Back
Home » உலக நடப்புகள்
பரம ஏழையாக பிறந்து இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த வீரர்கள் யார் யார் தெரியுமா?
Boldsky | 10th Sep, 2019 12:04 PM
 • பதான் சகோதர்கள்

  இர்பான், யூசுப் பதான் சகோதரர்களின் பந்து வீச்சு பற்றி நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவர்கள் எப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார்கள் என்று தெரியுமா? பதானின் தந்தை அவர்களுடைய ஊரில் உள்ள ஒரு சிறிய மசூதியில் ஓதுவாராகவும் மசூதியை சுத்தம் செய்பவராகவும் வேலை செய்து வந்தார். பதான் சகோதரர்கள் அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் மசூதிக்குச் சென்று தன் தந்தைக்கு உதவியாக மசூதியை சுத்தம் செய்ய உதவி செய்வார்களாம். இருவருக்குமே பொறுப்பு அதிகம். அந்த பொறுப்புதான் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக மாற்றியிருக்கிறது.


 • உமேஷ் யாதவ்

  உமேஷ் மிகமிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவருடைய தந்தை சுரங்கத்தில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளி. வறுமையின் காரணமாக 12 ஆம் வகுப்புக்கு மேல் அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை. ஒரு கட்டத்தில் உமேஷின் குடும்பமே உமேஷின் தந்தை மற்றும் உமேஷின் தினசரி கூலியில் தான் நடந்து கொண்டிருந்தது.

  MOST READ: இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்க கண்பார்வை மங்கலாகப் போகுதுனு அர்த்தம்...


 • ரவீந்திர ஜடேஜா

  பொருள்களை பேக்கிங் செய்து வெளியூருக்கு அனுப்பும் ஒரு ஷிப்பிங் கம்பெனியில் தான் ஜடேஜாவின் தந்தை செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். குடும்ப வறுமையின் காரணமாக ஜடேஜாவும் அங்கேயே வேலை பார்த்து வந்தார். இதற்கிடையில் தன்னுடைய கடின உழைப்பு மற்றும் பயிற்சியால் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிக்கான தேசிய அணியில் இடம் பிடித்தார்.


 • புவனேஷ்வர் குமார்

  புவனேஷ்வர் மிகமிக ஏழ்மையான பெரிய குடும்பத்தில் பிறந்தவர். தன்னுடைய சிறுவயதில் விளையாட்டில் ஆர்வம் அதிகமாகி பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்த காலகட்டங்களில் அவரிடம் ஒரு ஜோடி ஷூ கூட அவரிடம் இல்லை என்றால் அவருடைய நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவருடைய சகோதரி தான் சேர்த்து வைத்திருக்கும் சுங்கடிப் பணத்தை வைத்து தன்னுடைய சகோதரனுக்கு உதவியிருக்கிறார். அதுதான் அவரை இன்றைக்கு இந்திய அணியின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக மாற்றியிருக்கிறது.


 • மனோஜ் திவாரி

  மனோஜின் தந்தை ரயில்வே ஷ்டேனில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதனால் அவரின் குடும்ப வறுமை ஒழிந்தபாடில்லை. அதனால் அவரும் ரயில்வே ஸ்டேனில் உள்ள சின்ன சின்ன கடைகளில் வேலை பார்த்து, தன்னால் முடிந்த உதவியை குடும்பத்துக்காக செய்து வந்தார். மனோஜின் திறமையை உற்றுநோக்கிய அவருடைய சகோதரர் தான் இந்திய கிரிக்கெட் கிளப்பில் மனோஜின் பெயரை சேர்க்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். அதை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட மனோஜ் 2005 ஆம் ஆண்டில், 19 வயதுக்கு உட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆகும் அளவுக்கு தன்னுடைய கடின உழைப்பால் உயர்ந்தார்.


 • வினோத் காம்ப்ளி

  வினோத் காம்ளி மிக மிக ஏழ்மையைான குடும்பத்தில் பிறந்தவர். மும்பையில் உள்ள பிண்டி பஜார் பகுதியில் உள்ள ஒரு குடிசைப்பகுதியில் தான் பிறந்து வளர்ந்தார். அவருடைய தந்தை ஒரு மெக்கானிக். அவருடைய வருமானம் என்பது அவருடைய குடும்பத்துக்கு வயிறாற சாப்பிடுவதற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. அத்தகைய குடும்பத்தில் இருந்து தன்னுடைய கடின உழைப்பு மற்றும் முயற்சியால் இந்திய கிரிக்கெட் அணியில் இவ்வளவு பெரிய இடத்தை பிடித்திருப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது.


 • முனாஃப் படேல்

  முனாஃப் படேலும் வறுமையால் வாடிய குடும்ப பின்னணி கொண்டவர் தான். அவருடைய தந்தை மற்றொருவருடைய நிலத்தில் கூலிக்கு வேலை பார்த்து வந்தார். முனாஃபும் தந்தையுடன் அவருக்கு உதவியாக வேலைக்கு வருவதாகக் கூறியிருக்கிறார். ஆனால் தந்தையோ நீ விளையாட்டில் மிகப்பெரிய ஆளாக வர வேண்டும் என்று சொல்ல, அதற்கான முயற்சியை மேற்கொள்ள ஆரம்பித்தார் முனாஃப். தற்போது மில்லியன்களில் சம்பாதிக்கிறார்.

  MOST READ: சாப்பிடதும் வயிறு திம்முனு ஆயிடுதா?... அப்ப இதெல்லாம் சாப்பிடவே சாப்பிடாதீங்க...


 • கம்ரான் கான்

  கம்ரானின் தந்தை என்ன வேலை செய்து வந்தார் தெரியுமா? மரம் வெட்டும் தொழில். அவ்வளவு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் தான் கம்ரான். அவரும் அவருடைய குடும்பமும் தூங்குவதெல்லாம் பிளாட்பார்மில் தான். சில சமயங்களில் கையில் காசு இருந்தால் ரயில்வே ஸ்டேஷனில் போய் பிளாட் பார்ம் டிக்கெட் வாங்கிக் கொண்டு அங்குதான் இரவைக் கழித்திருக்கிறார். அதன்பிறகு இந்திய அணிக்காக விளையாடிய பின் அவருடைய முதல் காண்ட்ரக்ட் தொகை எவ்வளவு தெரியுமா? 15 லட்ச ரூபாய்.

  இதுபோல் இந்திய அணியில் உழைப்பால் முன்னேறியவர்கள் நிறைய பேர் இருக்கிறார். உழைப்பும் நம்பிக்கையும் தான் அவர்களுடைய மூலதனமாக இருந்திருக்கிறது.
ஒரு துறையில் முன்னேறி தேசிய அளவில் வெற்றியை நிலை நாட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. அதிலும் விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் பல தடைகளையும் கடந்து சாதித்துக் காட்டுவது என்பது மிகப்பெரிய விஷயம். அது எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி. அதிலும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் இந்திய நாட்டுக்காக விளையாடுவது அவ்வளவு எளிதான காரியமா?

அதிலும் இந்திய அணிக்காக தேசிய அளவில் காலடி எடுத்து வைப்பதென்பது அவ்வளவு எளிமையான காரியமா என்ன? கடின உழைப்பு மட்டும் இன்றி எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து பயிற்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஓரளவுக்கு நிறைவான வசதியும் நல்ல குடும்ப பின்னணியும் இருப்பவர்களாலேயே இந்திய அணிக்குள் நுழைய நிறைய சிரமப்பட வேண்டியிருக்கும் நிலையில், மிகமிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தங்களுடைய கடின உழைப்பால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற வீரர்கள் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.

   
 
ஆரோக்கியம்