Back
Home » வேலைவாய்ப்பு
Teachers Day: உலகமே கண்டுவியந்த வரலாற்று சிறப்புமிக்க ஆசிரியர்கள் இவர்கள் தான்!
Career India | 5th Sep, 2019 01:09 PM
 • ஆசிரியர் தினம்

  கல்வியில் மிகவும் சிறந்த மற்றும் தன் இறுதிக் காலம் வரையில் சிறந்த ஆசிரியராக செயல்பட்ட, இந்திய நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக இருந்தவர் டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவரது பிறந்தநாளைத் தான் இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றோம். அவ்வாறு, ஒவ்வொரு நாட்டின் வரலாற்றில் நிறைய ஆசிரியர்கள் உள்ளனர். அந்த வரலாற்றில் மிகவும் பிரபலமான சில ஆசிரியர்கள் குறித்து அறிந்து கொள்வோம் வாங்க.


 • டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

  டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் தான் இந்தியாவில் ஆசிரியர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. மெட்ராஸ் மாநிலக் கல்லூரில் ஆசிரியராக பணியாற்றிய இவர் நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாகவும் செயல்பட்டார்.


 • அலெக்ஸாண்ட்ரா கிரகாம் பெல்

  அலெக்ஸாண்ட்ரா கிரகாம் பெல் என்றவுடன் நம் அனைவரின் நினைவுக்கு வருவது டெலிபோனைக் கண்டுபிடித்த மாமனிதர். பாஸ்டன் என்னும் காதுகேளாதோர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி, அவர்களுக்கு நல்ல முறையில் கல்வியை கற்றுக் கொடுத்ததில் இவரது பங்கு போற்றத்தக்கது.

  ஆசிரியர் தினம் 2019: தமிழகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு தான் தேசிய நல்லாசிரியர் விருது!


 • பண்டிட் ரவி சங்கர்

  இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆசிரியர்களில் ஒருவர் பண்டிட் ரவி சங்கர். மிகச் சிறந்த ஒரு சிதார் மேதை ஆவார். இசை ஆசிரியராக பணியாற்றி, பல வித்துவான்களை உருவாக்கிய ஆசிரியர் பண்டிட் ரவி சங்கர்.


 • ஸ்டிங்

  உலக அளவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளரான ஸ்டிங், ஆரம்பக் காலத்தில் லண்டனில் உள்ள செயிண்ட் கேத்ரீன் கான்வென்ட் பள்ளியில் ஆங்கிலம், இசை மற்றும் கால்பந்தாட்ட ஆசிரியராக பணியாற்றினார். மாணவர்களிடத்தில் மிகுந்த அன்பைப் பெற்ற இவரும் மிகச்சிறந்த ஆசிரியர் தான்.


 • ராபர்ட் புரோஸ்ட்

  பிரபலமான கவிஞர்களில் ஒருவர் ராபர்ட் புரோஸ்ட். நியூ ஹாம்ப்ஷையர் டெர்ரியில் உள்ள பிங்கெர்டன் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி மாணவர்கள் மத்தியில் கலை மற்றும் கல்வி குறித்து மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினார். ஆனால் வேடிக்கையான விசயமாகக் கோழி மீது அதிக பயத்தைக் கொண்டிருந்தார் இவர். இதனாலேயே இந்த பல்கலைக்கழகத்தில் இவருக்கு என ஹென் மேன் என்ற பெயரும் சூட்டப்பட்டது.

  டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஏன் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம் தெரியுமா?


 • சில்வஸ்டர் ஸ்டலோன்

  உலக அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அமெரிக்கக் கதாநாயகனான சில்வஸ்டர் ஸ்டலோன். நடிப்பைத் தவிர்த்து இவரது முக்கிய அடையாளமாக இருப்பது இவரும் ஓர் ஆசிரியர் தான். அதிலும் இவர் சுவிச்சர்லாந்தில் உள்ள அமெரிக்கக் கல்லூரியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.


 • ஸ்டீபன் கிங்

  வரலாற்றில் புகழ்பெற்ற ஆசிரியர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் ஸ்டீபன் கிங். பிரபலமான ஆசிரியரான இவர் மைனேவின் ஹாம்ப்டெனில் உள்ள ஹாம்ப்டென் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார்.


 • பேராசிரியர் கலிலியோ

  சூரியனை மையமாகக் கொண்டு தான் அனைத்து கோள்களும் சுற்றி வருகின்றன என உலகிற்கே அறியச் செய்தவர் கலிலியோ. 1564 ம் ஆண்டு இத்தாலியில் பிறந்த இவர் தனது வாழ்க்கையைப் பேராசிரியராகத் தான் துவக்கினார். 1589 ல் பைசா நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கணிதப் பேராசிரியராக பணியைத் தொடங்கினார். மேலும், விடாது ஆராய்ச்சி செய்து 1609 ல் தொலைநோக்கியை கண்டறிந்தார். பின்னர் தொலைநோக்கியின் திறனை அதிகரித்து வியாழன், சனி, வெள்ளி ஆகிய கோள்களைக் கண்டறிந்தார்.


 • ஐசக் நியூட்டன்

  ஈர்ப்பு விசை மற்றும் புவியீர்ப்பு விசை குறித்த கோட்பாடுகளை ஆராய்ந்து வெளிப்படுத்தியவர் ஐசக் நியூட்டன். பள்ளிப்பருவத்திலிருந்தே ஆய்வை தொடங்கிய அவர், கணிதவியலில் பட்டம் பெற்று, பல பல்கலைக்கழகங்களில் பகுதிநேர ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். 1665ல் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்து சாதனையாளராக உருவெடுத்தார். அப்பொழுதுதான் புவியீர்ப்பு விசை மற்றும் ஈர்ப்பு விசை கோட்பாடுகளை வெளியிட்டார்.


 • ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

  உலகம் போற்றும் சிறந்த விஞ்ஞானியாகவும், சார்புத்துவக் கோட்பாடுகளையும் கண்டறிந்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவர் மிகச்சிறந்த ஆசிரியர் என்பது ஓர் சிலர் மட்டுமே அறிந்த உண்மை. 1909 ம் ஆண்டு பேராசிரியராகத் தனது வாழ்க்கையைத் துவங்கிய ஐன்ஸ்டீன், பல்வேறு நாட்டு பல்கலைக் கழகங்களின் தலைவராகவும், பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.

  கடினமான ஆசிரியப்பணிக்கு இடையேயும், சார்பு கோட்பாடு குறித்த ஆய்வை தொடர்ந்து மேற்கொண்டார். அமெரிக்கா, ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் இவருடைய சேவையைப் பாராட்டி அறிவியல், மருத்துவம், தத்துவத்துறைகளில் டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளன. 1921 ல் சார்பு கோட்பாடு கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்ற ஆசிரியரும் இவரே.


 • கீதாஞ்சலி நாயகன் ரவீந்திரநாத் தாகூர்

  இந்திய நாட்டின் தேசிய கீதத்தை தொகுத்த ரவீந்திரநாத் தாகூர் மிகச்சிறந்த ஆசிரியர் என்பது பெரும்பாலானோர் அறியாத ஒன்று. இலக்கியவாதியாக இருந்து கீதாஞ்சலியை உலகிற்கு அளித்த தாகூர், சாந்திநிகேதனில் பள்ளி ஒன்றையும் நிறுவினார். அதில் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்தும் கற்பித்தார். ரவீந்திரநாத் தாகூர் தொடங்கிய ஒரு சாந்திநிகேதன் பள்ளி, இன்று நாடு முழுவதும் தலைசிறந்த பல்கலைக்கழகமாக உயர்ந்து நிற்கிறது என்றால் மிகையாகாது.

  குளியல் அறையில் சுய இன்பம்: IIT Roorkee மாணவர்களுக்கு பரபரப்பு நோட்டீஸ்!
ஆசிரியர் தினமானது ஒவ்வொரு நாடுகளிலும் தேதி வேறுபட்டு கொண்டாடப்படும். அந்நாட்டு கல்வியாளரை சிறப்பிக்கும் விதமாகவும், கல்வியில் மாற்றத்தைக் கொண்டுவந்தவரை கவுரவிக்கும் விதமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்தியாவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை போற்றும் வகையில் செப்டம்பர் 5ம் தேதியன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

   
 
ஆரோக்கியம்