Back
Home » ஆரோக்கியம்
கக்கா.. போகும் போது வலியுடன், இரத்தக்கசிவும் ஏற்பட காரணம் என்ன?
Boldsky | 16th Sep, 2019 01:49 PM
 • மலச்சிக்கல்

  உண்ணும் உணவுகள் சரியாக செரிமான பாதையின் வழியே நகர்ந்து செல்லாவிட்டால், குடல் அதிகப்படியான நீரை உறிஞ்சிக் கொள்ளும். இதன் விளைவாக மலம் இறுக்கமடைவதோடு, வறட்சியடைந்துவிடும்.

  பல விஷயங்கள் ஒருவருக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதில் சில மருந்துகள், குறைவான அளவில் நீர் மற்றும் நார்ச்சத்தை எடுப்பது, உடற்பயிற்சியின்மை மற்றும் பழக்கவழக்கங்கள் அல்லது வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்கள், அதாவது பயணம் அல்லது கர்ப்பம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.


 • தீர்வு

  நீங்கள் மலம் கழிக்கும் போது கடுமையான வலியை உணர்ந்தால், ஆரோக்கியமான நார்ச்சத்துள்ள உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதுடன், போதுமான நீரைக் குடியுங்கள் மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். இவைகளை மேற்கொண்ட பின்னரும், எந்த பலனும் தெரியாவிட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

  இதய கட்டிகள் குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!


 • மூல நோய்

  நான்கில் மூன்று பேர் ஆசன வாய் பகுதியில் நரம்பு வீக்கத்தினால் (மூல நோய்) அவஸ்தைப்படுகின்றனர். நீண்ட நேரம் டாய்லெட்டில் அமர்ந்திருந்தாலோ அல்லது மலம் கழிக்கும் போது அதிகமாக முக்கினாலோ, இந்நிலை ஏற்படலாம். கர்ப்பம் மற்றும் உடல் பருமனும் மூல நோயின் அபாயத்தை சற்று அதிகரிக்கும்.

  இரத்தக் கட்டிகளாக மூல நோய் உருவாகியிருந்தால், மலம் கழிக்கும் போது, உட்காரும் போது அல்லது நடக்கும் போது கூட வலியை சந்திக்கக்கூடும். மூல நோய் இருந்தால் சந்திக்கக்கூடிய இதர பிரச்சனைகளாவன:

  * மலம் கழிக்கும் போது இரத்தக்கசிவு

  * ஆசன வாய்ப் பகுதியில் அரிப்பு அல்லது எரிச்சல்

  * வலி அல்லது அசௌகரியம்

  * ஆசன வாய் பகுதியில் வீக்கம்

  * ஆசன வாயின் அருகே வலி அல்லது வேதனைத் தரக்கூடிய கட்டி


 • தீர்வு

  வெதுவெதுப்பான சுடுநீரில் அமர்வது, மலமிளக்கும் பொருட்கள் மற்றும் மூல நோய் க்ரீம்கள் போன்றவற்றின் உதவியுடன் சரியாகலாம். ஒருவேளை வலி சில நாட்களில் குணமாகாவிட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இந்நிலையில் மருத்துவர் அந்த கட்டிகளைப் பரிசோதித்து நீக்க வேண்டுமென்று கூறுவார்.


 • குத பிளவுகள் (Anal Fissures)

  மலம் கழிக்கும் போழ வலி ஏற்படுவதற்கு இந்த பிளவுகளும் ஓர் காரணமாக இருக்கலாம். இப்பிரச்சனை உள்ளவர்கள் அதிகமாக நீர் பருக வேண்டும் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். இதனால் மலம் இளகி, வேதனைக்குள்ளாக்காமல் இருக்கும்.

  குத பிளவுகள் சில வாரங்களில் குணமாகிவிடும். ஒருவேளை குணமாகாவிட்டால், மருத்துவரை அணுகி, அவர் பரிந்துரைக்கும் மருந்துகளைப் பயன்படுத்துங்கள். மிகவும் அரிதாக, குத பிளவுகள் உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.

  இறுதி கட்ட கல்லீரல் நோய் என்றால் என்ன? எவ்வளவு காலம் உயிர் வாழலாம்?


 • பெருங்குடல் புண்

  பெருங்குடல் புண் என்பது ஒரு வகையான குடல் அழற்சி நோயாகும். இது பெருங்குடல் மற்றும் மலக்குடல் பகுதியில் வீக்கம், புண் மற்றும் காயங்களை உண்டாக்கி, மலம் கழிக்கும் போது மிகுந்த வலியை உண்டாக்கும்.

  மற்றொரு வகை குடல் அழற்சி நோய் தான் கிரோன் நோய். இதுவும் பெருங்குடல் புண் போன்ற அறிகுறிகளைக் கொண்டிருக்கும். இத்தகையவர்களுக்கு வயிற்றுப் பிடிப்பு அல்லது இரத்தம் கலந்த அல்லது சீல் நிறைந்த வயிற்றுப் போக்கு ஏற்படலாம். பெருங்குடல் புண் உள்ள சிலருக்கு அவசரமாக மலம் வருவது போன்ற உணர்வு இருக்கும் அல்லது மலம் முழுமையாக வெளியேறியது போன்ற உணர்வே இருக்காது. பெருங்குடல் புண் வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடிய பிரச்சனையாகும்.

  மூளை சிறப்பாக செயல்பட காலையில் குடிக்க வேண்டிய பானங்கள்!


 • சரும பிரச்சனைகள்

  நீண்ட கால சரும பிரச்சனைகளான எக்ஸிமா, சொரியாசிஸ் மற்றும் மருக்கள் போன்றவைகளும் ஆசன வாய்ப் பகுதியைப் பாதிக்கும். இதனால் மலம் கழிக்கும் முன், கழித்த பின் மற்றும் கழிக்கும் போது, அரிப்பு மற்றும் இரத்தக் கசிவு ஏற்படுவதைக் காணலாம்.

  இந்த பிரச்சனையால் தான் உங்களுக்கு மலம் கழிக்கும் போது வலிக்கிறது என்றால், உடனே மருத்துவரை அணுகுங்கள். இதனால் உங்கள் மருத்துவர் ஆசன வாய்ப் பகுதியில் சிறிது மாதிரியை எடுத்து, சோதனைக் கூடத்திற்கு அனுப்புவர். இதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைக்கான காரணத்தை தெரிந்து கொண்டு, சரியான சிகிச்சை மேற்கொள்ள முடியும்.


 • தொற்றுகள்

  சில வகை தொற்றுகள் ஆசன வாய்ப் பகுதியில் மலம் கழிக்கும் முன், பின் அல்லது கழிக்கும் போது வலியை உண்டாக்கலாம். அதில் ஆசன வாய்ப் பகுதிக்கு அருகே சீழ் நிறைந்த ஒரு சிறிய பை, பாலியல் நோய்த் தொற்றுகள், பூஞ்டிச தொற்றுகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்படிப்பட்ட தொற்றுக்களால் பாதிக்கப்பட்டவர்கள், உடனே மருத்துவரை அணுகி, மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டும். தொற்றுகள் தீவிரமான நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். ஒருமுறை தொற்றுகள் முழுமையாக சரிசெய்யப்பட்டால், குடலியக்கத்தில் பின் எவ்வித பிரச்சனையும் ஏற்படாது.


 • எண்டோமெட்ரியாசிஸ்

  பெண்களின் கருப்பையினுள் வளரக்கூடிய திசுவானது சில சமயங்களில் மற்ற உறுப்புக்களுக்கு பரவ ஆரம்பிக்கும். அதன் பின் வளர்ச்சி பெற்று, மாதந்தோறும் கருப்பையின் சுவற்றில் இரத்தக்கசிவை உண்டாக்கும். இதனையே எண்டோமெட்ரியாசிஸ் என்று அழைப்பர். இந்நிலையில் வீக்கம், அழற்சி மற்றும் நாள்பட்ட வலியை அடிவயிற்றுப் பகுதியில் சந்திக்க நேரிடும். சில சமயங்களில் மலம் கழிக்கும் போது கடுமையான வலியையும் உண்டாக்கும்.

  ஆண்கள் அடிக்கடி இத சாப்பிட்டா புரோஸ்டேட் புற்றுநோய் வராதாம்!


 • எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

  எண்டோமெட்ரியாசிஸ் உள்ளவர்கள், கீழே கொடுக்கப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கும் போது அவசியம் அணுக வேண்டும். அவையாவன:

  * மாதவிடாய் சுழற்சியின் போது பல நாட்கள் வலியை உணர்வது

  * மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியினால் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாமல் இருப்பது

  * வலியின் காரணமாக உடலுறவில் ஈடுபட முடியாமல் போவது

  * வலியினால் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டிய நிலை


 • ஆசன வாய் புற்றுநோய்

  ஆசன வாய் புற்றுநோய் இருந்தால், மலம் கழிக்கும் போது தாங்க முடியாத வலியை சந்திக்க வேண்டியிருக்கும். அதோடு குடலியக்கத்தின் போது கொடுக்கப்படும் அழுத்தத்தினால், இதன் ஆரம்ப கால அறிகுறியாக இருப்பது இரத்தக்கசிவு ஆகும். அதோடு ஆசன வாய்ப் பகுதியில் அரிப்பு, வெள்ளைப்படுதல் அல்லது மலம் திடீரென்று வழக்கத்திற்கு மாறாக நீராக வெளியேறுவது போன்றவைகளும் இதர அறிகுறிகளாகும்.

  ஒருவேளை மலம் கழிக்கும் போது ஏற்படும் வலி அல்லது இரத்தக்கசிவு பல நாட்களாக சரியாகாவிட்டால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். இதனால் ஆசன வாய் புற்றுநோய் உள்ளதாக என்பதை ஆரம்பத்திலேயே அறிந்து, சரியான சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.
ஆரோக்கிய பிரச்சனைகளுடன் வாழ்வது என்பது மிகவும் கொடுமையான ஒன்று. அதிலும் மனிதனின் அன்றாட முக்கிய கடமைகளுள் ஒன்று தான் மலம் கழிப்பது. இந்த செயலின் போது ஒருவர் பிரச்சனையை சந்திப்பது என்பது இன்னும் கொடுமையானது.

பொதுவாக மலம் கழிக்கும் போது சந்திக்கும் பிரச்சனையை எளிதில் சரிசெய்ய முடியும். அதுவும் அந்த பிரச்சனைக்கான காரணம் தெரிந்து கொண்டால், இன்னும் சுலபமாக சரிசெய்துவிடலாம். பெரும்பாலும் மலம் கழிக்கும் போது சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நமது அன்றாட உணவுப் பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறையும் தான் முக்கிய காரணம்.

உங்களுக்கு எப்பவும் மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப கட்டாயம் இத ஃபாலோ பண்ணுங்க...

இந்த கட்டுரையில் மலம் கழிக்கும் போது சந்திக்கும் பிரச்சனைகளுக்கு என்னவெல்லாம் காரணமாக இருக்கலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

   
 
ஆரோக்கியம்