Back
Home » பேட்டி
குருஷேத்ரம்... பஞ்சபூதங்களால் உருவான சண்டை... விவரிக்கும் கனல் கண்ணன்
Oneindia | 24th Aug, 2019 12:49 PM

சென்னை: குருஷேத்ரம் படத்தில் போர்க்கள காட்சிகள் பிரம்மாண்டமாக அமைந்து அனைவரையும் கவர்ந்தது. கடைசி அரை மணிநேரம் கொஞ்சம் கூட போர் அடிக்காமல் இருந்த அந்த போர்க்கள சண்டையில் நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களையும் இணைத்து அற்புதமாக அமைத்த கனல் கண்ணன் தனது அனுபவங்களை நமது ஒன்இந்தியா ஃபிலிமி பீட்டுக்கு பகிர்ந்து கொண்டுள்ளார். குருசேத்ரா மட்டுமல்லாது அஜீத், விஜய் படங்களுக்கு சண்டை காட்சிகள் அமைத்தது, விஜயகாந்த் உடன் வேலை செய்ய முடியாமல் போனது என பல விசயங்களை கூறியுள்ளார்.

மகாபாரதம். பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே நடந்த யுத்தத்தை இது விவரிக்கும் இதிகாசம். பாண்டவ கௌரவ சண்டைக் காட்சிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் குருசேத்ரம் என்ற படம் தயாராகி இருக்கிறது.

சேலஞ்ச் ஸ்டார் நடிகர் தர்சன் துரியோதனனாக நடித்துள்ள இந்த படத்தில் நடிகர் அர்ஜூன் கர்ணனாக நடித்துள்ளார். அர்ஜுனனாக சோனு சூட், சகுனியாக ரவிஷங்கர், திரவுபதியாக சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். நாகன்னா டைரக்டு செய்ய, முனிரத்னா தயாரித்து இருக்கிறார். தமிழில் தாணு வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தில் சண்டை காட்சிகள் மிரட்டலாக அமைந்துள்ளது. போர்க்கள காட்சிகளை அமைத்த விதம் பற்றியும், துரியோதனன், பீமன் இடையேயான சண்டை பற்றியும் அற்புதமாக விவரித்து கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்.

நீர், நெருப்பு என சண்டைக்கு தயாரான நிலையில் நிலத்திற்கு என்ன செய்வது என்று யோசித்தோம். செய்தி பார்த்துக்கொண்டிருந்த போது இந்தோனேசியாவில் நடந்த நில அதிர்ச்சியைப் பார்த்து சின்னதாக யோசனை தோன்றியது. மறுநாள் அதையே சண்டைக்காட்சிக்காக வைத்தோம். பீமன் தனது கதையால் துரியோதனனை ஓங்கி அடிக்கும் போது அது பூமியில் பட்டு பூமி பிளக்கும் பனை மரங்கள் பூமிக்குள் சரியும் வகையில் வடிவமைத்தோம் என்றார்.

நெருப்பு, ஆகாயம்,காற்று என பஞ்சபூதங்களின் துணையோடு குருசேத்ர போர்க்கள காட்சிகளை அமைத்தோம். இந்த சண்டை காட்சிகள் பலராலும் பாராட்டப் பெற்றது. நடிகர் அர்ஜூன் சமீபத்தில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பாராட்டி பேசினார். முதன்முதலாக ஹிஸ்டாரிக்கல் படத்திற்கு சண்டை காட்சிகளை அமைத்தது சவாலாக இருந்தது.

கர்ணன் அம்பு விடும் காட்சிகளுக்காக எடுக்கப்பட்ட காட்சிகள், நடிகர் அர்ஜூனின் நடிப்பு, அர்ஜூனாக நடித்த சோனு சூட் நடிப்பும் அற்புதமாக இருந்தது.

ரியலான சண்டைக்காட்சிகள் குழந்தைகளையும் கவர்ந்தது. துரியோதனின் தொடையில் தட்டி பீமன் கொல்லும் காட்சிகள் சிறப்பாக வந்தது.

புல்லட் ரயிலை தூக்கி புல்டாஸ்ல உதைச்சு பறக்க விடோணும்... சிங்கிள் திரியில் டபுள் அணுகுண்டு!

மகாபாரதத்தில் யாருமே வில்லன்கள் கிடையாது ஹீரோதான். இந்த படத்தில் நிறைய விசயங்களை கற்றுக்கொண்டோம். அஜீத், விஜய் படங்களுக்கு நிறைய வேலை செய்திருக்கிறேன். அஜீத் , விஜய் இரண்டு பேருமே தொழில் மீது பக்தி கொண்டவர்கள். சின்சியராக இருந்ததுதான் அவர்களின் வெற்றிக்குக் காரணம்.

கன்னடம், தெலுங்கு, மலையாளம்,தமிழ் என பல மொழிகளிலும் பிசியாகவே வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார். சண்டை காட்சிகளுக்கு தேசிய விருது பெற்ற அன்பு அறிவு ஆகிய இருவரும் வாழ்த்துக்கள் கூடிய விரைவில் நானும் வாங்கிவிடுவேன் என்று கூறினார்.

100 படங்களுக்கு மேல் வேலை செய்த எனக்கு கேப்டன் விஜயகாந்த் உடன் வேலை செய்ய முடியாதது வருத்தம்தான். அவருடன் நல்ல நட்பு உண்டு என்றும் கூறினார்.

இதிகாசங்களைப் பற்றி தெரிந்து கொள்ள குருசேத்ரா படம் போல பல படங்களை பாருங்க. குழந்தைகளுக்கு இதிகாசங்களைப் பற்று கற்றுக்கொடுக்கலாம் என்று கூறினார் கனல் கண்ணன். வணக்கம் கூறி விடை பெற்றோம்.

   
 
ஆரோக்கியம்