Back
Home » ஆரோக்கியம்
ஏழே நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இத செய்யுங்க...
Boldsky | 19th Sep, 2019 10:18 AM
 • தொப்பை வருவதற்கான காரணங்கள்

  தொப்பை ஒருவருக்கு பல்வேறு காரணிகளால் வரலாம். அதில் சில வகை காரணிகள் தான் அடிவயிற்றைச் சுற்றி கொழுப்புக்கள் தேங்க காரணங்களாகும். அவையாவன:

  * மோசமான டயட்

  * மோசமான வளர்சிதை மாற்றம்

  * மன அழுத்தம்

  * தவறான நிலை

  * உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு இல்லாமை

  இவைகளே உங்களுக்கு தொப்பை வர முக்கிய காரணங்களாகும். எனவே நீங்கள் தொப்பையைக் குறைக்க வேண்டுமானால், மேலே கொடுக்கப்பட்டுள்ள காரணிகளிலும் உடனே மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

  இப்போது ஏழு நாட்களில் எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் எளிமையாக தொப்பையைக் குறைக்கும் சில வழிகளைக் காண்போம்.


 • மனநிலையை மாற்றவும்

  மனநிலை தான் ஒட்டுமொத்த உடலையும் இயக்குகிறது. மனம் நடந்து கொள்ளும் விதம் ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும். சிலசமயங்களில் நம்மால் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு, டயட்டையும் பின்பற்றுவது என்பது கடினமாக இருக்கும். ஆனால் சிறப்பான பலனைப் பெற, நம் மனம் நினைத்தால், நிச்சயம் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக முடிக்கலாம்.

  எனவே உங்கள் குறிக்கோள் தொப்பையைக் குறைப்பது என்பதால், முதலில் மனதை அமைதிப்படுத்தி, நேர்மறையாக சிந்திக்க ஆரம்பியுங்கள். தொப்பையைக் குறைக்க நாம் செய்யும் செயல்களால் நிச்சயம் தொப்பை குறையும் என முதலில் நம்பிக்கை வையுங்கள். இதனால் ஒட்டுமொத்த உடலும் உங்கள் எண்ணத்தைப் போன்றே செயல்பட ஆரம்பிக்கும்.

  ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா? அப்ப கண்டிப்பா இத படிங்க...


 • உணவு மிகவும் முக்கியம்

  ஒரே வாரத்தில் தொப்பையைக் குறைக்க என்ன சாப்பிட வேண்டும்? உணவுகளின் மூலம் ஏழு நாட்களில் எப்படி தொப்பையைக் குறைப்பது என தெரியுமா? அது வேறொன்றும் இல்லை, நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலே, உடலின் மெட்டபாலிசம் சிறப்பாக செயல்படும். நார்ச்சத்து உணவுகள் அதிகப்படியான நீர்ச்சத்தை உறிஞ்சும் மற்றும் பசியுணர்வைக் கட்டுப்படுத்தும். இதனால் இனிப்புக்கள் அல்லது வறுத்த உணவுகளின் மீது நாட்டம் குறைய ஆரம்பித்து, உடலில் கொழுப்புக்களின் தேக்கமும் குறையும்.

  எனவே தொப்பையைக் குறைக்க மேற்கொள்ளும் நார்ச்சத்துள்ள டயட்டில் பழங்கள் மற்றும் சாலட் அதிகளவில் இருக்க வேண்டும். மேலும் அதிகளவு கார்போஹைட்ரேட்டைத் தவிர்த்து, முழு தானிய உணவுகள் மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் சரியான டயட்டுடன், உடற்பயிற்சியையும் மேற்கொண்டால், ஏழு நாட்களில் தொப்பையைக் கட்டாயம் குறைத்துவிடலாம்.


 • நீர் பருகவும்

  உடலின் மெட்டபாலிசத்தை சீராக்க தண்ணீர் மிகவும் முக்கியமானது. உடலை நீர்ச்சத்துடன் வைத்துக் கொண்டால், டாக்ஸின்கள் மற்றும் இதர தீங்கு விளைவிக்கும் நச்சுக்களும் முழுமையாக வெளியேற்றப்படுவதோடு, நீர்த்தேக்கமும் தடுக்கப்படும். எனவே தினமும் குறைந்தது 5-7 லிட்டர் தண்ணீரைப் பருகுங்கள். இதனால் உங்கள் நோக்கம் விரைவில் நிறைவேறும்.

  முதுகு வலி ரொம்ப அதிகமா இருக்கா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...


 • எலுமிச்சை மற்றும் சுரைக்காய் ஜூஸ்

  எலுமிச்சை மற்றும் சுரைக்காய் ஜூஸ், ஏழு நாட்களில் தொப்பையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். சுரைக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு மற்றும் அதில் உள்ள வைட்டமின் சி, ரிபோஃப்ளேவின், டயட்டரி நார்ச்சத்துக்கள் மற்றும் இதர ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள், உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். எனவே சுரைக்காய் ஜூஸில் எலுமிச்சை சாறு சேர்த்து தினமும் ஒரு டம்ளர் குடியுங்கள்.


 • கொழுப்பைக் கரைக்கும் மசாஜ் எண்ணெய்

  கொழுப்பைக் கரைக்கும் மசாஜ் எண்ணெய் கொண்டு வயிற்றுப் பகுதியை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்தால் ஏழு நாட்களில் தொப்பையைக் குறைக்கலாம். அதற்கு 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயுடன், 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெய்களை சூடேற்றி, வயிற்றுப் பகுதியில் தடவி, சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் கொழுப்புச் செல்கள் கரைந்து, தட்டையான வயிற்றைப் பெறலாம்.

  வாரம் 1 முறை 'நீர் விரதம்' இருப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?


 • போதுமான தூக்கம்

  ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் தூக்கம் மிகவும் முக்கியமானது. நாள் முழுவதும் அயராது உழைத்த பின், 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியம். எப்போது ஒருவர் போதுமான தூக்கத்தை பெறாமல் இருக்கிறாரோ, அப்போது உடலில் ஹார்மோன்களின் செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டு, நாம் நினைத்திராத பல தாக்கத்தை உடலில் ஏற்படுத்தும். பல்வேறு ஆராய்ச்சியாளர்களும், ஒருவர் போதுமான தூக்கத்தைப் பெறாவிட்டால் உடல் பருமனால் அவஸ்தைப்படக்கூடும் என்று கூறுகின்றனர். எனவே உங்கள் எடையைக் குறைப்பதில் தூக்கத்திற்கும் முக்கிய பங்கு உண்டு என்பதை மறவாதீர்கள்.


 • ஆரோக்கியமான உணவு

  உணவு உண்ணாமல் இருந்தால் தொப்பைக் குறையும் என்பது வெறும் கட்டுக்கதை. ஒருவர் உணவை உண்ணாமல் ஏழு நாட்களும் இருந்தால், தொப்பை குறைவதற்கு பதிலாக உடலுக்கு ஆற்றல் கிடைப்பதற்காக தசைத் திசுக்கள் உடைத்தெறியப்படும். எனவே பெண்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 1500 கலோரிகளையும், ஆண்கள் ஒரு நாளைக்கு 1700 கலோரிகளையும் எடுக்க வேண்டியது அவசியம்.

  உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா? அப்ப டெய்லி இந்த யோகா செய்யுங்க...


 • சர்க்கரை உணவுகள்

  சர்க்கரை உணவுகள் தான் உங்கள் தொப்பைக்கு முக்கிய காரணம். ஒருவரது டயட்டில் சர்க்கரை அதிகமாக இருந்தால், உடலில் இன்சுலின் அளவு அதிகரிப்பதோடு, அடிக்கடி பசியுணர்வும் ஏற்படும். எனவே ஏழு நாட்களில் தொப்பையைக் குறைக்க நினைத்தால், சர்க்கரை உணவை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.


 • ப்ளான்க் - சிறப்பான உடற்பயிற்சி

  தொப்பையை ஏழு நாட்களில் குறைப்பதற்கு முயற்சிக்கும் போது, கடுமையான உடற்பயிற்சிகளை செய்வதற்கு நேரம் இல்லாவிட்டாலும், ஒரு உடற்பயிற்சியையாவது மேற்கொள்ளுங்கள். அதுவும் ப்ளான்க் செய்வது நல்லது. அதற்கு படத்தில் காட்டப்பட்டவாறு குப்புறப் படுத்து, முழங்கைகளை தோள்பட்டைக்கு நேராக வைத்து, உடலை மேலே தூக்க வேண்டும். இதனால் அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரையும். இப்படி ஒரு முறைக்கு 1 நிமிடம் என மூன்று முறை செய்ய வேண்டும்.
ஏழு நாட்களில் இயற்கையாக உடல் எடையைக் குறைப்பது என்பது சாத்தியமா? நிச்சயம் சாத்தியம். உடலிலேயே வயிற்றைச் சுற்றியுள்ள பகுதியில் தான் கொழுப்புக்கள் எளிதில் தேங்கும். இப்பகுதியில் தேங்கும் கொழுப்புக்களை குறுகிய காலத்தில் குறைப்பது என்பது சற்று கடினம் தான்.

தொப்பையை உண்டாக்கும் கொழுப்புக்கள் பொதுவாக அதிகளவு கொழுப்புள்ள உணவுகளை உண்பதால் தான் வருகிறதே தவிர, உடற்பயிற்சியினால் அல்ல. சில வகை கொழுப்புக்கள் உடலுக்கு அத்தியாவசியமானது. அதேப் போல் தான் கொழுப்புக்களைக் கரைப்பதற்கு, முக்கியமாக அடிவயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க சில வகை உடற்பயிற்சிகளும் முக்கியமானது.

உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக நுண்குழலழற்சி பற்றி கேள்விப்பட்டதுண்டா?

இருப்பினும் தற்போது பலருக்கு உடற்பயிற்சி செய்வதற்கு கூட நேரமில்லை. அந்த அளவில் மிகவும் பிஸியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பழக்கம் மற்றும் சில செயல்களை தவறாமல் பின்பற்றி வந்தால், ஒரே வாரத்தில் தொப்பையைக் குறைக்கலாம். சரி, இப்போது ஏழு நாட்களில் தொப்பையைக் குறைக்க பின்பற்ற வேண்டியவைகளைக் காண்போமா!

   
 
ஆரோக்கியம்