Back
Home » ஆரோக்கியம்
லீவு நாள்ல எதாவது தின்னுகிட்டே இருக்கீங்களா? கண்ட்ரோல் பண்ண முடியலயா? இத செய்ங்க போதும்...
Boldsky | 17th Aug, 2019 11:48 AM
 • சூடான பானங்கள்

  நீங்கள் சாப்பிடும் உணவை கவனித்து கொள்ளுங்கள். எப்பொழுதும் உங்கள் கையில் ஒரு டம்ளர் தண்ணீர் அல்லது சூடான டீ வைத்துக்கொள்ளுங்கள். தேநீர் போன்ற சூடான பானங்களை எடுத்துக்கொள்வது உங்கள் உணவை குறைக்கும்.

  MOST READ: உடல்உறுப்பு தானம் செய்ய என்ன செய்ய வேண்டும்? சட்டம் என்ன சொல்கிறது?


 • சின்ன சின்ன உதவி

  நீங்கள் உங்கள் உணவை சாப்பிட்டு முடித்துவிட்டால், எழுந்து உங்களுக்கு விருந்தோம்பல் அளித்தவர்களுக்கு மேஜையை துடைத்தல் போன்ற உதவி செய்யுங்கள். அந்த வகையில் உங்களால் அதிகம் சாப்பிடும் எண்ணத்தை தவிர்க்கலாம். மேலும், நீங்கள் சாப்பிட பின் நடப்பது உங்கள் உடல் ஜீரனத்துக்கு நல்லது. அது மட்டுமல்லாமல், உங்கள் நண்பருக்கு அது பெரிய உதவியாக இருக்கும்.


 • இனிப்புகள்

  செயற்கை இனிப்புகளை தவிர்ப்பது நல்லது. உங்கள் பானங்கள் அல்லது இனிப்பு உணவுகளில் செயற்கை இனிப்பான்களை உட்கொள்வது அதிக பசியை உண்டாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூளையில் உள்ள ரசாயன எதிர்வினை கலோரி உட்கொண்டதை உணராமல் உங்களுக்கு இன்னும் சாப்பிட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும்.


 • குறைவாக சமையுங்கள்

  உங்கள் உணவு மற்றும் உணவின் அளவை முன்னரே திட்டமிடுங்கள். எல்லா வேலைக்கும் தேவையான உணவை அந்த அந்த நேரத்திற்கு செய்யாமல் முன்கூட்டியே எல்லா வேலைக்கும் சேர்த்து தேவையான அளவு மட்டும் சமைத்து வைத்துவிட்டால் நீங்கள் அதிகம் சாப்பிட மாட்டீர்கள்.

  MOST READ: பியூட்டிகான் லாவில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா... அவங்க கண்ணுல இருக்கிற விஷயத்த கண்டுபிடிங்க...


 • ஆல்கஹால்

  மது/ஆல்கஹால் சாப்பிடுவதை குறைக்கவும் அல்லது தடுக்கவும். மது/ஆல்கஹால் உங்கள் கலோரி உட்கொள்ளலை சேர்ப்பது மட்டுமல்லாமல் அந்த நிலை உங்களுக்கு ஓரி தவறான உணர்வைத் தந்து உங்களை அதிகமாக சாப்பிட வைக்கும். ஒரு முழு டம்ளர் அளவிற்கு மது அருந்துவதை தவிர்த்து ஒரு அரை க்ளாசில் கிளப் சோடா கலந்து குடிக்க முயற்சி செய்யவும். இதன் மூலம் மது'வின் அளவும் கம்மியாகும் சுவையும் மாறாது


 • வீக்னஸ் என்ன?

  உங்கள் உணவு பலவீனங்களை அப்புறப்படுத்தவும். நாம் அனைவர்க்கும் புடித்தமான உணவை என்ற ஒன்று கனிடிப்பாக இருக்கும். நாம் என்னதான் நன்றாக சாப்பிட்டிருந்தாலும் சரி நமக்கு பிடித்த உணவு நம் கண்முன் இருந்தால் அதை எடுத்து சாப்பிட்டுக்கொண்டே தான் இருப்போம். ஒரு முழு உணவைச் சாப்பிட்ட பிறகு கூட - அது ஒரு கேக், அல்லது குக்கீயாக இருந்தாலும் சரி உங்கள் மூளை நீங்கள் இன்னும் பசியாக இருக்குறீர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக, இந்த "தூண்டுதல் உணவுகள்" அனைத்தையும் முற்றிலுமாக உங்கள் வீட்டிலிருந்து அகற்றுவதே சிறந்தது. அந்த வழியில், நீங்கள் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

  MOST READ: இவர் ஜெட் வேகத்தில் செல்லும் ஹோவர்பேர்டை கண்டுபிடிச்சிருக்காரு... எவ்ளோ வேகம் தெரியுமா?


 • உங்களையே ஏமாத்துங்க

  உங்கள் மூளையை ஏமாற்றுங்கள். சிறிய தட்டு மற்றும் கொஞ்சமான அளவு சாப்பாட்டை உங்கள் தட்டில் வைத்து சாப்பிடுங்கள். சிறிய தட்டு முழுமையாய் இருப்பதை உங்கள் கண்கள் காணும்போது, ​​நீங்கள் உங்கள் மூளை, நீங்கள் தேவையான அளவு சாப்பிடுகிறீர்கள் என்று நினைத்துக் கொள்ளும்.
பொதுவாக விடுமுறை நாட்களில் நிறைய சாப்பிடுபவரா நீங்கள்? வீடாக இருந்தாலும் சரி பொது இடங்களாக இருந்தாலும் சரி அதை பற்றி கவலை கொள்ளாமல் அதிகமாக சாப்பிடுபவரா? இனி கவலை வேண்டாம் மிகுதியாக சாப்பிடுவதை தடுக்க சில குறிப்புகள் இதோ உங்களுக்காக இந்த பதிவில்...

அதிலும் சிலர் விடுமுறை நாட்களில் மட்டும் நாள் முழுவதும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்களே நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாது. அப்படி இருக்கிற உணவுப் பிரியர்கள் எப்படி அந்த பழக்கத்தைச் சமாளிக்கலாம் என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

 
ஆரோக்கியம்