Back
Home » ஆரோக்கியம்
தொடையில இப்படி அசிங்கமான கோடுகள் எதனால வருதுன்னு தெரியுமா?
Boldsky | 12th Sep, 2019 04:04 PM
 • உடல் வறட்சி

  ஒருவர் தினமும் போதுமான அளவு நீரைப் பருக்காவிட்டால் அல்லது உடல் வறட்சியுடன் இருந்தால், செல்லுலைட் அதிகமாக உருவாகும். உடலில் உள்ள கொழுப்பு செல்களை வளர்சிதை மாற்றம் புரிவதற்கு மற்றும் நச்சுக்களை தேக்கத்தை தவிர்ப்பதற்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. எப்போது உடலில் போதுமான அளவு நீர் இல்லையோ, அப்போது நச்சுக்கள் பெருக்கமடைந்து செல்லுலைட் உருவாக்கத்தை அதிகரிக்கும். மேலும் தண்ணீர் சருமத்தை மென்மையாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள அவசியமான ஒன்றாகும்.


 • நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது

  ஒருவர் நீண்ட நேரம் ஒரே இடத்தில், ஒரே நிலையில் இருந்தால், அது இரத்த ஓட்ட அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தி, அதன் விளைவாக செல்லுலைட்டை உருவாக்கும். எனவே தான் எந்த ஒரு வேலையாக இருந்தாலும், அவ்வப்போது சிறு இடைவெளி எடுத்து நடைப்பயிற்சியை மேற்கொள்ள சொல்கிறார்கள். இச்செயலால் கொழுப்பு தேக்கம் தடுக்கப்படும்.


 • ஜங்க் உணவுகளை உண்பது

  ஜங்க் உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், செல்லுலைட்டை உருவாக்குவதில் முதன்மையானவைகளாகும். இந்த உணவுகளில் உள்ள சீஸ், மார்கரைன், வெள்ளை பிரட், கொழுப்பு நிறைந்த இறைச்சி போன்றவை உடலில் நச்சுக்களை தக்க வைத்து, செல்களின் வளர்ச்சியைத் தூண்டி, செல்லுலைட்டை உருவாக்குகின்றன. இதனைத் தவிர்ப்பதற்கு, அழற்சி எதிர்ப்பு உணவுப் பொருட்களான சால்மன், அவகேடோ, நற்பதமான பெர்ரிப் பழங்கள், க்ரீன் டீ, ஆலிவ் ஆயில் மற்றும் நீர் போன்றவற்றை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.


 • டயட்டை தவிர்ப்பது

  உடல் எடையை அதிகரிப்பதற்கு மற்றும் குறைப்பதற்கு மேற்கொள்ளும் செயல்களால், சருமம் தனது இயற்கையான நெகிழ்வுத்தன்மையை இழந்து, செல்லுலைட்டை பளிச்சென்று வெளிக்காட்டும். அதுவும் இதுவரை மேற்கொண்டு வந்த டயட்டை தவிர்க்கும் போது, கொலாஜன் உற்பத்தி குறைந்து, சருமம் சுருங்கியும் விரிவடையாமலும் அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும்.


 • மிகவும் இறுக்கமான உடைகளை அணிவது

  இன்று பலரும் இறுக்கமான உடைகளையே அதிகம் அணிகின்றனர். இப்படி ஒருவர் மிகவும் இறுக்கமான உடைகளை அணியும் போது, குறிப்பிட்ட பகுதியில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு, செல்லுலைட் டை உண்டாக்குகிறது.


 • தேய்த்துக் குளிக்காமல் இருப்பது

  குளிக்கும் போது பாடி பிரஷ் பயன்படுத்தி தேய்த்துக் குளிப்பதனால், செல்லுலைட் உருவாவது தடுக்கப்படும். ஆனால் பலர் குளிர்க்கும் போது, பாடி பிரஷ் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் பாடி பிரஷ் பயன்படுத்துவதால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்க உதவி, புதிய செல்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். எனவே செல்லுலைட் மறைய வேண்டுமென்று நினைத்தால், தினமும் குளிக்கும் போது பாடி பிரஷைப் பயன்படுத்துங்கள்.


 • அளவுக்கு அதிகமாக மது அருந்துவது

  ஆல்கஹால் இரத்த குழாய்களை சுருங்கச் செய்து, செல்லுலைட்டை தெளிவாக வெளிக் காட்டும். அதிலும் ஒருவர் தினமும் மது அருந்தும் மற்றும் புகைப் பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், உடலில் டாக்ஸின்கள் தேங்கி, கொழுப்புச் செல்களின் அளவு அதிகரித்து, செல்லுலைட் பிரச்சனையை உண்டாக்கும். எனவே முதலில் இந்த கெட்ட பழக்கத்தை தவிர்த்திடுங்கள்.


 • உடற்பயிற்சி செய்யாமை

  செல்லுலைட் உருவாக்கத்தின் பின்னணியில் இருக்கும் மற்றொரு காரணம் உடலுழைப்பு இல்லாமை. அதாவது உடற்பயிற்சி செய்யாமை ஆகும். எனவே தினமும் குறைந்தது 1/2 மணிநேரம் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், உங்கள் உடலை அசைக்கக்கூடிய வேலையை செய்யுங்கள்.
பொதுவாக நம்மில் பலரது உடலின் தொடை, கை, இடுப்பு, பிட்டம் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் வெள்ளை நிறத்தில் கோடு கோடாக இருக்கும். இதற்கு பெயர் தான் செல்லுலைட். செல்லுலைட் என்பது கெட்டியான கொழுப்புத் திசுக்களாகும். இந்த கொழுப்பு திசுக்கள் ஒருவருக்கு பல காரணங்களால் ஆங்காங்கு தேங்கியிருக்கும்.

சிலருக்கு செல்லுலைட் திடீரென்று எடை இழப்பால் தோன்றும். இன்னும் சிலருக்கு அன்றாடம் மேற்கொள்ளும் சில பழக்கவழக்கங்களால் கூட வரலாம். ஆனால் நம்மில் பலருக்கு நாம் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களாலும் செல்லுலைட் ஏற்படும் என்பது தெரியாது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை செல்லுலைட் உருவாக்கத்திற்கு காரணமாக இருக்கும் சில அன்றாட பழக்கவழக்கங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து, அவற்றை நீங்கள் செய்பவரானால், உடனே அப்பழக்கத்தை நிறுத்துங்கள்.

   
 
ஆரோக்கியம்