Back
Home » ஆரோக்கியம்
கண்கள் அடிக்கடி வறண்டு போய் எரிச்சல் எடுக்குதா?... முதல்ல இத செய்ங்க...
Boldsky | 16th Sep, 2019 05:51 PM
 • அறிகுறிகள்

  நமது கண்களில் உள்ள கண்ணீர் படம் தான் கண்களில் போதுமான ஈரப்பதத்தை தக்க வைக்கவும், வறட்சியை தடுக்கவும், தெளிவான பார்வையை கொடுக்கவும் உதவுகிறது. ஆனால் கண்ணீர் சுரப்பு போதுமானதாக இல்லாவிட்டால் அந்த படலம் உலர்ந்து உடைந்து விடுகிறது. இதுவே உலர்ந்த கண்கள் ஏற்படக் காரணமாக அமைகின்றன.
  கண்கள் சிவந்து போதல்
  உலர்ந்த கண்கள்
  கண்களில் அரிப்பு
  கண்களில் புண்கள்
  மங்கலான பார்வை
  கண்களில் பூழை
  போட்டோபோபியா, அதிக வெளிச்சத்தை பார்த்தால் கூசுதல்
  அடிக்கடி கண்களில் இருந்து நீர் வடிதல்

  MOST READ: இந்த இட்லிப்பூவுக்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா?... இவ்ளோ நாள் இது தெரியலயே!


 • காரணங்கள்

  நமது கண்களில் வடியும் கண்ணீர் என்பது நீர், சளி மற்றும் கொழுப்பு எண்ணெய்களின் கலையாகும். இவை தான் கண்களை உயிரூட்டமாக வைத்திருக்கவும், ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. கண் தொற்று தொடர்பான கிருமிகள், தூசிகள் மற்றும் அழுக்குகள் கண்ணுக்குள் புகாத வாறு கண்ணீர் கழுவி சுத்தம் செய்து விடும்.
  சிலருக்கு கண்ணீர் உற்பத்தி குறைவதால் உலர்ந்த கண் பிரச்சனை ஏற்படுகிறது. கண்ணீர் ஆவியாதல் மற்றும் கண்ணீர் உற்பத்தியில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.


 • கண்ணீர் உற்பத்தி குறைதல்

  இதில் போதுமான கண்ணீர் உற்பத்தி ஆகாது. ஆண்டிடிப்ரஸன் மருந்துகள், நீரிழிவு நோய், வைட்டமின் ஏ குறைபாடு, பிறப்பு கட்டுப்பாட்டு மருந்துகள், லேசர் கண் அறுவை சிகிச்சை, கண்ணீர் சுரப்பி வீக்கம், உயர் இரத்த அழுத்த மருந்துகள் போன்றவை இந்த பிரச்சனையை உண்டாக்குகின்றன.


 • கண்ணீர் ஆவியாதல்

  இந்த நிலையில் கண்களில் இருந்து வடிகின்ற நீர் சீக்கிரமே ஆவியாகி கண்களை உலர்த்தும். வறண்ட காற்று, புகை, நீண்ட நேரம் கண்களை இமைக்காமல் இருத்தல்,வாகனம் ஓட்டுதல், நீண்ட நேரம் கம்பியூட்டர், டீவி பார்த்தல், லாகோப்தால்மோஸ் கண் இமை பிரச்சனைகள், காற்று போன்றவை காரணங்களாக அமைகிறது.


 • கண்ணீர் உற்பத்தி ஏற்றத்தாழ்வு

  நமது கண்களில் வடியும் கண்ணீர் என்பது நீர், சளி மற்றும் கொழுப்பு எண்ணெய்களின் கலையாகும். இவற்றில் ஒன்றின் உற்பத்தி குறையும் போது கண்ணீர் சுரப்பு குறைந்து வறட்சி ஏற்படும். மீபோமியன் சுரப்பிகள் தான் எண்ணெய்யை சுரக்கும் சுரப்பிகள். ரோசாசியா என்ற தோல் பிரச்சனைகள் ஏற்படும் போது இந்த சுரப்பு அடைபடுகிறது.

  MOST READ: குரு பெயர்ச்சி 2019 - 20: மிதுனம் லக்னகாரர்களுக்கு பொன்னான காலம்


 • ஆபத்து காரணிகள்

  காண்டாக்ட் லென்ஸ்
  உட்புற சுற்றுச் சூழல்
  அடிக்கடி விமானத்தில் பயணம் செய்தல்
  பெண்களில் ஏற்படும் அதிக ஹார்மோன் மாற்றங்கள்.
  விளைவுகள்
  உலர்ந்த கண்களுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையென்றால் கீழ்க்கண்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  கண் நோய் தொற்று
  கார்னியாவின் மேற்பரப்பில் ஏற்படும் சிராய்ப்பு
  கார்னியாவில் புண் ஏற்படுதல்
  ஒவ்வொரு நாளும் கண் பிரச்சினை மற்றும் பார்வை பிரச்சினைகள் வருதல்


 • கண்டறிதல்

  கீழ்க்கண்ட சோதனைகள் மூலம் இதை கண்டறியலாம்
  ஒட்டுமொத்த கண் ஆரோக்கிய பரிசோதனை மேற்கொள்ளுதல்
  கண்ணீர் உற்பத்தியை பரிசோதிப்பதற்கான ஷிர்மர்ஸ் பரிசோதனை
  கண்சொட்டு மருந்துகளை பயன்படுத்தி அறிதல்


 • சிகிச்சைகள்

  லேசான கண் வறட்சிக்கு கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்தலாம்
  ஆன்டிபயாடிக்ஸ் மற்றும் கண் களிம்புகள் அலற்சி யை குறைக்க உதவும்
  கார்டிகோஸ்டீராய்டுகள் நாள்பட்ட கார்னியா அழற்சிக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
  செயற்கை கண்ணீர் சுரப்பியை பொருத்து தல்
  கோலினெர்ஜிக் போன்ற கண்ணீரைத் தூண்டும் மருந்துகளை பயன்படுத்துதல்
  ஆட்டோலோகஸ் இரத்த சீரம் கண் சொட்டு மருந்துகள் (இந்த சீரம் நோயாளியின் இரத்த சிவப்பணுக்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது)
  ஸ்பெஷல் காண்டாக்ட் லென்ஸ்கள்
  கண்களுக்கு வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுத்தல் மூலம் அடைத்த எண்ணெய் சுரப்பியை திறக்க முடியும்


 • தடுக்கும் வழிமுறைகள்

  அதிக உயரமான பகுதிகளுக்கு பயணம் செய்யும் போது கண்ணீர் ஆவியாதலை தடுக்க கண்களை மூடிக் கொள்ளுங்கள்.
  புகைப்பிடித்தலை தவிருங்கள் அல்லது புகைப்பிடிக்கும் இடத்தில் நிற்காதீர்கள்
  கம்பியூட்டரில் அதிக நேரம் உட்காருதல் அல்லது மொபைலை அதிக நேரம் பார்ப்பதை தவிர்த்து சிறிது நேரம் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்.
  கம்பியூட்டர் ஸ்கீரின் உங்கள் கண்களுக்கு கீழே இருக்கட்டும்.
  கார் ஹீட்டர், ஃபேன், ஏர் கண்டிஷனரிடம் அதிக நேரம் கண்களை வைக்காதீர்கள்.
  அறையின் வெப்பநிலையை மீடியமாகவே வையுங்கள்.

  MOST READ: இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது?


 • உணவுகள்

  உலர்ந்த கண்கள் ஏற்படுவதை தடுக்க கீழ்க்கண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
  சால்மன், சிப்பிகள், மத்தி, டுனா, மற்றும் ஹாலிபட் காய்கறிகளான கீரை, காலே, ப்ரோக்கோலி, மற்றும் காலிஃபிளவர், வேர்க்கடலை வெண்ணெய், அக்ரூட் பருப்புகள் மற்றும் ஓட்மீல், ஆளிவிதை மற்றும் சியா விதைகள் முட்டை, பாமாயில் போன்ற உணவுகளை சேர்த்துக் கொண்டு வந்தால் கண்களில் ஏற்படும் வறட்சி நீங்கும்.
தற்போதைய கால கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் பிரச்சினை கண்கள் அடிக்கடி வறண்டு போய் வலி உண்டாக்குவது தான். இந்த பிரச்சினை எதனால் ஏற்படுகிறது எனத் தெரியுமா? காரணம் இது தான். நம் கண்களால் போதுமான கண்ணீரை சுரக்க முடியாத அளவிற்கு அதில் நாள்பட்ட அழுக்குகள் தேங்கி போய் அடைத்து விடுவது தான் காரணம். இதனால் கண்களில் எரிச்சல், அழற்சி மற்றும் வடு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதை கெராடிடிஸ் சிக்கா, கெரடோகான்ஜுன்க்டிவிடிஸ் சிக்கா மற்றும் செயலற்ற கண்ணீர் நோய்க்குறி என்று மருத்துவ பெயரில் கூறுகின்றனர்.

ஜர்னல் ஆஃப் குளோபல் ஹெல்த் நாளிதழில் படி, உலகெங்கிலும் இந்த கண் நோய் பிரச்சனை 5% - 50% மக்களை பாதிக்கிறது என்று கூறுகின்றனர். இந்த வகை கண் பிரச்சனைகள் பொதுவாக எல்லா வயதினரையும் பாதிக்கும். இருப்பினும் 60 வயதை அடைந்த ஆரோக்கியமான நபர்களைக் கூட இந்த கண் பிரச்சனைகள் தாக்குகின்றன என்கிறது மருத்துவ ஆய்வறிக்கை. விட்டமின் ஏ பற்றாக்குறை உடையவர்களுக்கு இந்த மாதிரியான உலர்ந்த கண் பிரச்சனை ஏற்படுகிறது.

   
 
ஆரோக்கியம்