Back
Home » ஆரோக்கியம்
குண்டுலயே இத்தனை குண்டு இருக்கா? இத பாருங்க... நீங்களே ஆச்சர்யப்படுவீங்க...
Boldsky | 18th Sep, 2019 10:40 AM
 • உடல் எடை குறியீட்டு எண்

  உங்களது உடல் எடை குறியீட்டெண் 30 அல்லது அதற்கு மேல் இருந்தால் நீங்கள் உடல் பருமனாக உள்ளீர்கள் என்று அர்த்தம். இந்த பிஎம்ஐ உயரம் மற்றும் எடையை கொண்டு கணக்கிடப்படுகிறது. வயது, பாலினம், இனம் மற்றும் ஒரு நபரின் தசை போன்ற சில காரணிகள் நமது உடலில் உள்ள கொழுப்புக்கும் பிஎம்ஐக்கும் இடையிலான தொடர்பை பாதிக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். உங்களது பிஎம்ஐயை கணக்கிட கிலோகிராம் உடல் எடையை மீட்டரில் உள்ள உயரத்தால் வகுக்க வேண்டும். BMI =kg/m2. இந்த BMI அளவைக் கொண்டு நீங்கள் பருமனாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம்.

  MOST READ: புரட்டாசியில் சைவம் மட்டுமே கண்டிப்பாக சாப்பிடணும் - அறிவியல் உண்மைகள்


 • உடல் பருமன் வகைகள்

  நமது உடலில் கொழுப்புகள் படிந்துள்ள இடம், நோய்கள், கொழுப்பு செல்களின் வடிவம் மற்றும் எண்ணிக்கையை பொறுத்து இதை வகைப்படுத்தலாம்.


 • டைப் 1 உடல் பருமன்

  இந்த வகை உடல் பருமன் அதிக கலோரி உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமும் போதுமான உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதாலும் ஏற்படுகிறது.


 • டைப் 2 உடல் பருமன்

  இந்த வகை உடல் பருமன் ஹைப்போ தைராய்டிசம், பாலி சிஸ்டிக் ஓவரைன், இன்சுலினோமா போன்ற நோய்களால் ஏற்படுகிறது. இந்த வகை உடல் பருமன் அரிதானது. இதனால் 1% மக்களே பாதிப்படைகின்றனர். அதிகப்படியான உணவு உட்கொள்வதும் உடல் பருமன் அதிகரிக்க காரணமாகிறது.

  கொழுப்புகள் படிந்துள்ள இடத்தை பொறுத்து மூன்று வகைப்படுகிறது


 • புற உடல் பருமன்

  இடுப்பு, பிட்டம் மற்றும் தொடைகளில் அதிகப்படியான கொழுப்பு குவிந்திருக்கும் போது இந்த வகை உடல் பருமன் ஏற்படுகிறது.


 • மத்திய உடல் பருமன்

  அடிவயிற்று பகுதிகளில் கொழுப்புகள் தேங்கி தொப்பை போடுவதால் இந்த வகை உடல் பருமன் ஏற்படுகிறது.


 • இரண்டும் சேர்ந்த நிலை

  கொழுப்பு செல்களின் அளவு மற்றும் எண்ணிக்கையைப் பொறுத்து உடல் பருமனை இரண்டு வகையாக பிரிக்கின்றனர்.

  MOST READ: கண்கள் அடிக்கடி வறண்டு போய் எரிச்சல் எடுக்குதா?... முதல்ல இத செய்ங்க...


 • பெரியவர்களுக்கு வரும் உடல் பருமன்

  வயதாகும் போது கொழுப்பு செல்களின் வடிவம் மற்றும் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த வகை உடல் பருமன் ஏற்படுகிறது.


 • குழந்தைகளுக்கு வரும் உடல் பருமன்

  இதில் கொழுப்பு செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது மிகவும் சிக்கலானது. ஏனெனில் இந்த வயதில் கொழுப்பு செல்களின் எண்ணிக்கையை குறைப்பது கடினம்.


 • காரணங்கள்

  கொழுப்பு அதிகரிப்பு என்பது மெட்டாபாலிச மாற்றம், மரபணு, வளர்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன் தாக்கங்களால் ஏற்படுகிறது. தினசரி வேலை, உடற்பயிற்சி இவற்றில் எரிப்பது போக அதிக கலோரிகளை எடுத்துக் கொள்வது உடல் பருமனை உண்டாக்குகிறது.

  டயட் இல்லாமல் அதிக கொழுப்பு மற்றும் கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்தல். வயதாக வயதாக தசைகளின் நிறை மற்றும் மெட்டா பாலிக் விகிதம் குறைதல்

  சரியான தூக்கமின்மை ஹார்மோன் மாற்றத்தை உண்டாக்கி பசியை ஏற்படுத்தி அதிக கலோரிகளை உண்ண வைத்து விடும்.

  வாழ்க்கை முறை மாற்றம்
  மரபணு
  கர்ப்பம்


 • இதர காரணங்கள்

  ஹைப்போ தைராய்டிசம்
  குஷிங் சிண்ட்ரோம்
  பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்)
  ப்ராடர்-வில்லி நோய்க்குறி
  கீல்வாதம்


 • அறிகுறிகள்

  உடல் எடை அதிகரிப்பு
  பித்தப்பை கற்கள்
  கீழ்வாதம்
  தூங்குவதில் சிக்கல்
  மூச்சுத்திணறல்
  வெரிகோஸ் வீன்ஸ்
  சரும பிரச்சனைகள்
  போன்றவை ஏற்படும்.


 • அபாயக் காரணிகள்

  மரபணு, சுற்றுச்சூழல் மற்றும் உளவியல் போன்றவை உடல் பருமனால் அபாய விளைவை உண்டாக்குகிறது.

  மரபியல் அல்லது குடும்ப பரம்பரை (அதாவது உங்கள் பெற்றோரிடமிருந்து நீங்கள் பெறும் மரபணுக்கள் உங்கள் உடலில் உடல் கொழுப்பின் அளவை பாதிக்கலாம்)

  ஆரோக்கியமற்ற உணவு, அதிக கலோரி கொண்ட பானங்கள், சரியான உடல் செயல்பாடு இல்லாமல் இருத்தல் போன்ற வாழ்க்கை முறை தேர்வுகள் பிரச்சனையை உண்டாக்கலாம்.

  சில நோய்கள் (பிராடர்-வில்லி நோய்க்குறி, குஷிங் நோய்க்குறி போன்றவை)
  வலிப்புத்தாக்க எதிர்ப்பு மருந்துகள், ஆண்டிடிரஸண்ட்ஸ், நீரிழிவு மருந்துகள், ஆன்டிசைகோடிக் மருந்துகள் போன்ற மருந்துகள் காரணமாகலாம்
  நண்பர்கள் வட்டம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் குண்டாக இருந்தால் நீங்களும் உடல் பருமனாக ஆக வாய்ப்பு இருக்கிறது

  வயது
  கர்ப்பம்
  புகைப்பிடித்தல்
  குடல் பாக்டீரியா
  தூக்கமின்மை
  மன அழுத்தம்
  யோ-யோ டயட்
  சிக்கல்கள்
  டைப் 2 டயாபெட்டீஸ்
  இதய நோய்கள்
  புற்றுநோய்கள் (கருப்பை, மார்பகம், கருப்பை வாய், பெருங்குடல், மலக்குடல், கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகம், புரோஸ்டேட் போன்ற பிரச்சினைகளை உடல் பருமன் உண்டாக்குகிறது.
  அதிக கொலஸ்ட்ரால்
  பித்தப்பை நோய்கள்
  பக்கவாதம்
  கருவுறுதல் பிரச்சனைகள் மற்றும் பாலியல் பிரச்சனைகள்
  சீரண பிரச்சனைகள்.
  இதைத் தவிர உடல் பருமனால் மனச்சோர்வு, சமூக தனிமை, இயலாமை, குறைந்த வேலை, அவமானம் போன்றவை அவர்களை பாதிக்கிறது.

  MOST READ: வாட்டர் பாட்டிலை சூரிய ஒளியில் வைத்து குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?


 • கண்டறிதல்

  உடல் நல பரிசோதனைகள்
  பொது பரிசோதனைகள்
  பி. எம். ஜ கணக்கீடு
  இடுப்பு சுற்றளவு, தோல் தடிமன், இடுப்பு ஒப்பீடு போன்றவை ஏற்படுதல்
  இரத்த பரிசோதனைகள்
  அல்ட்ரா சவுண்ட்
  கம்பியூட்டர் டோமோகிராபி
  எம்ஆர்ஐ ஸ்கேன்


 • சிகிச்சைகள்

  உடல் பருமனை குறைத்து ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதாகும்.
  உணவு மாற்றம்

  முதலில் உடல் பருமன் உடையவர்கள் உணவு மாற்றம் செய்ய வேண்டும். கலோரிகளை குறைத்து ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள், கார்போஹைட்ரேட் தானியங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதிக கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உணவுகள் வேண்டாம்.


 • உடற்பயிற்சி

  உடற்பயிற்சி செய்வது உங்கள் உடல் எடையை குறைக்க பயன்படும். 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்து தேவையற்ற கலோரிகளை கரைக்க முற்படலாம். மாடிப்படிகளில் ஏறிச் செல்லுதல், நடத்தல், பார்க்கில் உலா போன்ற சின்ன சின்ன உடற்பயிற்சிகளை நீங்கள் மேற்கொண்டு வரலாம்.


 • நடத்தை மாற்றம்

  வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டு வரலாம். வாழ்க்கை முறை தெரபி மூலம் சில பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள முற்படலாம். கவுன்சிலிங் போன்றவற்றில் ஈடுபடுங்கள்.


 • மருந்துகள்

  மேற்கண்ட வழிமுறைகள் பலனளிக்கவில்லை என்றால் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். உடல் எடையை குறைக்க மருத்துவர்களிடம் அணுகுங்கள். அவர் கொடுக்கும் மருந்துகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.


 • அறுவை சிகிச்சை

  அதிகப்படியான உடல் எடை யால் கஷ்டப்படுபவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முற்படுகின்றனர். அறுவை சிகிச்சையின் மூலம் உங்கள் பசியை குறைத்து, உணவு மற்றும் கலோரிகள் அதிகம் எடுப்பது குறைக்கப்படுகிறது. இதில் இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை, இரைப்பையை கட்டுப்படுத்துதல், டூடெனனல் சுவிட்சுடன் பிலியோபன்கிரேடிக் டைவர்ஷன் மற்றும் இரைப்பை ஸ்லீவ் ஆகியவை அடங்கும்.

  MOST READ: இன்றைய யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?...இத படிங்க... தெரிஞ்சிக்கங்க...


 • முடிவு

  வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களை மாற்றுங்கள், தினசரி 20-30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதிக கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிருங்கள். இதை செய்து வந்தால் உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழலாம்.
உடல் பருமனா இருக்கீங்களா அப்போ அதுக்கு இதெல்லாம் தான் காரணமாம்

உடல் பருமன் என்பது அதிகப்படியான கொழுப்பால் உண்டாகிறது. இந்தியாவைப் பொறுத்த வரை 5% மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படி உடல் பருமன் அதிகரிப்பது நம்முடைய அழகை கெடுப்பதோடு நிறைய நோய்களையும் உடல் உபாதைகளையும் அழைத்து வருகிறது என்பது தான் உண்மை.

BMI =kg/m2. இந்த BMI அளவைக் கொண்டு நீங்கள் பருமனாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம்.

   
 
ஆரோக்கியம்