Back
Home » ஆரோக்கியம்
அட்ரீனல் பற்றாக்குறை நோய் எதனால் வருகிறது?... உங்களுக்கு வருவதற்கான அறிகுறிகள் என்னென்ன?
Boldsky | 18th Sep, 2019 02:57 PM
 • ஹார்மோன் பாதிப்பு

  அட்ரீனல் கோர்டெக்ஸில் ஏற்படும் சேதம் காரணமாக நமது உடலில் உற்பத்தியாகும் கார்டிசோல் மற்றும் ஆல்டோஸ்டிரான் உற்பத்தி தடைபடுகிறது. கார்டிசோல் ஹார்மோன் நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த ஆல்டோஸ்டிரான் ஹார்மோன் சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

  MOST READ: வாட்டர் பாட்டிலை சூரிய ஒளியில் வைத்து குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?


 • அடிசன் நோய்

  இந்த அடிசன் நோய் எந்த வயதினருக்கு வேண்டும் என்றாலும் ஏற்படலாம். இருபாலரையும் சமஅளவு பாதிக்க கூடியது. இதற்கு போதிய சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கே உலை வைத்து விடும். இந்த நோய்க்கு அடிசன் என்று பெயர் வரக் காரணம் பிரிட்டிஷ் மருத்துவர் தாமஸ் அடிசன் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. 1855 லியே இந்த நோயின் நிலையை ஆன் தி கான்ஸ்டிடியூஷனல் அண்ட் லோக்கல் எஃபெக்ட்ஸ் ஆஃப் டிசைஸ் ஆஃப் சுப்ரரெனல் காப்ஸ்யூல்கள் என்று விவரித்தார்.


 • அறிகுறிகள்

  இந்த நோய் மெது மெதுவாகத் தான் தன் அறிகுறிகளை காட்ட தொடங்கும். இரண்டு முதல் மூன்று மாதங்களில் இதன் அறிகுறிகள் தெரியும்.
  குமட்டல்
  அதிக சோர்வு
  இரத்த சர்க்கரை குறைவு
  எடை இழப்பு மற்றும் பசியின்மை குறைதல்
  ஹைபர் பிக்மெண்டேஷன் (சரும நிறம் கருப்பாகுதல்)
  குறைந்த இரத்த அழுத்தம்
  மயக்கம்
  உப்பின் மீது விருப்பம்
  தசை மற்றும் மூட்டு வலிகள்
  வயிற்று போக்கு
  வாந்தி
  வயிற்று வலி
  மனச்சோர்வு அல்லது நடத்தையில் மாற்றம்
  எரிச்சல்
  பெண்களுக்கு முடி உதிர்தல், பாலியல் விருப்பமின்மை ஏற்படுத்தும்


 • நரம்பியல் மன நல அறிகுறிகள்

  இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் மனக்கிளர்ச்சி, மாய தோற்றம், கற்பனை, மயக்கம் ஏற்படும்.
  நிலைமை மோசமானால் கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றும்
  அதிக காய்ச்சல்
  குழப்பம்
  பயம்
  அமைதியின்மை
  நினைவிழப்பு ஏற்படும்.
  திடீரென முதுகு, வயிறு மற்றும் கால்களில் வலி ஏற்படும்.
  காரணங்கள்
  அட்ரீனல் சுரப்பியில் ஏற்படும் பாதிப்பால் ஹார்மோன் களின் உற்பத்தி பற்றாக்குறை ஏற்படுகிறது.
  இதில் இரண்டு வகைகள் உள்ளன

  MOST READ: இன்றைய யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?...இத படிங்க... தெரிஞ்சிக்கங்க...


 • முதன்மை அட்ரீனல் பற்றாக்குறை

  நமது உடலில் உள்ள நோயெதிப்பு மண்டலம் அட்ரீனல் சுரப்பியை தாக்குவது முதன்மை அட்ரீனல் பற்றாக்குறை என்று அழைக்கப்படுகிறது. குளுக்கோகார்ட்டிகாய்டுகள், நோய்த்தொற்றுகள், புற்றுநோய் மற்றும் அசாதாரண வளர்ச்சி (கட்டிகள்) மற்றும் இரத்தத்தில் உறைதலைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் சில இரத்த அடர்த்தி குறைப்பு மருந்துகள் போன்றவை இதை உண்டாக்கலாம்.


 • இரண்டாம் நிலை அட்ரீனல் பற்றாக்குறை

  பிட்யூட்டரி சுரப்பி தேவையான அளவு அட்ரினோகார்டிகோட்ரோபிக் ஹார்மோனை (ACTH) உற்பத்தி செய்யத் தவறும் போது இது நிகழ்கிறது. இந்த இரண்டு நிலை அறிகுறிகளும் சமமாக இருக்கின்றன. மருந்துகள், கட்டிகள், மரபணு மற்றும் அதிர்ச்சிகரமான மூளைக் காயம் ஆகியவற்றால் இரண்டாம் நிலை அட்ரீனல் பற்றாக்குறை உருவாகலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


 • ஆபத்தான காரணிகள்

  புற்றுநோய்
  ஆட்டோ இம்பினியூ நோய்கள்
  டைப் 1 டயாபெட்டீஸ்
  காசநோய் போன்ற நாள்பட்ட நோய்கள்
  அட்ரீனல் சுரப்பியில் செய்யப்படும் அறுவை சிகிச்சை
  இரத்த அடர்த்தி குறைப்பு மருந்துகள்
  கண்டறிதல்
  நோயைக் கண்டறிய கீழ்க்கண்ட சோதனைகள் செய்யப்படுகிறது.
  ACTH தூண்டுதல் சோதனை
  இரத்த பரிசோதனை
  இன்சுலின் தூண்டப்பட்ட ஹைபர்கிளைசிமியா சோதனை
  ஸ்கேன் சோதனைகள்

  MOST READ: புண்ணியம் தரும் புரட்டாசி சனி - பெருமாளுக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்


 • சிகிச்சைகள்

  அட்ரீனல் சுரப்பியை ஒழுங்குபடுத்துவதற்கான மருந்துகள் வழங்கப்படலாம்
  குளுக்கோகார்ட்டிகாய்டுகள் போன்ற அட்ரீனல் சுரப்பி வீக்கத்தை குறைக்க மருந்துகள் வழங்கப்படும்.இதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

  ஹார்மோன் மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் ஸ்டீராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை சமநிலைப்படுத்தலாம். யோகா மற்றும் தியானம் போன்ற சிகிச்சைகள் உதவியாக இருக்கும். இதன் மூலம் உங்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.
  உணவில் தேவையான அளவு உப்பு (சோடியம்) சேர்த்துக் கொள்ளவும். இது உங்களுக்கு நன்மை அளிக்கும்.
அட்ரீனல் பற்றாக்குறையை பொதுவாக அடிசன் என்று அழைக்கிறார்கள். இது ஒரு அரிய வகை நோயாகும். நமது உடலில் உள்ள ஹார்மோன்கள் தேவையான அளவு உற்பத்தி ஆகாத போது இது உருவாகிறது.

சிறுநீரகத்தின் மேல் அமைந்துள்ள அட்ரீனல் சுரப்பிகள் சரியாக வேலை செய்யாத போது இந்த குறைபாடு உண்டாகிறது.

   
 
ஆரோக்கியம்