Back
Home » ஹீரோ
சிவகார்த்தியை பார்த்து சூடு போட்ட சந்தானம்.. ரஜினியை பார்த்து முதுகு சுளுக்கிப் போன சிவகார்த்தி!
Oneindia | 27th Aug, 2019 07:18 AM
 • அவரை பண்ணச் சொல்லுங்க

  சிவகார்த்தியின் படத்தில் அவரை காமெடி செய்ய அழைத்தபோது 'ரெண்டு பேரும் டி.வி.யில் காமெடிதான் பண்ணினோம். சினிமாவுல அவருக்கு நான் சீனியர். நான் ஏன் அவர் படத்துல காமெடி பண்ணனும்? இனி நான் ஹீரோவா பண்ணப்போறேன், வேணும்னா அவரை என் படத்துல காமெடி பண்ணச் சொல்லுங்க.' என்று சில தயாரிப்பாளர்களிடம் எரிந்து விழுந்தார்.


 • ஓரளவு ஓடியது

  இது சிவகார்த்தியின் காதுகளுக்கு போக, பையன் செம்ம டென்ஷன். இந்த நிலையில் தான் சபதமிட்டது போல மெய்யாலுமே ஹீரோ அவதாரம் எடுத்தார் சந்தானம். ஏற்கனவே சிவகார்த்தியின் வரவால், மார்க்கெட் டல்லடித்துக் கிடந்த ஹீரோக்கள் சிலர் சந்தானத்தை கைதட்டி ஊக்குவித்தனர். சந்தானம் ஹீரோவாக நடித்த முதல் படமான, அந்த மலையாள ரீமேக் படமும் ஓரளவு ஓடியது.


 • தொடர் தோல்விகள்

  அண்ணனுக்கு தலைகால் புரியலை, அடுத்தடுத்து ஹீரோவாக நடித்தார். அதில் அடுத்த ஒன்றும் ஓடியது ஆனால் அதன் பின் வந்த படங்கள் படுத்துவிட்டன. சில எடுத்து முடிக்கப்பட்டும் ஸ்ட்ரக் ஆகி நின்றன, ஒரு படமோ பாதி முடிந்து அப்படியே கிடப்புக்கு போனது. இன்னொன்றோ டைட்டில் அறிவித்துவிட்டு அப்படியே கிடந்தது.


 • பண முடை

  இந்த நிலையில் நிதி நெருக்கடியிலும் சிக்கிக் கொண்டார் சந்தானம். இந்த நிலையில்தான் சமீபத்தில் வெளியான அவரது 'A 1'படம் ஓரளவுக்கு கை கொடுத்துள்ளது. இந்த தைரியத்தில், ரிலீஸாகாமல் முடங்கிப் போன 'சர்வர் சுந்தரம்' படத்தை ரிலீஸ் செய்ய படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார் மனுஷன்.


 • இப்படி பண்ணுங்க

  இந்த நேரத்தில் திரையுலக பெரும் புள்ளிகள் சிலர் "சந்தானம், உங்களுக்கு பக்கா காமெடி கதைதான் பொருந்தும். அதுல ஹீரோயிஸம் சேர்த்து பண்ணுங்க. பெரிய லெவல் ஹீரோ மாதிரி பறந்து அடிக்கிறது, ஹை ரேஞ்ச் டூயட்டுன்னு போனா செட் ஆகாது." என்று அட்வைஸினர். அவரும் நெளிந்து ஏற்றுக் கொண்டார். சிவகார்த்தியை போல் ஜனரஞ்சக மசாலா, கொஞ்சம் பெரிய ஆக்‌ஷன் என ட்ரை பண்ணிய சந்தானம் விழுந்து அடி வாங்கிதான் இப்போது தன் நிலையை உணர்ந்திருக்கிறார்.


 • சுட்டுக் கொண்ட கார்த்தி

  அதேவேளையில் சிவகார்த்தியோ ஜனரஞ்சக மசாலா தனக்கு கை கொடுத்துவிட்ட நிலையில், சீரியஸ் கதைகள், மற்றும் மாஸ் ஆக்‌ஷனில் இறங்கிப் பார்த்தார் சற்றே ரஜினி போல். வேலைக்காரன் கைகொடுக்கவில்லை. ரஜினியின் 'முத்து' போல் சீமராஜா செய்தார், ஆனால் ஊற்றிக் கொண்டது. கடைசியில் நயன்தாராவை முன்னிறுத்தி ராஜேஸ்.எம் இயக்கத்தில் 'மிஸ்டர் லோக்கல்' செய்தார் அதுவும் ஃபிளாப்.


 • இப்படிக்கா போகலாம்

  அதனால் தன்னை ஆளாக்கிவிட்ட பாண்டிராஜ் இயக்கத்தில் மீண்டும் தன் பழைய ஸ்டைலில் கிராமத்து காமெடி, கொஞ்சம் ஆக்‌ஷன், பக்கா சென்டிமெண்ட் என்று பழைய ரூட்டுக்கே மாறிவிட்டார். இதுவாவது கைகொடுக்குமா என்று கவனிப்போம்! ஆக டி.வி.யிலிருந்து சினிமாவுக்கு வந்த இருவரும் தங்கள் நிலையை இப்போது உணர்ந்துள்ளார்கள்! என்கிறது கோடம்பாக்க பட்சி ஒன்று.

  கலக்குவாங்களான்னு கவனிப்போம்!

  - ஜி.தாமிரா
சென்னை: சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து கலக்கியவர்களில் சமீபத்திய உதாரணங்கள் சிவகார்த்திகேயனும், சந்தானமும். முன்னவர் ஸ்டாண்ட் அப் காமெடியிலும், பின்னவர் இமிடேட்டிங் காமெடியிலும் டி.வி.யில் கலக்கியவர்கள். பின் மெதுவாக சினிமாவுக்குள் வந்து அதிரிபுதிரி ஹிட்டடித்தனர்.

இதில் சிவகார்த்திகேயன் காமெடித்தனங்கள் நிறைந்த ஹீரோவாக வந்து மக்களின் மனங்களை பிடித்தார். சந்தானமோ பக்கா காமெடியனாகவே பெரிய உயரத்துக்கு வளர்ந்தார். அதிலும் சந்தானம், சினிமாவில் கலக்க துவங்கி நீண்ட காலத்துக்குப் பின் தான் சிவகார்த்தி பெரிய திரைக்கு வந்தார். ஆனால் வந்த வேகத்தில் தாறுமாறாக வளர்ந்துவிட்டார்.

பெரிய ஹீரோக்களுடன் இணைந்து நடித்த சந்தானம், அந்த ஹீரோக்களுக்காக சினிமாவில் பெரிய ஹீரோயின்களிடம் தூது போவார். இப்படியான பெரிய ஹீரோயின்களோ சிவகார்த்தியின் படங்களில் ஜோடியானார்கள். சந்தானத்தால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை.

   
 
ஆரோக்கியம்