Back
Home » ஆரோக்கியம்
இந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய் மறைய செய்யும் தெரியுமா?
Boldsky | 17th Sep, 2019 05:18 PM
 • இருமல்

  உங்களுக்கு நாள்பட்ட இருமல் பிரச்சனை இருக்கிறதா? அப்படியானால் கிராம்பு நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு கிராம்பை வாயில் போட்டு மென்று, அதன் சாற்றினை விழுங்குங்கள். இதனால் இருமல் வருவது தடுக்கப்படும்.


 • வாய் ஆரோக்கியம்

  உங்கள் வாய் கடுமையான துர்நாற்றத்துடன் உள்ளதா? அப்படியானால் உங்கள் வாயில் நோய்க்கிருமிகளின் வளர்ச்சி அதிகம் உள்ளது என்று அர்த்தம். இந்த நோய்க்கிருமிகளை அழிக்கும் பண்பு கிராம்பிடம் உள்ளது. எனவே வாய் துர்நாற்றம் நீங்கி, வாயின் ஆரோக்கியம் மேம்பட கிராம்பை தினமும் வாயில் போட்டு மெல்லுங்கள்.


 • சளி

  காலநிலை மாற்றங்களால் அடிக்கடி சளி பிடிக்கும். இப்படி சளி பிடிக்கும் போது, ஒரு சுத்தமான காட்டன் துணியில், சில துளிகள் கிராம்பு எண்ணெய் சேர்த்து, நுகர்ந்து பாருங்கள். இதனால் மூக்கடைப்பு நீங்குவதோடு, சளி தொல்லையில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.


 • நெஞ்செரிச்சல்

  ஏராளமான மக்கள் நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்படுகின்றனர். இந்நிலையில் கண்ட கண்ட மருந்துகளைப் பயன்படுத்தாமல், கிராம்பு டீ தயாரித்துக் குடியுங்கள். அதற்கு ஒரு கப் நீரில் சிறிது கிராம்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடித்தால், நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.


 • தலைவலி

  பெரும்பாலான மக்கள் அடிக்கடி அவஸ்தைப்படும் ஓர் பிரச்சனை தான் தலைவலி. இதனை சரிசெய்ய, ஒரு டம்ளர் பாலில் சிறிது கிராம்பு பவுடர் மற்றும் ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்த்து கலந்து குடியுங்கள். இதனால் தலைவலி சட்டென்று காணாமல் போவதை உணர்வீர்கள்.


 • மூட்டு வலி

  கிராம்பு எண்ணெயை தீவிரமாக இருக்கும் மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால், மூட்டு வலி குறையும். இப்பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இரவு படுக்கும் முன் கிராம்பு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், இப்பிரச்சனையின் தீவிரத்தைக் குறைக்கலாம்.


 • செரிமானம்

  கிராம்பு குறிப்பிட்ட செரிமான நொதிகளை உற்பத்தி செய்ய தூண்டி, செரிமான செயல்பாட்டை மேம்படுத்த உதவும். மேலும் கிராம்பானது குமட்டல், இரைப்பை எரிச்சல், செரிமானமின்மை மற்றும் வாய்வு போன்றவற்றை சரிசெய்யும்.


 • கல்லீரல் பாதுகாப்பு

  கிராம்பில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம். இது கல்லீரலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தை எதிர்த்துப் போராட உதவும். மேலும் இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும்.


 • சர்க்கரை நோய்

  ஆய்வு ஒன்றில் கிராம்பை தினமும் உட்கொண்டு வந்தால், இரத்த க்ளுக்கோஸ் அளவு குறைவதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும், ஒரு நாளைக்கு ஒருவர் கிராம்பை அளவாக பயன்படுத்த வேண்டுமே தவிர, அதிகம் பயன்படுத்தினால் தீவிர விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்.


 • நோயெதிர்ப்பு மண்டலம்

  கிராம்பு நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு பாதுகாப்பு அளிக்க உதவுவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. உலர்ந்த கிராம்பில் உள்ள ஸ்பெஷலான உட்பொருள், இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்கும். இதனால் உடலைத் தாக்கும் பல கிருமிகளை எதிர்த்துப் போராடி, உடலைத் தாக்கும் பல நோய்களின் தாக்கம் குறையும். எனவே தான் தினமும் உணவில் தவறாமல் சிறிது கிராம்பை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இன்று ஏராளமானோர் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். குறிப்பாக மூட்டு வலியால் தான் அநேக மக்கள் கஷ்டப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வே கிடைக்காதா என்று ஏங்குவோர் ஏராளம். இத்தகையவர்களுக்கு மூட்டு வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் ஓர் அற்புத பொருள் நம் வீட்டு சமையலறையிலேயே உள்ளது.

அது தான் கிராம்பு. இந்த பொருள் ஏராளமான மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டது. இதனால் இது ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் கிராம்பு தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் பல பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம். கிராம்பை ஒருவர் எந்த வடிவில் எடுத்தாலும் அதன் முழு நன்மையைப் பெற முடியும். இப்போது ஆரோக்கிய பிரச்சனைகளையும், அதை சரிசெய்ய கிராம்பை எப்படி எடுப்பது என்பதையும் காண்போம்.

ஒரே மாதத்தில் 2 கிலோ எடையைக் குறைக்க உதவும் டயட் பற்றி தெரியுமா?

   
 
ஆரோக்கியம்