Back
Home » செய்தி
அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி.. கூட்டணி ஆட்சி.. அதிமுகவுக்கு பாமக விடும் தூது
Oneindia | 11th Sep, 2019 04:37 PM
  • பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள்

    அதேபோல் பிற கட்சிகளையும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைப்பது என்கிற வியூகத்தையும் கையில் வைத்திருக்கிறதாம் திமுக. பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் திமுக மட்டும் வெல்ல வேண்டும்; திமுக எம்.எல்.ஏக்கள் மட்டும் தேர்வு செய்து ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பது அக்கட்சியின் திட்டம்.


  • தினகரன் அணியில் கட்சிகள்

    இதனால் தினகரன் தலைமையிலான அணிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட திமுகவின் சில தோழமை கட்சிகள் தாவக் கூடும். இன்னொரு பக்கம் அதிமுக-பாஜக எப்படியான கூட்டணி அமைக்கும் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது.


  • அதிமுக அணியில் பாமக

    ஏற்கனவே இருக்கிற தோழமை கட்சிகளையே திமுக கழற்றிவிடும் நிலையில் இருப்பதால் அதிமுக-பாஜக அணியில் பாமக தொடரவே விரும்புகிறதாம். அதேநேரத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் இம்முறை பாமக தரப்பு ஒரு பேரத்தை முன்வைக்கப் போகிறதாம்.


  • அன்புமணிக்கு து.மு. பதவி

    அதாவது அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி; கூட்டணி அரசில் பங்கு என்கிற உத்தரவாதம் கொடுத்தால் வடதமிழகத்தில் பெரும்பான்மை தொகுதிகளை கூட்டணியால் அள்ளிவிட முடியும் என்பதுதான் அந்த பேரமாம். தமிழகத்தின் பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான வன்னியரையும் அதிகாரத்தில் அமர வைத்த பெருமை அதிமுகவுக்கும் கிடைக்கும் என்பது பாமகவின் இன்னொரு கருத்தாம்.

    இந்த கனவாவது நிறைவேறுமா?




சென்னை: அன்புமணியாகிய நான்... என்கிற முதல்வர் கனவு எட்டாத மாம்பழம் என்பதால் அடுத்ததாக துணை முதல்வர் பதவிக்கு குறிவைக்கிறதாம் பாமக.

எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலில் களத்தில் எத்தனை அணிகள் இருக்கும்? எந்த கட்சிகள் எந்த கூட்டணியில் இருக்கும் என்கிற விவாதங்கள் தொடங்கிவிட்டன. திமுகவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிடுவதில் முனைப்புடன் இருக்கிறது.

இங்க காலேஜ் நடத்தி வர்றாரே.. ரூ.42 கோடி ஊழல் செய்துள்ளார்.. அவர்தான் அடுத்த கைது.. எச்.ராஜா ஆரூடம்

   
 
ஆரோக்கியம்