Back
Home » திரைத் துளி
நான் முறையாக இந்துஸ்தானி இசையை கற்றவளாக்கும் - ஐபிஎஸ் அதிகாரி ரூபா
Oneindia | 13th Aug, 2019 04:02 PM

பெங்களூரு: கர்நாடகவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான ரூபா தற்போது முதன்முறையாக கன்னட சினிமாவில் பாட்டு பாடி அசத்தியுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரி ரூபா என்றால் நம்மில் இவர் யார் என்றே தெரியாது. 130 கோடி ஜனத்தொகை உள்ள இந்தியாவில் இவர் யாரா இருந்தா எனக்கென்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதே கேள்வியை சற்று மாற்றி பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி என்று சொன்னால், உடனே அவருடைய ஜாதகத்தையே சொல்லி விடுவீர்கள். அந்த அளவுக்கு இவர் பிரபலம்.

கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் அ.தி.மு.க கட்சித் தலைவியான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட பின்பு, மற்ற கைதிகளைப் போல் இல்லாமல், சிறையிலேயே சுதந்திரமாகவும், அடிக்கடி சிறையில் இருந்து வெளியிலும் சென்று வந்ததை வீடியோ ஆதாரத்துடன் நிரூபித்தார்.

இதனையடுத்து ஐபிஎஸ் அதிகாரி ரூபா, உடனடியாக வேறு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு தற்போது, பெங்களூருவில் ரயில்வே ஐஜியாக பணியாற்றி வருகிறார். இருந்தாலும் அவரது துணிச்சலான நடவடிக்கை அனைவராலும் பாராட்டப்பட்டது. கடந்த மே மாதத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக சப்பாத்திக்குள் 2000 ரூபாய் நோட்டுக்களை மறைத்து வைத்து கொண்டு சென்றதை ஆதாரத்துடன் கண்டுபிடித்தார்.

ரசிகர் கொடுத்த காதல் கடிதத்தை பொக்கிஷமாக பாதுகாக்கும் கீர்த்தி சுரேஷ்: காரணம்...

இவர் கடமையில் கண்ணாக இருந்தாலும் கூட நல்ல இந்துஸ்தானி இசையை முறையாக கற்றறிந்தவர். கடந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்களை ஊக்குவிக்கும் விதமாக இசை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் 1965ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான காஜல் படத்தில் இடம் பெற்ற பாடலை பாடியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகியது.

சமீபத்தில் ஐபிஎஸ் அதிகாரி ரூபா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாடியிருந்தார். அதைப் பார்த்த பேயலதாதா பீமண்ணா திரைப்படக்குழுவினர் அவரை இந்தப் படத்தில் கண்டிப்பாக பாட வேண்டும் என்று விரும்பி கேட்டுக்கொண்டனர். அவரும் அதற்கு மறுப்பு எதுவும் சொல்லாமல் ஒரு வார காலம் பயிற்சி எடுத்துக் கொண்டு அதன் பின்னரே பாடி அசத்தியுள்ளார்.

திரைப்படத்தில் பாடியது குறித்து ஐபிஎஸ் அதிகாரி ரூபா கூறியபோது, இது ஒன்றும் டூயட் பாடல் கிடையாது. நானும் இந்துஸ்தானி இசையை முறையாக கற்றிருக்கிறேன். அந்த அனுபவத்திலேயே நான் அந்தப் பாடலை பாடினேன். இதற்காக நான் ஒரு வாரம் பயிற்சி எடுத்துக்கொண்டு அதன் பிறகே பாடினேன். என்றார்.

பின்னணி பாடகர்களான ஜானகி, லதா மங்கேஷ்கர், வாணி ஜெயராம், உள்ளிட்டோரின் பாடல்கள் பிடிக்கும் என்றும் சமீபத்தில் ஸ்ரேயா கோஷலின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தது என்றும் ஐபிஎஸ் அதிகாரி ரூபா கூறினார்.

   
 
ஆரோக்கியம்