Back
Home » லேட்டஸ்ட்
அலிபாபா நிறுவன தலைமை பொறுப்பிலிருந்து விலகிய ஜேக் மா.!
Gizbot | 11th Sep, 2019 04:10 PM
 • ள ஒலிம்பிக் அளவிலான விளையாட்டு அரங்கத்தில் தனது இறுதி நாளை கொண்டாடவுள்ளார்

  கடந்த ஆண்டு இந்நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஜேக் மா, தனது 55 வது பிறந்தநாளன்று 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது நிறுவனத்தை நிறுவிய ஹாங்க்சோவில் உள்ள ஒலிம்பிக் அளவிலான விளையாட்டு அரங்கத்தில் தனது இறுதி நாளை கொண்டாடவுள்ளார்.


 • டேனியல் ஜாங்க் பதவியேற்கவுள்ளார்

  சீனாவின் மிகவும் எளிதாக அடையாளம் காணக்கூடிய பொது நபர்களில் ஒருவராகவும், அனைவரையும் கவர்ந்திழுக்கும் தொழில்முனைவோராகவும் உள்ள இவருக்கு மாற்றாக, குறைந்த அனுபவமே உள்ள நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும் மற்றும் பயிற்சி பெற்ற கணக்காளருமான டேனியல் ஜாங்க் பதவியேற்கவுள்ளார்.

  கடந்த திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் ஜேக் மா கூறுகையில் "நான் எப்போதும் எதிர்காலத்தை பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் நபர். நான் எப்போதும் கடந்தகாலத்தை திரும்பி பார்க்க விரும்பவில்லை " என தெரிவித்தார். முன்னாள் ஆங்கில ஆசிரியரான ஜேக் மா, கிராமப்புறங்களில் கல்வியில் கவனம் செலுத்தி, தொண்டு பணிகளை ஆற்றுவது தனது நோக்கமாக இருக்கும் என்று முன்பு கூறியிருந்தார்.

  வேலூர் மக்கள் பீதி: வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருள் ஏலியனா அல்லது வெடிகுண்டா?


 • கனவுகள் உள்ளன

  கடந்த ஆண்டு தனது ராஜினாமாவை அறிவிக்கும் ஒரு திறந்த கடிதத்தில் ஜேக் மா எழுதியதாவது " நான் எனது வாழ்வை தொடர நிறைய கனவுகள் உள்ளன. வெறுமனே உட்கார்ந்திருப்பது எனக்கு பிடிக்காது என்பது என்னை அறிந்தவர்களுக்குத் தெரியும். உலகம் மிகப்பெரியது மற்றும் நான் இன்னும் இளமையாகவே இருக்கிறேன். எனவே புதிய விஷயங்களை முயற்சிக்க விரும்புகிறேன். " என குறிப்பிட்டுள்ளார்.


 • 2017ஆம் ஆண்டு

  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், முதலீட்டாளர்கள் ஜேக் மா தெரிவித்த எந்தவொரு கருத்துக்களையும், அவர் ஏதாவது கூறுவாரா அல்லது அவர் இந்நிறுவனத்தில் தொடர்ந்து செயல்படுவாரா என கூர்ந்து கவனித்தனர் . அவரது நடிப்பு திறனுக்காக பெரிதும் அறியப்பட்ட ஜேக் மா, ஒரு சிறந்த பர்பாமென்ஸ்-ஐ கொடுப்பார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர். 2017ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வில், அவர் மைக்கேல் ஜாக்சன் போல ஆடை அணிந்து பில்லி ஜீன் பாடலுக்கு நடனமாடியது குறிப்பிடத்தக்கது.


 • 1999 இல் ஹாங்க்சோவில்

  ஜேக் மா'வின் குடிசையில் இருந்து கோபுரம் கதை சீனாவில் உள்ள தொழில்நுட்ப தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தியுள்ளது. அவர் 1999 இல் ஹாங்க்சோவில் உள்ள ஒரு அடுக்குமாடு குடியிருப்பில் நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து அலிபாபா நிறுவனத்தை நிறுவினார். அந்நிறுவனத்தை மேலே கொண்டு வர பல ஆண்டுகளாக போராடினார். மேலும் இந்நிறுவனம் சீனாவிற்கு இ-காமர்ஸ் வர்த்தகத்தை தாவோபா மற்றும் டி-மால் நிறுவனங்களுடன் இணைந்தது அறிமுகப்படுத்தியது.

  பேஸ்புக்கோடு பர்சனல்களை அபேஸ் செய்யும் ஆப்கள் உடனே டெலீட் செய்யுங்க.!


 • அடுத்தகட்ட திட்டத்தை அறிவித்த ஜேக்

  ஃபோர்ப்ஸ் தகவலின் படி ஜேக் மாவின் நிகர சொத்துமதிப்பு 38.4 பில்லியன் டாலர் என்பதால் சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் இவர்தான். 2014 ஆம் ஆண்டில் நியூயார்க் பங்குச் சந்தையில் மிகப் பெரிய ஐபிஓவில் பட்டியலிடப்பட்ட அவரது நிறுவனம், தற்போது சந்தை மூலதனமாக 460 பில்லியன் டாலர்களை கொண்டுள்ளது.

  பரந்த பொருளாதாரத்துடன் சேர்ந்து, சீனாவின் இ-காமர்ஸ் துறையின் வளர்ச்சி மந்தமான இருக்கும் காலக்கட்டத்தில் ஜேக் மா ராஜினாமா செய்துள்ளார். மேலும் இந்நிறுவனம் மற்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து அதிக போட்டியை எதிர்கொள்கிறது. தற்போது அலிபாபா நிறுவனம் நிதி சேவைகள், மொபைல் கொடுப்பனவுகள், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு என பல துறைகளில் விரிவடைந்துள்ளது.


  கடந்த ஆண்டு தனது அடுத்தகட்ட திட்டத்தை அறிவித்த ஜேக் மா, தனது முன்கூட்டியே ஓய்வு பெறும் முடிவின் மூலம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். ஆனால் அவர் இந்நிறுவனத்தின் மீதான தனது பிடியை முழுமையாக கைவிட மாட்டார்.


 • தோல்வியடைகின்றன

  அவர் 6.22% பங்குகளை தக்க வைத்துக் கொண்டுள்ளதுடன், 2020 ஆம் ஆண்டில் வருடாந்திர பங்குதாரர்களின் கூட்டம் வரை இயக்குநர்கள் குழுவில் இருப்பார். அதன் பிறகு அவர் குழுவில் இருந்து தனியாக இருக்கும் 38 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெருநிறுவன நிர்வாகக் குழுவின் ஒரு அங்கமாக இருப்பார்.


  "இந்த நிறுவனம் ஒருபோதும் மறக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் நாங்கள் இன்று நிறைய நிறுவனங்கள் இருந்தது போல பெரிய அளவில் இருக்கிறோம், ஆனால் அவை ஏன் தோல்வியடைகின்றன என்பதை நான் கற்றுக்கொண்டேன்" என்று திங்களன்று வெளியிடப்பட்ட வீடியோவில் ஜேக் மா கூறினார். "அவர்கள் கனவுகளை மறந்து விடுகிறார்கள். கனவுகள் தான் நம்மை கடினமாக உழைக்க வைக்கின்றன. அந்த கனவுகள் தான் நம்மை ஒருபோதும் தவறுகள் மற்றும் பின்னடைவுகளுக்காக பயப்படாமல் வைக்கும் . " என தெரிவித்தார் ஜேக் மா.
அலிபாபா நிறுவனத்தின் நிறுவனரான ஜேக் மா, உலகின் மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான இதன் தலைமை பதவியில் இருந்து விலகி, தானே தேர்ந்தெடுத்த நபருக்கு தனது தலைமை கிரீடத்தை ஒப்படைக்கிறார்.

   
 
ஆரோக்கியம்