Back
Home » ஆரோக்கியம்
மரணத்தை தரும் செப்சிஸ் நோயை நம் முன்னோர்கள் இத சாப்பிட்டுதான் ஓடஓட விரட்டிருக்காங்க...
Boldsky | 13th Sep, 2019 05:19 PM
 • செப்சிஸ்க்கு மருந்து

  செப்சிஸ் என்னும் ரத்தத்தில் நஞ்சினைக் கலக்கின்ற இந்த கொடூரமான உயிர்க்கொல்லி நோய்க்கு சமீபத்தில் சிங்கப்பூரில் உள்ள பன்னாட்டு ஆய்வாளர்கள் மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். எலிகளின் இரத்தத்தில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் sphingosine kinase 1 அல்லது SphK1 என்ற மூலக்கூற்றைத் தடுக்கும் முறையில் இப்போது முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  MOST READ: சனிதசை யாருக்கு நன்மை செய்யும்... பாதிப்பு யாருக்கு


 • வீட்டு வைத்தியங்கள்

  ஆன்டி பயாடிக் மருந்துகள் கொடுத்து, இந்த செப்சிஸின் தாக்கத்தைக் குறைத்தாலும் கூட, நம்முடைய முன்னோர்கள் அவர்களுடைய வீட்டில் உள்ள சில பொருள்களைக் கொண்டு எப்படி இநத உயிர்க் கொல்லும் கொடிய நோயை ஓட ஓட விரட்டியிருக்கிறார் என்பதைப் பற்றி இங்கே காணலாம்.


 • தாய்ப்பால்

  செப்சிஸ் நோயைத் தீர்ப்பதற்கான மிக அரிய மருந்தாக இருப்பது தாய்ப்பால். தாய்ப்பாலில் இருக்கும் நோயெதிர்ப்பு ஆற்றல் வேறு எந்த உணவிலும் இருப்பதில்லை என்பது அறிவியல்பூா்வமாக கண்டறியப்பட்ட உண்மை. அதிலும் குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் இந்த செப்சீஸ் நோயால் பாதிக்கப்படுவதால் அந்த சமயத்தில் குழந்தைகளுக்கு அதிகமாக தாய்ப்பால் தர மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

  MOST READ: சைனஸ் அழற்சியில மீள முடியலையா? இதோ நம்ம தாத்தா காலத்துல என்ன பண்ணாங்கனு பாருங்க...


 • வைட்டமின் சி

  வைட்டமின் சியில் பொதுவாகவே அதிக அளவிலான நோயெதிர்ப்பு ஆற்றல் இருப்பதால், வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகமான எடுத்துக் கொள்வது நல்லது. வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிடும் பொழுது, நம்முடைய உடல் நோயெதிர்ப்பு சக்தியை கிரகித்து உடல் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது.


 • மஞ்சள்

  மஞ்சள் இன்றைக்கு நேற்றல்ல. பல காலமாக நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் மஞ்சள். இது சாதாரண சருமப் பிரச்சினை முதல் தீவிரமான புற்றுநோய் வரையிலும் சரிசெய்யக் கூடியது என்பது நமக்குத் தெரியும். அதனால் தான் ஆண்டி-பயாடிக் பண்பு கொண்ட மஞ்சளைப் பயன்படுத்தி ரத்தத்தில் ஏற்படும் பாக்டீரியா நச்சுத் தொற்றான செப்சீஸ் நோயையும் சரி செய்ய முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.


 • பூண்டு மற்றும் தேன்

  ஆண்டி இன்பிளமேட்டரி பண்புகளை தனக்குள் அதிக அளவில் கொண்டிருக்கும் இரண்டு பொருள்கள் என்றால் அது தேனும் பூண்டும் தான். பாக்டீரியா தொற்றுக்கள் மற்றும் பூஞ்சைத் தொற்றுக்களால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்வதில் மிக முக்கியப் பண்பு பூண்டுக்கு உண்டு. தேனும் நம்முடைய உடலில் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். ஒரு ஸ்பூன் தேனுடன் சிறிதளவு துருவிய பூண்டைச் சேர்த்து சாப்பிட்டு வந்தால் செப்சீஸால் ஏற்படும் தாக்கம் குறைந்து விரைவில் பலனும் கிடைக்கும்.

  MOST READ: ஒரே ராத்திரியில் வைரலான இந்தியர்கள் யார் யார்னு தெரியுமா?... இதோ இவங்க அது...


 • உருளைக்கிழங்கு

  செப்சீஸ் தாக்குதலால் உடலின் உள்பக்கம் மட்டுமல்ல, சருமத்திலும் சில பாதிப்புகள் உண்டாகும். அப்படி செப்சீஸின் பாதிப்பு உள்ள சருமத்தில் உருளைக்கிழங்கு சாறினை அப்ளை செய்து வர வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவிட்டு அந்த இடத்தை வெதுவெதுப்பான நீரின் மூலம் சுத்தப்படுத்துங்கள்.
நம்முடைய உடலில் உண்டாகின்ற அத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரே காரணம் நம்முடைய உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி குறைவது தான். சரி அந்த நோயெதிர்ப்பு சக்தி எப்படி குறைகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? வெறுமனே ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட உணவுகளை சாப்பிடாமல் இருப்பது மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அதுமட்டுமே உண்மையான காரணமல்ல. நம்முடைய ரத்தத்தில் சில பாக்டீரியாக்கள் தாக்குதலை ஏற்படுத்தி நம்முடைய உடலை முழுவதுமாக பலவீனப்படுத்தி விடும். அத்தகைய கொடுமையான நோய்க்குறிக்குப் பெயர் தான் செப்சிஸ்.

   
 
ஆரோக்கியம்