Back
Home » ஆரோக்கியம்
ஆண்களை அதிகம் தாக்கும் முதுகெலும்பு அழற்சி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
Boldsky | 16th Sep, 2019 04:06 PM
 • முதுகெலும்பு அழற்சியின் ஆரம்ப கால அறிகுறிகள்:

  * இடுப்பு மூட்டுப் பகுதிகளில் தீவிரமான வலி

  * கழுத்து மற்றும் தோள்பட்டை விறைப்பு

  ஒருவருக்கு இந்த அறிகுறிகள் நீடித்திருக்கும் போது, அவரது உற்பத்தித்திறன் வீழ்ச்சி அடையும் மற்றும் வேறு சில உளவியல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

  தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!


 • காரணங்கள்:

  முதுகெலும்பு அழற்சி ஒருவருக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாவன:

  * உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை

  * போதிய ஓய்வின்றி உழைப்பது

  * அத்தியாவசிய ஊட்டச்சத்து குறைபாடுகள்

  * உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது

  ஸ்பாண்டிலிடிஸ் பிரச்சனை தீவிரமாகாமல் இருக்க வேண்டுமானால், மேலே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களில் மாற்றங்களை உடனே கொண்டுவர வேண்டும். இதனால் இளமையிலேயே இப்பிரச்சனையை சரிசெய்து விட முடியும்.


 • மூட்டு மற்றும் தலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கான இதர காரணங்கள்:

  * நீண்ட நேரம் டிவி மற்றும் மற்ற எலக்ட்ரானிக் பொருட்களைப் பயன்படுத்துவது

  * சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பது

  * உடல் பருமன்

  * புகைப்பிடிப்பது

  * மது அருந்துவது

  * புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது

  மேலே கொடுக்கப்பட்டுள்ள பழக்கங்களில் உடனடி மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். ஏனெனில் 16-30 வயது வரை நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை சிறப்பாக பராமரித்து வந்தால், முதுமைக் காலத்தில் எப்பேற்பட்ட நோய்களின் தாக்கத்தையும் எதிர்த்துப் போராடும் சக்தி உடலுக்கு இருக்கும்.

  இந்த ஒரு பொருள் இரத்த அழுத்த பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்ல வைக்கும் தெரியுமா?


 • ஸ்பாண்டிலிடிஸ் வருவதற்கான வேறு சில காரணிகள்:

  * வெளிச்சம்

  * உபகரணங்கள்/கருவிகளை வைத்துப் பயன்படுத்தும் இடம்

  * தலையணை, குஷன் போன்றவற்றை பயன்படுத்தும் நிலைகள்.

  இவைகளும் ஒருவரது மூட்டு இணைப்புக்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன.

  இந்த உணவுகளை நீரில் ஊற வைத்து தான் சாப்பிடணுமாம்.. காரணத்த படிச்சு பாருங்க...


 • ஊட்டச்சத்துக் குறைபாடுகள்:

  இன்றைய தலைமுறையினர் டெக்னாலஜி மற்றும் வேலைகளால், ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட மறந்து விடுகின்றனர். பெரும்பாலானோர் ஊட்டச்சத்துக்களே இல்லாத ஜங்க் உணவுகளை சாப்பிடுகின்றனர். பொதுவாக ஸ்பாண்டிலிடிஸ் என்னும் முதுகெலும்பு அழற்சி ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் தாக்கக்கூடியவை. அந்த ஊட்டச்சத்துக் குறைபாடுகளாவன:

  * வைட்டமின் டி

  * வைட்டமின் பி12

  * கால்சியம்

  * புரோட்டீன்

  இந்த ஊட்டச்சத்துக்களின் அளவு நம் உடலில் போதுமான அளவு நிறைந்துள்ளதா என்பதை ஒவ்வொருவரும் கண்காணிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஸ்பாண்டிலிடிஸ் தாக்கத்திற்கு உள்ளாகி, நாளடைவில் அசையவே முடியாத அளவில் ஒரே இடத்தில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவீர்கள். ஜாக்கிரதை!
ஸ்பாண்டிலிட்டிஸ் என்பது வயதான காலத்தில் தாக்கும் ஒரு எலும்பு சம்பந்தப்பட்ட நோயாகும். ஆனால் இன்று ஏராளமான இளம் வயதினர் இந்த நோயால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். 100-ல் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக ஆண்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. இந்த நோயினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களாவன:

* மூட்டு இணைப்புக்கள் கடுமையாக பாதிக்கப்படும்

* நெகிழ்வுத்தன்மை குறையும்

* தசைநார்கள் சேதமடையும்

* இயக்கத்தை இழக்கும் அபாயம் கூட ஏற்படலாம்.

நீங்க திடீர்-ன்னு குண்டாக இதுதான் முக்கிய காரணம் தெரியுமா?

எனவே ஒவ்வொருவரும் தங்களின் எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், ஒரே இடத்தில் முடங்கி இருக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகக்கூடும்.

   
 
ஆரோக்கியம்