Back
Home » உலக நடப்புகள்
இன்னைக்கு பெரும் குழப்பம் ஏற்படப் போகிற ராசிக்காரர் யார் தெரியுமா? இவங்கதான்...
Boldsky | 13th Aug, 2019 06:00 AM
 • மேஷம்

  மனதுக்குள் பலவிதமான தேவையற்ற சிந்தனைகள் தோன்றும். அவை எதையும் மனதுக்குள் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்கிள்ல இருந்து பணவரவுகள் கைக்கு வந்து சேரும். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பொழுதைக் கழிப்பீர்கள். வேலையிடத்தில் வேலைப்பளுவும் உங்களுக்கான பொறுப்பும் அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் கொஞ்சம் அனுசரணையோடு நடந்து கொள்ளுங்கள். வீட்டில் உள்ள குழந்தைகள் வெற்றியுடன் திரும்புவார்கள். அதனால் குடும்பமே மகிழ்ச்சியில் இருக்கும். பெற்றோர்களுடைய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. ஆன்மீகப் பணிகள் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். மனம் நிம்மதி அடைவீர்கள்.

  MOST READ: தூங்கி எழுந்ததும் வரிசையா தும்மல் வருதா? ஏன் தெரியுமா? என்ன பண்ணினா வராது?


 • ரிஷபம்

  உங்களுடைய தொழில் ரீதியான பயணங்கள் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன சண்டைகள் உருவாகலாம். பரம்பரை சொத்துக்கள் சம்பந்தமான விவகாரங்களைக் கொஞ்சம் தள்ளிப் போடுங்கள். உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி சேர்ப்பீர்கள். தொழிலில் பெரும் லாபம் கிடைக்கும். பெற்றோர்களிடம் ஏற்பட்ட சின்ன சின்ன மனக்கசப்புகளும் தீரும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் கொஞ்சம் மந்தமாகவே இருக்கும்.


 • மிதுனம்

  மனதுக்குள் உண்டாகின்ற தேவையில்லாத எதிர்மறையான எண்ணங்களால் வீண் கவலைகள் மனதுக்குள் வந்து போகும். உங்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வீட்டுக்கு உறவினர்கள் வருகை தருவார்கள். அதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு மனமகிழ்ச்சியும் குதூகலமும் ஏற்படும். மாணவர்கள் தங்களுடைய உயர் கல்வி தொடர்பாக பெரியோர்களிடம் ஆலோசனை செய்து முடிவுக்கு வருவது நல்லது. வழக்குகளில் உங்களுக்கு இருந்து வந்த இடர்பாடுகுள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஆதாயமான சூழல் உருவாகும். தொழிலில் புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். அலுவலகங்களில் உங்களுக்கு இருநு்து வந்த எதிர்ப்புகள், மறைமுகப் பழிவாங்கல்கள் குறைந்து நட்பு வட்டம் அதிகரிக்கும். பொருளுாதார முன்னேற்றம் உண்டாகும்.


 • கடகம்

  தொழில் சம்பந்தப்பட்ட முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் நன்கு யோசித்து பின் முடிவு எடுப்பது சிறந்தது. உங்களுடைய துடிப்பான ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்காக எல்லோருடைய பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். புதிய ஆட்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். முக்கியமான பொறுப்பாக உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன் பணிபுரிகின்ற பணியாளர்களிடம் கொஞ்சம் கனிவுடன் பழகுங்கள். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் சொல்லாதீர்கள். அது உங்களுக்கே ஆபத்தாகவும் முடியும். தேர்வுகளில் நல்ல முடிவுகள் வரும்.


 • சிம்மம்

  ஆன்மீகப் பயணஙகள் மன ஆறுதலைக் கொடுக்கும். தொழிலில் பங்குதாரர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் திட்டமிட்ட காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். தொழில் ரீதியான பயணங்களால் லாபம் உண்டாகும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் வெற்றி கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் அவர்களுடைய தவையை அறிந்து நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். மலைப் பிரதேசங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.


 • கன்னி

  எந்த காரியமாக இருந்தாலும் அதில் மிகவும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்யாதீர்கள். வாகனப் பராமரிப்பு செலவுகள் உண்டாகும். பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்கள் கொஞசம் கவனமாக இருப்பது நல்லது. உங்களுடைய எல்லா முயற்சிகளுக்கும் பெற்றோர்கள் துணை நிற்பார்கள். உடன் வேலை செய்பவர்களால் உங்களுக்கு சாதகமான நிலை உருவாகும். தொழிலில் புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடுங்கள்.

  MOST READ: அஜித் படம் பார்க்க லீவு கேட்ட லீவ் லெட்டர் எழுதிய மாணவன்... நீங்களே பாருங்க...


 • துலாம்

  தொழிலை அடுத்த கட்டத்துக்கு உயர்த்துவதற்கு நண்பர்களின் உதவிகளை நாடிச் செல்வீர்கள். தொழில் ரீதியாக மனதுக்குள் புதுப்புது ஐடியாக்கள் வந்து போகும். ஆனால் எதையும் திட்டமிடாமல் செய்துவிட வேண்டாம். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். கேட்ட இடத்திலிருந்து கடன் உதவிகள் கைக்கு வந்து சேரும். வீட்டில் உள்ளவர்களிடம் கோபத்தைக் காட்டாமல் கொஞ்சம் அனுசரணையோடு நடந்து கொள்வது நல்லது. புதிதாக எந்த காரியத்திலும் இறங்காதீர்கள். அது விரயத்தை உண்டாக்கும். நிர்வாகத் துறையில் இருப்பவர்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.


 • விருச்சிகம்

  தொழிலில் உங்களுடைய பங்குதாரர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். புதிய வாடிக்கையாளர்கள் வருகையால் தொழிலில் பெரும் லாபம் ஏற்படும். தாய்வழியிலான உறவினர்களிடம் கொஞ்சம் நிதானமாகச் செயல்படுவது நல்லது. உங்களுடன் பிறந்த சகோதரர்களிடம் கொஞ்சம் இணக்கமாக நடந்து கொள்ளுங்கள். பொருளாதார நெருக்கடிகள் வந்து போகும். வேலை பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களால் வீண் விரயச் செலவுகள் உண்டாகும். தொழில் முறைக் கலைஞர்களுக்கு கொஞ்சம் பொறுமை அவசியம். பரம்பரை சொத்துக்கள் மற்றும் விலையுயர்ந்த பொருள்களைக் கையாளுகிற பொழுது கூடுதல் பொறுமையுடன் இருப்பது சேதாரத்தைத் தவிர்க்க உதவும்.


 • தனுசு

  நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் வெற்றியிலேயே முடியும். நிலுவையில் இருந்த வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். தொழிலில் பங்குதாரர்களிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். எதிர்பார்த்து காத்திருந்த பண வரவு கைக்கு வந்து சேரும். அதனால் பொருனாதாரம் மேம்படும். குழந்தைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். உறவினர்களால் தேவையற்ற மன சங்கடங்கள் ஏற்படும்.


 • மகரம்

  வர்த்தகம், டிரேடிங் சம்பந்தப்பட்ட துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். சின்ன சின்ன உடல் உபாதைகள் வந்து போகும். கொஞ்சம் கவனமாக இருங்கள். தொழில் ரீதியான பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். சொந்த தொழிலில் புதிய யுக்திகளையும் நுணுக்கங்களையும் பரிசோதனை செய்து பார்ப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சிக்குப் பஞ்சம் இருக்காது. அரசாங்கம் சம்பந்தப்பட்ட பணிகள் வேகமாக நடைபெறும். திருமணப் பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். இறைவழிபாடு மன நிம்மதியைக் கொடுக்கும்.


 • கும்பம்

  வீட்டில் குழந்தைகளின் செயல்களில் கொஞ்சம் கண் வைத்திருங்கள். பரம்பரை சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்களில் வீண் விரயச் செலவுகள் உண்டாகும். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் வலுக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். அடுத்தவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கடன் தொல்லை நீங்கும். நிர்வுாகப் பொறுப்பில் உள்ளவர்கள் புதிய திட்டங்களை அமல்படுத்த முயற்சி செய்து, அதில் வெற்றியும் காண்பீர்கள்.

  MOST READ: ஆண்களைவிட பெண்களுக்கு ஏன் ஒற்றைத் தலைவலி அதிகமா வருது என்று தெரியுமா?


 • மீனம்

  நண்பர்களுடன் சுற்றுலாக்கள் செல்ல ஏற்பாடுகள் நடக்கும். கொண்டாட்டங்கள் மற்றும் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம்மகிழ்ச்சி ஏற்படும். எந்த காரியமாக இருந்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள். தொழிலில் உங்களுடைய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். புதிய வாடிக்கையாளர்களால் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆன்மீக ஈடுபாட்டில் மனம் லயிக்கும். சற்று உடல் சோர்வு வந்து போகும். மனதுக்குள் எதிர்மறை எண்ணங்கள் வந்து போகும். உங்களுடைய மேலதிகாரிகளால் கொஞ்சம் சாதகமற்ற சூழல் உருவாகும்.
ஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை சார்ந்த விஷயமாகவே நாம் நினைத்தாலும், அதற்குள்ளே சில அறிவியலும் இருக்கிறது.

9 கோள்களும் எப்படி இயங்குகின்றனவோ அதை வைத்து, நம்முடைய வாழ்க்கையைக் கணிக்கிற முறை தான் இந்த ஜோதிடம். அந்த ஜோதிடத்தில் இந்த வாரம் 26.11.18 முதல் 2.12.18 வரையிலும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

   
 
ஆரோக்கியம்