Back
Home » திரைத் துளி
முகெனுக்காக ‘தானா சேர்ந்த கூட்டம்’.. வனிதாவையே அலற வைத்த சாண்டி.. கூல்கேப்டன் இப்போ ஆங்கிரி பேர்ட்!
Oneindia | 13th Aug, 2019 05:06 PM
 • முகெனின் கோபம்:

  ஏற்கனவே கோபத்தில் முகென் ஒருமுறை கட்டிலை அடித்து உடைத்திருக்கிறார். அதற்கு முன்னர் டைனிங் டேபில் அவர் கையால் ஆவேசமாக குத்தினார். இதுபோன்ற சம்பவங்களால் அவர் கோபத்தில் முரட்டு தனமாக நடந்து கொள்பவர் எனும் இமேஜ் ஏற்பட்டுள்ளது.


 • அச்சம்:

  இந்த சூழ்நிலையில் தான் இன்று முகென் சேரை தூக்கி அடிக்கும் அளவுக்கு போயிருக்கிறார். எனவே இன்னும் கோபம் ஏற்பட்டால் அவர் தனது கட்டுப்பாடை இழந்து அபிராமியை எப்படி வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற சூழல் பிக் பாஸ் வீட்டில் உள்ளது. இது சக போட்டியாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


 • வனிதா தான் காரணம்:

  அதேசமயம் முகென் அபிக்கு இடையே இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட வனிதா தான் முக்கிய காரணம் என்ற கோபமும் போட்டியாளர்களுக்கு உருவாகியுள்ளது. எனவே அவர்கள் லக்சரி டாஸ்கையும் பொருட்படுத்தாமல் வனிதாவை எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். இது மூன்றாவது புரொமோ மூலம் தெரியவந்துள்ளது.


 • சாண்டியின் கோபம்:

  கோபத்தோடு அமர்ந்திருக்கும் முகெனை சேரன், சாண்டி, மற்றும் கவின் சமாதானப்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது முகெனின் கோபத்தை மேலும் தூண்டிவிடுவது போல் பேசுகிறார் வனிதா. இதனால் கோபமடையும் சாண்டி, கவின் ஆகியோர் வனிதாவால் தான் இத்தனை பிரச்சினையும் என்பது போல் பேசுகின்றனர்.


 • வனிதாவின் டபுள்கேம்:

  உடனே சுதாரித்துக்கொள்ளும் வனிதா, டக்கென பிளேட்டை மாற்றி பேசத்தொடங்குகிறார். 'அந்த பொண்ணு பற்றி எனக்கு நல்லா தெரியும். அவ தான் எல்லாத்துக்கு காரணம்' என அபிக்கு எதிராக குற்றஞ்சாட்டுகிறார். ஆனாலும் விடாமல் வனிதாவை அனைவரும் கார்னர் செய்கின்றனர். இதனை சற்றும் எதிர்பாராத வனிதா, பிரச்சினை ரூட்டை மாற்ற முயற்சிக்கிறார்.


 • தானா சேர்ந்த கூட்டம்:

  இது ஒருபுறம் இருக்க முகென் கடும் கோபத்தில் கைகளை பிடித்தப்படி தன்னை தானே கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருக்கிறார். அவரை சுற்றிலும் நின்று கொண்டு, மற்ற போட்டியாளர் சமாதானம் செய்கின்றனர்.


 • பழைய நினைப்பு:

  நேரத்திற்கு தகுந்த படி தன் பேச்சை மாற்றிக்கொள்ளக் கூடியவர் வனிதா என்பது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் சரி, மக்களுக்கும் சரி ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். கடந்த முறை அவர் போட்டியாளராக இருந்த போதே. அநியாயத்திற்கு நாட்டாமை செய்தார். ஆனால் இப்போது அவர் போட்டியாளர் இல்லை. எனவே தன்னுடைய பருப்பு தற்போது வேகாது என்பது வனிதாவுக்கு தெரியவில்லை.


 • ஆங்கிரி பேர்ட்:

  இதற்கிடையே இந்த சண்டையின் போது மற்றவர்களைவிட இந்த வார கேப்டனான சாண்டி தான் வனிதாவிற்கு எதிராக குரல் கொடுக்கிறார். எனவே நிச்சயம் வரும் நாட்களில் சாண்டிக்கு எதிராக வனிதா ஏதாவது பெரிய பிரச்சினையை உருவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: முகென் விவகாரத்தில் நடிகை வனிதா அப்படியே அந்தர் பல்டி அடித்திருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் வனிதாவின் வருகையால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. முகெனை பற்றிய பல விஷயங்களை கூறி அபிராமியை அவர் கோபமடைய வைத்துள்ளார். இதனால் முகெனுக்கும் அபிராமிக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.

இரண்டாவது புரொமோவில் அபிராமி சேரை கோபத்தில் தள்ளிவிடுவதும், முகென் சேரால் அடிக்க பாய்வது போன்ற காட்சிகள் இருந்தன.

வனிதாவுக்கு எதிராக வாயை திறந்த சாண்டி.. முன்னாள் பொண்டாட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க?

   
 
ஆரோக்கியம்