Back
Home » பேட்டி
பிக்பாஸ்ல சேரன் ஜெயிக்கணும்னு ஆசை - சீரியல் வில்லி தேவிப்ரியா
Oneindia | 28th Aug, 2019 04:41 PM
 • மதுரைப் பொண்ணு

  நான் பிறந்தது மதுரையில் தான். ஆனால் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து சென்னையில் தான் வளர்ந்தேன், ஸ்கூல்ல படிச்சதும் இங்குதான். அதனால் எனக்கு சென்னை ரொம்ப ஸ்பெஷல். நான் படிச்ச, மந்தைவெளியில் இருக்கும் செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி எனக்கு ரொம்ப பிடிக்கும். அங்கு ஓரளவுக்கு நல்லா படிப்பேன். பி.ஏ. லிட்ரேச்சர் டிகிரி எல்லாம் கரஸ்ல தான் படிச்சேன்.


 • மயிலை கபாலீஸ்வரர்

  அதே மாதிரி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுக்கு காரணம் என்னன்னா அந்த கோவிலுக்குள்ள போயிட்டாலே ஏதோ ஒரு திருவிழாவிற்கு போவது போல் இருக்கும். கோயில சுத்தி தெப்பக்குளம், மார்கெட் எல்லாம் இருக்கும். ஆனா இப்ப மார்கெட் எல்லாம் இல்ல. அங்க போனா காய்கறி, கீரை எல்லாமே ஃப்ரெஷ்ஸா வாங்கிட்டு வரலாம். அதென்னமோ தெரியலை. அந்த கோவிலுக்குள்ளாற போயிட்டாலே ஏதோ ஒரு வைப்ரேஷன் நம்ம உடம்புல பாயுறமாதிரி இருக்கும்.


 • அறுபத்து மூவர் திருவிழா

  அதிலும், அந்த அறுபத்து மூவர் திருவிழா நடந்துச்சின்னாலே, அது தான் எங்களுக்கெல்லாம் தீபாவளி மாதிரி. அவ்வளவு ஜாலியா இருக்கும். என்னால அதெல்லாத்தையும் மறக்கவே முடியாது. அதே மாதிரி கிருஷ்ண ஜெயந்திக்கு ஒரிஜினல் பலகாரம் எல்லாம் மயிலாப்பூர்ல தான் கிடைக்கும். அந்த ஸ்வீட் எல்லாத்தையும் சாப்பிட்டு தான் நான் இவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கேன். அதெல்லாம் என்னால மறக்க முடியாத விஷயம். அப்புறம் நாகேஷ்வரராவ் பார்க். அதையும் என்னால மறக்க முடியாத விஷயம். அங்க தான் என்னோட ஸ்கூல் டேஸ்ல நான் விளையாடி இருக்கேன். என்னடா இவ மயிலாப்பூரையே சுத்தி சுத்தி வர்றாலேன்னு நினைப்பீங்க. நம்மளால மறக்க முடியாத விஷயங்கள் தான் நம்ம மனசுல நிக்கும்.


 • மீன் மார்கெட்

  எனக்கு மீன் ரொம்ப பிடிக்கும். அதிலும் வானகரம் மீன் மார்கெட் ரொம்ப பிடிக்கும். அங்க போய் மீன் வாங்குறோமோ, இல்லையோ, அவ்ளோ பெரிய மார்கெட்ட சுத்தி வர்றது ரொம்ப பிடிக்கும். உலகத்துல கிடைக்காத மீன் எல்லாம் அங்க கெடைக்குது. அதனால் அடையாளம் தெரியாம இருக்குறதுக்காக, நான் முகத்துல ஸ்கார்ப் கட்டிகிட்டு சும்மா ரவுண்ட்ஸ் வருவேன். அந்த மார்கெட்ல திருக்கை, பாறை, கோலா, ஷீலா, வஞ்சிரம், கடம்பான்னு வெரைட்டியா மீன்கள் கிடைக்கும். நான் மீன் குழம்பு நல்லா சமைப்பேன்.


 • சன்டிவி சீரியல்

  நான் ரொம்ப நாளைக்கு பின்னாடி சன் டிவி சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். இப்ப இருக்குற டெக்னிகல் டீம் எல்லாம் ரொம்ப அட்வான்ஸ்டா இருக்கு. கேமாரால இருந்து, ஸ்கிரிப்ட்ல இருந்து எல்லாத்திலேயும் அட்வான்ஸ்டா இருக்காங்க. அந்த வகையில் இப்ப ரீஎண்ட்ரி ஆகியிருக்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு.


 • பிக்பாஸ் சேரன்

  இப்போ ட்ரெண்டிங்கா போய்கிட்டு இருக்கிற பிக் பாஸ் நிகழ்ச்சியில, என்னோட ஃபேவரைட் ஸ்டார் டைரக்டர் சேரன் சார் தான். அவர் தான் ஜெயிக்கணும்னு நான் விரும்புறேன். ஏன்னா நமக்கு பிடிச்சவங்க ஜெயிக்கணும்னு நினைக்கிறது இயல்பு தானே. அதோட, பிக் பாஸ் வீட்டுலயே அவரு தான் ரொம்ப நியாயமா இருக்கிறாரு. எல்லாத்துக்கொம் பொறுமையா இருக்கிறாரு. அதனால அவரு தான் ஜெயிக்கணும்னு நான் விரும்புறேன் என்றார்.
சென்னை: சின்னத்திரையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரீ என்ட்ரி ஆகியிருக்கும் தேவிப்பிரியவிற்கு பிக்பாஸ் ஷோவில் சேரன் பட்டம் வென்று பரிசை ஜெயிக்க வேண்டும் என்பது ஆசையாம். கபாலீஸ்வரர் கோவிலுக்குள்ள போயிட்டாலே நமக்கு ஒரு பாஸிட்டிவான எனர்ஸி கிடைக்கும். அறுபத்து மூவர் திருவிழா தான் எங்களுக்கெல்லாம் தீபாவளி மாதிரி என்று தன் மலரும் நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் தேவிப்ரியா

தல அஜீத் குமார் நடித்த வாலி படத்தில் சிறு வேடத்தில் நடித்த நடிகை தேவிப்பிரியா, பின்பு சின்னத் திரை பக்கம் தன் பார்வையை திருப்பி, இன்றைக்கு சின்னத்திரை சீரியல்களில் தவிர்க்க முடியாத நபராக இருந்து வருகிறார். அவர் நம்முடைய ஃபிலிமி பீட்டுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

பத்து ரூபாய் சம்பளம் கொடுத்தால் நூறு ரூபாய்க்கு நடிக்கிறேன். அதனால் ஒரு வேளை எனக்கு சின்னத்திரை ஜோதிகா என்று பட்டம் கொடுத்திருக்கலாம். இருந்தாலும், ஜோதிகா ஒரு பன்முகத் திறமை கொண்ட நடிகை. அவங்களோடு என்னை ஒப்பிடுவது தவறு என்று அடக்கமாக சொன்னார் தேவிப்ரியா.

   
 
ஆரோக்கியம்