந்த பேதமுமில்லாமல் பொண்ணுங்க ரொம்ப லந்தாக வி.சேதுவை 'நாட்டுக்கட்ட' என்று கொஞ்சுகிறார்கள். அந்தளவுக்கு மனுஷன் அந்த பெண் பிள்ளைகளின் பரந்த மனதில் விரிந்து பரவிக் கிடக்கிறார்.

   
 
ஆரோக்கியம்