Back
Home » லேட்டஸ்ட்
ஒருவாய் சோற்றுக்கே கஷ்டப்பட்ட சிவன் குடும்பம்- இஸ்ரோ வரை எப்படி சாதித்தார்?
Gizbot | 11th Sep, 2019 12:28 PM
 • சந்திராயன்-2 திட்டம்

  இந்தியாவின் கனவுத்திட்டங்களில் ஒன்று. இஸ்ரோ வெற்றிகரமாக ஜிஎஸ்எல்வி மார்க்-3 எம்.1 ராக்கெட்டில் ஸ்ரீஹரிகோட்டா சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சந்திராயன்-2ல் இருந்து , ஆர்பிட்டர் வெற்றிகரமாக பிரிந்தது, லேண்டரும் வெற்றிரமாக பிரிந்து சென்றது.


 • சிக்னல் கட்

  விக்ரம் லேண்டருடன் இருந்த தகவல் நிலவுக்கு 2.1 கி.மீ முன்னால் திடீரென கட்டானது. பிறகு விக்ரம் லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவர் உள்ளிட்டவைகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. பிறகு, ஆர்பிட்டர் வழியாக தேடி கண்டுபிக்கப்பட்டது. மேலும், லேண்டர் பத்திரமாக இறங்க வேண்டிய இடத்தில் தரையிறங்கியிருந்தது. லேண்டருக்கு ஆர்பிட்டர் வழியாகவும் நேரடியாக ரோவரையும், இஸ்ரோ மையத்தில் இருந்தும் இருவழியாகதொடர்பு கொள்ள முடியும்.


 • விவசாய குடும்பத்தில் பிறந்தார்

  கே சிவன் என்றழைக்கப்படும் கைலாசவடிவூடைய சிவன் கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கல்வளையில் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறந்தார்.

  அரசு பள்ளியில் படித்த கைலாசவடிவூ சிவன், நாகர்கோவிலில் எஸ்டி இந்து கல்லூரயில் பட்ட் பெற்றார். பின்னர் எம்ஐடியில் ஏரோநாட்க்கல் என்ஜினியரிங் படித்தார்.

  சந்திராயன்-2 லேண்டர் பேட்டரிக்கு மின்சப்ளை துவங்கியது:இஸ்ரோ-நாசா சேருகிறது.!


 • ஏரோ நாட்டிக்கல் இன்ஜியரிங்

  பிறகு எம்பஐடியில் ஏரோநாட்டிகல் என்ஜினியரிங் படித்தார். தொடர்ந்து இன்ஜினியரிங் முதுகலையும் படித்தார். பிறகு ஐஐடி மும்பையில் விண்வெளித்துறையில் பிஹெச் முடித்தார்.

  ரோவரை இயக்க இஸ்ரோ மும்முரம்: வாழ்த்து கூறி மொத்த உலகை திருப்பிய பாகிஸ்தான்.!


 • செருப்பு இல்லாமல் பயணித்தார்

  இந்நிலையில், பள்ளிக்கு செல்லும் போது, செருப்பு கூட இல்லாமல் தான் செல்வார். கல்லூரிக்கு வேட்டி அணிந்து அவமானங்களையும் சந்தித்துள்ளார். அவரின் குடும்பம் மூன்று வேலை சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டது.


 • அப்பாவுக்கு உதவியாக வேலை

  இந்நிலையில் அப்பாவுக்கு உதவியாக வயலில் வேலை செய்துள்ளார். வேலை செய்ய வேண்டும் என்பதற்காக வீட்டிற்கு அருகில் உள்ள கல்லூரியில் படித்தார் சிவன். சிவன் தான் அவர்களது குடும்பத்தில் முதல் பட்டதாரியும் கூட.


 • சகோதரிகளின் படிப்பு பறிபோனது

  வறுமையால் அவரது சகோதரிகளின் படிப்பும் பாதியிலேயே பறிபோனது. படிக்கும் போதே பல்வேறு இடையூர்களையும் கடந்து சிவன் பயணித்தார்.

  விக்ரம் லேண்டரின் அசல் புகைப்படம் வெளியிடப்படாததற்குக் காரணம் இதுதான்!


 • இஸ்ரோவில் சாதனைகள்

  1982ம் இண்டில் இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்த அவர், பல்வேறு சாதனகளையும் செய்தார். 2018 ஜனவரி தல் விக்ரம் சாராய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பதவியையும் வகித்து வருகின்றார். பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி உள்ளிட்ட ராக்கெட்களை வளர்ச்சியில் இவரது பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


 • 104 செயற்கைகோள் சாதனை

  இந்நிலையில் கடந்த 2017ல் பிப்ரரி 15ம் ததி 104 செயற்கைகோள்களை அனுப்பி இஸ்ரே உலக சாதனை படைத்தது. தற்போது சந்திராயன்-2 திட்டத்திற்கு அவர குழு சிறப்பாக பணியாற்றியுள்ளது.


 • மயில்சாமி, காலமிற்கு பிறகு

  ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, விண்வெளித்துறையில் சிவனும் அபார சாதனை படைத்துள்ளார்.

  பிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனை: சியோமி, சாம்சங் ஸ்மார்ட் டிவிகளுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!


 • கண்ணீர் விட்ட சிவன்

  பிரதமர் மோடியின் லேண்டர் விக்ரமுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று கண்ணீர்விட்டார் சிவன். மோடி மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவும் அவருக்கு உறுதுணையாக இருந்தது. சந்திராயன்-2 திட்டமும் தற்போது, 95 சதவீதம் வெற்றியடைந்துள்ளது. தற்போது, லேண்டரையும் இயக்கும் திட்டமும் சிறப்பாக செயல்படுகின்றது.
இஸ்ரோவின் தலைவராக இருக்கும் சிவன். இவர் தமிழர் என்பது உலகறிந்த ஒன்று. பல்வேறு சோதனைகளையும் தாண்டி வெற்றிகரமாக சந்திராயன்-2லும் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார்.

 
ஆரோக்கியம்